ஓக் மரத்தை அடையாளம் காண்பது எப்படி?
வட அமெரிக்காவின், பெரிய மரங்களில் ஒன்று ஓக் மரம். இது வருடம் முழுதும் தனியாக அடையாளம் காணக்கூடியது. ஓக் மரம், கிளைகள் பருத்தும், பரந்தும் வளரும் தன்மை மிக்கது. அதாவது தக்க காலநிலை சூழலில் ஓங்கி உயரமாகவும், அதே சமயம் உச்சியில் பல பருத்த கிளைகளையும் கொண்டு காணப்படும்.
இதன் கிளைகள் பொதுவாக நேரே வளராமல் பல அரும்புகளையும் உருவாக்கியவாறுள்ளது. இரண்டு கிளைகள் ஒரு போதும் பக்கத்துப் பக்கம் இரணை அரும்புகளிலிருந்து வளராது. மேலும் ஓக் மரப்பட்டை சிறிதாக இருக்கும் போது வடுக்கள் இல்லாமல் இருப்பினும், பாரிய மரமாகும் போது வெடித்த வடுக்கள் போன்ற கரடுமுரடான தன்மையைக் கொண்டிருக்கும்.
ஓக்கு மர இலைகளும் தனித்துவமான அமைப்பைக் கொண்டவை. இலையானது பல மழுங்கிய சோணைகளைக் (lobes) கொண்டிருக்கும். இந்த இலைகள் இலையுதிர்காலத்தில் நிலத்தில் விழுந்தாலும், மற்ற மர இலைகள் போன்று இலகுவாக உதிர்வதில்லை. சில ஓக் மரவகைகள் இலைகளை முழுவதுமாக எப்போதும் இழப்பதும் இல்லை.
ஓக் மரவிதைகள் ஏகோன் (acorn) என்று அழைக்கப்படும். இவை அரச கிரீடம் போன்று தனித்துவமான மேல் பாகத்தையும் அதே சமயம் கீழ் பகுதி, தென்னை மரக் குரும்பட்டி போன்ற மெழுகு மாதிரியான இளம் பச்சை நிறத்தில் துவங்கி பின்னர் செம்மஞ்சள், மண்ணிறமாக மாறி உதிரும்.