\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

பொருளுடன் திருக்குறள் – அந்தாதி வடிவில்

குறள்

பொருள்

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா

மெலியார்மேல் மேக பகை. (861)

நம்மிலும் வலிய பகைவரை எதிர்ப்பதைத் தவிர்த்து; நம்மிலும் மெலியரை உடனே எதிர்த்துச் செல்க.

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண். (146)

பிறர் மனை நோக்குபவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகாது.

கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை

உண்மையான் உண்டிவ் வுலகு (571)

அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் கொண்டவர்கள் இருப்பதால்தான், இந்த உலகம் பெருமை அடைகிறது.

உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்

கூம்பலு மில்ல தறிவு (425)

உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி இன்பம் துன்பம் இரண்டையும் சமமாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.

அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்

செறிவுடையான் செல்க வினைக்கு (684)

தூது செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும்.

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை

அதற்குரிய னாகச் செயல் (518)

ஒரு செயலிற்கு ஏற்றவனா என அறிந்த பிறகு, அவனை அச்செயலுக்கு உரியவனாகச் செய்தல் வேண்டும்.

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி (40)

ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.

பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்

கழிநல் குரவே தலை (657)

பழியைச் செய்து – அடைந்த செல்வத்தை விட,பெரியோர் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது.

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்

நிலையின் இழிந்தக் கடை (964)

மக்கள் உயர்ந்த நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலையிலிருந்து விழுந்து மயிரினைப் போன்றவர் ஆவர்.

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்

எற்றா விழுமந் தரும் (663)

ஒரு செயலை முடிவில் வெளிப்படுத்துவதே ஆளுமை, இடையிலேயே வெளிப்படுத்தினால் அது நீங்காத துன்பத்தைத் தரும்.

தொகுப்பு – வெ. சச்சிதானந்தன்.

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Bala Swaminathan says:

    அருமை. படித்துக் களித்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad