மினசோட்டாவில் 74வது இந்திய சுதந்திர தின விழா
இந்தியாவின் 74வது சுதந்திரத் தினத்தை மினசோட்டாவில் உள்ள ‘இந்தியன் அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா’ (IAM) அமைப்பினர், செயின்ட் பாலில் உள்ள மாநில தலைமைக் கட்டிட மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி நடத்தினர். இப்பொழுது உள்ள சூழ்நிலையில் இந்த வருடம் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. கொடியேற்றம் மட்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற்றது
அமெரிக்க, இந்தியக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு இருநாட்டு தேசிய கீதங்களும் பாடப்பட்டன. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக மினசோட்டாவின் மாநில நகரசபை நிர்வாகிகள் மற்றும் பலர் பங்கேற்றனர். மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸ் (Tim Walz) ஆகஸ்ட் 15ம் தேதியை இந்திய சுதந்திரத் தினமாக அறிவித்து சான்றிதழ் வழங்கினார்.
கல்வி, கலாச்சாரத் தகுதி அடிப்படையில், மூன்று மாணவ / மாணவிகளுக்குக் கேடயங்களை வழங்கிச் சிறப்பித்தனர் IAM அமைப்பினர். அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்களுக்காக:
தொகுப்பு, படம் – இராஜேஷ் கோவிந்தராஜன்