மேப்பிள் மரத்தை அடையாளம் காண்பது எப்படி?
வட அமெரிக்கா முழுதும் குளிர் பிரதேசங்களில் வளரும் மரங்களிலொன்று மேப்பிள் மரம். குறிப்பாக மினசோட்டாவில் பல வகையான மேப்பிள் மரங்கள் இருப்பினும் இளவேனில் காலத்தில் இனிய பாகு தரும் சர்க்கரை மேப்பிள் (Sugar Maple) எமக்குப் பிடித்த மரம்.
இதன் கிளைகள் பொதுவாக இளம் மண்ணிறத்தில் தொடங்கி, வளர்ந்த பின்னர் கடும் மண்ணிறமாக மாறும்.
மேப்பிள் மர இலைகள், தனித்துவமான 5 சற்றுக் கூரான பிரிவுறும் சோணைகளைக் விசிறி போல் கொண்டவை. இது கனேடிய நாட்டின் தேசிய சின்னம். இந்த இலைகள் இலையுதிர்காலத்தில் மஞ்சள்,செம்மஞ்சள் தொடங்கி சிவப்பு வரை மாறக்கூடியவை. போதுவாக இவ்வகை மேப்பில் பிரகாச மஞ்சள் நிறத்தையே கொள்ளும்.
மேப்பிள் மரவிதைகள் இரணைவிதைகள் இரணைச் சிறகுகளைக் கொண்டு அமையும். இவை காற்றுடன் பறந்து சென்று தமது வாழும் விஸ்தரிப்பை அதிகரிக்க வல்லவை.
மினசோட்டா மாநிலமெங்கும் மேப்பிள் காணப்படுகினும் இவை இயற்கையில் இங்கு உதித்தவையல்ல. குளிர்மையான கால நிலை மாற்றங்கள் மேப்பிளை மினசோட்டாவில் குடியேற வைத்துள்ளது.