பொம்மைத் தொலைக்காட்சி
நவராத்திரிப் பண்டிகை வந்துவிட்டால் எங்கள் ஊர் மினியாபொலிஸ் மாநகரம் வண்ணம் பூசினாற்போல இருக்கும். இது தமிழ்ப் பெண்டிர் கொண்டாடும் பண்டிகை என்பதால், தமிழ்ப் பெண்கள் கலர் கலராகத் தமிழ் பாரம்பரியப் புடவை அணிந்து உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டிற்குச் சென்று அவர்கள் வைத்திருக்கும் கொலுவைப் பார்த்துவிட்டு, அங்கு ஓரிரு தேவி பாடல்களைப் பாடிக் கொண்டாடுவார்கள். ஒவ்வொருவர் வீட்டிலும் அவர்கள் இதற்காக செய்த சுண்டல் போன்ற தின்பண்டங்களும் வழங்கப்படும். அந்த நேரங்களில்,இவர்களின் கணவன்மார்கள் படும்பாட்டைச் சொல்ல வேண்டுமென்றால், இந்த கட்டுரையில் அடக்க முடியாது, அதனால் இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.
ஆனால், இது 2020 வருடம். எல்லாம் தலைகீழ். ஆனால் மினியாபொலிஸ் மாநகரத் தமிழ்ப் பெண்கள் எந்த சோதனையையும் எளிமையாகச் சந்திக்கக் கூடியவர்கள். கொரோனா கிருமிகள் பள்ளிக்கூடங்களையும் திரையரங்குகளையும் மூடி இருக்கமுடியும். ஆனால், நம் தமிழ்ப் பெண்களின் கற்பனையாற்றலுக்கும் படைப்பாற்றலுக்கும் குறைவே இல்லை. ஆயிரம் கொரோனா கிருமிகள் வந்தாலும் இவர்களை ஒன்றும் செய்யமுடியாது.
கணினி மற்றும் திறன்பேசி மூலமாக, ஸ்கைப் வழியாக வெர்ச்சுவலாக ஒருவர் வீட்டின் கொலுவை மற்றவர்கள் பார்த்து ரசித்தனர். பொம்மைகள் நேரடியாகக்காட்சி தராவிட்டாலும், தொலைவில் காட்சி தந்து, தனது அழகான அணி வகுப்பைக் காட்டியது. இதற்காக, பத்து தின நவராத்திரியில் ஒரு நாள் மட்டும் நேரம் ஒதுக்கி அந்த நேரத்தில் மற்றவர்கள் ஸ்கைப் வழியாக ஒன்று சேர்ந்து கொண்டாடினர். கடவுள் பாட்டுக்கள் பல பாடி பாரம்பரியக் கொண்டாடத்தை இவ்வருடமும் ஒரு குறையுமின்றி நடத்தினர். இவர்கள் காட்டும் ஊக்கமும், ஆற்றலும் திறமையும் பாராட்டுதலுக்குரியது.
காயத்ரி:
சௌம்யா:
சுஜாதா:
வித்யா:
-பிரபு