செல்வி விஜயாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்
வட அமெரிக்காவில், மினசோட்டா மாநிலத்தில் உள்ள மேபிள் குரோவ்லில் வசிக்கும் பாஸ்கர் மற்றும் பானு கோபாலனின் மகள் செல்வி விஜயாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஆகஸ்ட் 15ம் தேதி மினசோட்டாவில் மேபிள் குரோவ் நகரிலுள்ள ஹிந்து கோவிலில் நடைபெற்றது.அவரின் நடன ஆசிரியை திருமதி. சுஜாதா ஆகுறட்டி (Guru Smt.Sujatha Akurati) அவர்களிடம் கடந்த 12 வருடமாக நடனம் கற்று, இப்பொழுது அரங்கேற்றம் நடைபெற்றது. விழா நிகழ்ச்சியை பாஸ்கர், பானு கோபாலனின் குடும்பத்தினரும் மற்றும் அவரது நண்பர்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். கோவில் நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் வந்திருந்து இந்த அரங்கேற்ற நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.
அங்க முத்திரைகளின் நேர்த்தி, பாத அடிகளை எடுத்து வைத்த பாங்கு, நடனத்திற்கும் இசைக்கும் காட்டிய முகபாவம், தோற்றத்தை மெருகூட்டிய ஒப்பனை, நிறத்தை மேம்படுத்திய உடைகள், தாளம் பிசகாது ஒலித்த நட்டுவாங்கம், இசைப்பிரவாகம் என அத்தனை அம்சங்களும் இந்நிகழ்ச்சியில் சிறப்பாக வெளிப்பட்டன. பரத நாட்டிய அரங்கேற்றத்தின் வெற்றிக்குப் பின்னணியிலிருந்து இதனைச் சிறப்பித்தவர்கள்:
நடன ஆசிரியை திருமதி. சுஜாதா ஆகுறட்டி
நட்டுவாங்கம்ஸ்ரீலலிதா ஆகுறட்டி (Srilalitha Akurati)
ஒப்பனை ஸ்ரீகல்யாணிஆகுறட்டி(Srikalyani Akurati)
நிகழ்ச்சித் தொகுப்பாளர் அம்ரிதா பால் (Amrita Pal)
புகைப்படம் ராஜேஷ் கோவிந்தராஜ் (Rajesh Govindaraj)
வீடியோ ஒளிப் பதிவு மாடசாமி அய்யாசாமி (Madasamy Ayyachamy)
ஒலி கிரெக் கென்னடி (Greg Kennedy)
மேடை அலங்காரம் – கங்கா துரை (Genga Durai)
அரங்கேற்ற நிகழ்ச்சி எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில உங்களுக்காக: