விவசாயி
ஏர்பூட்டி வயலுழுதான் ஏழைமகன் விவசாயி
முத்துமணி வியர்வை முத்தாய் நிலத்தில் சிந்த
அல்லும் பகலும் அயராது பாடுபட்டு
நிலத்தை பண்படுத்தி விதைத்தான் நெல்லதனை
விதைத்த நெல் மழையில் மூழ்க –அவன்
விழியில் கண்ணீர் கடலாய் பெருகியது
கண்ணீர்க் கடலைத் துடைக்க கடவுள் கருணை கொண்டார்
நின்றது மழை! வழிந்தோடியது வெள்ளம்!
செந்நெல் செழித்தது – காற்றில் கதிர் ஓசை ஒலித்தது
விவசாயி நெஞ்சில் ஆனந்த மழை பொழிந்தது
கால நேரம் பார்த்து கதிரை அறுவடை செய்து
காற்றில் அதைத் தூற்றிச் சாக்கிற் கட்டி
வீட்டிற்குக் கொண்டு வந்தான்
விஞ்சை மகன் விவசாயி வயிராற உணவுண்ண
வழிசமைத்தவன் அவன் மனித இனம்போற்றும்
கடவுளும் அவனாவான்!
–சிவராசா ஓசாநிதி-