தூரிகை
காரிகை ஒருத்தி
கடைவிழி காட்டிக்
காதலைச் சொன்னாள்!
பேரிகை ஒலியெனப்
பெரிதாய் மனத்துள்
பூகம்பம் கிளம்பிற்று !!
தூரிகை கொண்டு
அவளெழில் செதுக்கக்
கோரியது காதலுள்ளம் !
காரிகை அவளின்
களைமுகம் நினைந்து
கிறுக்கலைத் தொடங்கினேன்!
பேரிகை முழக்கம்
பூங்கொத்தாய் மலர்ந்திட
பாவையழகு அசைபோட்டேன்!!
தூரிகை எடுத்துத்
துளிர்முகம் வடிக்க
தூரத்து நிலவானாளவள் !!!
காரிகை அவளின்
களங்கமற்ற சிரிப்பு
கவனமெங்கும் நிறைத்திட!
பேரிகை இறைச்சலின்றி
பெண்ணவள் நளினத்தைப்
பேரழகாய் வடித்தெடுத்தேன்!!
தூரிகை துளிர்த்தடங்கியது
தன் திறனில்லையது
தாரகையெழிலென்று தானுணர்ந்ததனால்!!!
-வெ. மதுசூதனன்