\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

உள்ளூர் வாராந்த மஞ்சரியான ‘சிட்டி பேஜஸ்’ நிரந்தர மூடுதல்

மினசோட்டா மாநிலத்தில் மாற்று ஊடகப்  (Alternate media) பத்திரிகையாக Citi pages கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வந்தது. இதன் தற்போதைய உரிமையாளரான, மினியாபொலிஸ் நகர ‘ஸ்டார் ட்ரிப்யூன்’ ( Star Tribune Media Co), . கடந்த புதன் கிழமை, அக்டோபர் 28, 2020 யன்று,  இந்தப் பத்திரிகையின் சகல் தொழிற்பாடுகளும் நிரந்திரமாக மூடப்படுவதாக  திடீரென அறிவித்தது. சிட்டி பேஜஸின்  கடைசி வெளியீடு அக்டோபர் 2020 கடைசி வாரமே.

இந்தப் பத்திரிகை வழக்கமான செய்தித்தாள்களுக்கு மாறாக  வாராந்தப் பத்திரிகையாக ஆகஸ்ட் 1979இல் ஆரம்பித்தது. அப்போது அதன் பெயர் ‘ஸ்வீட் பொடேடோ’‘(Sweet Potato)’ –  வத்தாளங்கிழங்கு என்று தமிழில் பொருள்படும். அன்று உள்ளூர் இசைக்குழுக்கள் பற்றிய செய்திகளை, விசிறிகளுக்கு, அவர்கள் விரும்பும் படைப்பாளிகளுக்காக வெளியிட்டு வந்தது.

டிசம்பர் 1981இல், ‘ஸ்வீட் பொடேடோ’,  ‘சிட்டி பேஜஸ்’ (City Pages) என்று மாறியது. அப்போதிருந்த இன்னொரு  மாற்றுக்கலாச்சாரப் பத்திரிகையான ‘டிவின் சிட்டிஸ் ரீடர்’ (Twin Cities Reader)  போட்டியாக உருவானதாகக் கருதப்பட்டது. இந்தப்  பத்திரிகை பிரதானமாக இரட்டை நகரக் கலாச்சார, மற்றும் உள்ளூர் அரசியல் விடயங்களை அட்டவணைப்படுத்தி சரித்திர ரீதியில் பேணியது எனலாம். அந்நாளில்  பத்திரிகை தாபகர்கள் டாம் பார்டல், கிறிஸ்டின் ஹென்னிங் ஆகியோரின் வணிக உத்தியாகக் கருதப்பட்டது.

1990 களில் ‘சிட்டி பேஜஸ்’ அதன் மினியாபொலிஸ் நகர போலீசாரின் அதிகாரக் கொடுமைகள் பற்றிய தொகுப்புகளுக்கு விருதுகள் வாங்கியது. அதனால் ‘மினியாபொலிஸ் நகர போலீசார் கூட்டுறவு அணி’ ஊழல்கள், இனவாதம் பற்றிக்குறிப்பிட்டு தம்மை அவமதித்ததாக இந்தப் பத்திரிகையை நீதி மன்றத்திற்குக் கொண்டு சென்றதும் இவ்விடம் குறிப்பிடத்தக்கது. 

இந்த வருடமும் போலீசாரின் கொடுமைகளால்  ஜார்ஜ் ஃபிளொயிட் படுகொலை , அதனால் ஏற்பட்ட மக்கள் விரக்திகள், உரிமை கோரிய மக்கள் போராட்டங்களை உள்ளுர் ஊடகம் என்ற ரீதியில்  நேரடியாக இப்பத்திரிகை வெளியிட்டு வந்தது.

 

2015 மே மாதம் ‘ஸ்டார் டிரிப்யூன்’ இந்தப் பத்திரிகையை வாங்கியது. இதற்கு முன்னர் ‘ஸ்டார் டிரிப்யூன்’ உள்ளூரில் ‘வைட்டா எம்.என்.’ (Vita.mn) என்ற இலவச வார மஞ்சரியை ‘சிட்டி பேஜஸ்’ உடன் போட்டி போட தயாரித்து, பின்பு அதைக் கைவிட்டு  ‘சிட்டி பேஜஸ்’ வாங்கியதும் இவ்விடம் குறிப்பிடத் தக்கது. பணமும் வசதியும் இருப்பதால் மட்டுமே வணிக நோக்கத்துடன் ஒரு சில எழுத்தாளர்களை வேலைக்கு அமர்த்தி, பல்லாண்டுகளாக உள்ளுர் வாசகர்களைக் கவர்ந்து வந்த  பத்திரிகையுடன் போட்டி போடலாம் என்று எண்ணியது தான் ‘Vita.mn; பத்திரிகையின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. 

உள்ளுர் அரசியல், நிகழ்வுகள் போன்றவற்றை மக்களுக்குப் பிடித்த வகையில் தருவது என்பது எளிதான விஷயமல்ல.. மக்களின் தேவைகளை, ரசனைகளைத் தெளிவாக அறிந்து குரல் கொடுப்பதிலிருந்து தொடங்கி எளிமையான, உள்ளூர் வழக்கு மொழியில் தருவது என பல பரிமாணங்களைக் கொண்டது.

கொரோனா தொற்று நோய்,  உள்ளூர் உணவகங்கள், மது அருந்தகங்கள், கச்சேரி, நாட்டிய, நாடக அரங்குகள், திரையரங்குகள் , நூதனசாலைகள் போன்றவை வாடிக்கையாளரன்றி பாதிக்கப்பட்டன. இவையே ‘சிட்டி பேஜஸ்’ பத்திரிகையின் பிரதான விளம்பரதாரர்கள்.

-யோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad