பொருளுடன் திருக்குறள் – அந்தாதி வடிவில்
குறள் |
பொருள் |
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை. (861) |
நம்மிலும் வலிய பகைவரை எதிர்ப்பதைத் தவிர்த்து; நம்மிலும் மெலியரை உடனே எதிர்த்துச் செல்க. |
பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண். (146) |
பிறர் மனை நோக்குபவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகாது. |
கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு (571) |
அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் கொண்டவர்கள் இருப்பதால்தான், இந்த உலகம் பெருமை அடைகிறது. |
உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங் கூம்பலு மில்ல தறிவு (425) |
உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி இன்பம் துன்பம் இரண்டையும் சமமாகக் கருதுவதே அறிவுடைமையாகும். |
அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு (684) |
தூது செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும். |
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல் (518) |
ஒரு செயலிற்கு ஏற்றவனா என அறிந்த பிறகு, அவனை அச்செயலுக்கு உரியவனாகச் செய்தல் வேண்டும். |
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி (40) |
ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே. |
பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர் கழிநல் குரவே தலை (657) |
பழியைச் செய்து – அடைந்த செல்வத்தை விட,பெரியோர் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது. |
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை (964) |
மக்கள் உயர்ந்த நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலையிலிருந்து விழுந்து மயிரினைப் போன்றவர் ஆவர். |
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும் (663) |
ஒரு செயலை முடிவில் வெளிப்படுத்துவதே ஆளுமை, இடையிலேயே வெளிப்படுத்தினால் அது நீங்காத துன்பத்தைத் தரும். |
தொகுப்பு – வெ. சச்சிதானந்தன்.
அருமை. படித்துக் களித்தேன்.