சுயநலம்
உதவி செய்வதே கடமையென்பான்
உண்மையில் யாருக்கும் உதவமாட்டான்
அதர்மம் செய்வது பாவமென்பான்– ஆனால்
அதர்ம வழியில் சென்றிடுவான்!
தாய் தந்தையே தன் கண் என்பான்
தாய் என்றே கருத்திற் கொள்ளான்
அன்பே வாழ்வின் உயர்வென்பான்
அன்பின் இலக்கணமே அறிந்திடான்!
பிறரில் குறைகாண்பது தவறென்பான்– ஆனால்
பிறரில் குறையை மட்டுமே அவன் காண்பான்
வாய்மை சொல்வதே உயர்வென்பான்
வாய் திறந்து அதைச் சொல்லமாட்டான்!
உத்தமனாய் வாழ்வதே உயர்வென்பான்
உலகில் அதமனாய் வாழ்ந்திடுவான்
கள்ளும் களவும் இழிவென்பான்
கருத்தில் இவை இல்லாதிருந்திடான்!
சிவராசா ஓசாநிதி