\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

FaceBook H1B தேர்வுக்கு எதிராக வழக்கு

 

வியாழக்கிழமை December 3, 2020 நீதி துறை Department of Justice (DOJ)  Facebook  வேலையாட்களைத் தேர்வு செய்யும் விதம் பற்றிய விடயங்களுக்கு எதிரணி வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த சட்ட வழக்கு தொழிற் தேர்வானது அனுபவம் உள்ள அமெரிக்காவின் குடிமக்களைத் தேர்வு செய்யாமல் நிரந்தரமற்ற வீசா உள்ள வெளிநாட்டவரைத் தேர்ந்தெடுக்கிறது என்கிறது.

பொதுவாக அமெரிக்க கம்பனிகள் தமது தாபன வேலையாளர் தேவைகளுக்கு முதலில் அமெரிக்க குடிமக்களை வேலைவாய்ப்பு விளம்பரம் செய்தல் மூலம் அறிவிக்க வேண்டும் என்கிறது. இது அமெரிக்க நாட்டு மக்களின் தொழில் வாய்ப்புப் பேணும் சட்டக்கோட்பாடு. அமெரிக்காவில் தகுந்த வேலையாட்கள் இல்லாத பட்சத்தில் கம்பனிகள் வெளிநாட்டவரை வேலைக்குக் அமர்த்த முடியும். 

இந்த வரையறை பல் வேறுவகையிலும் காலாங்காலமாகப் பயன்படுத்தி வரப்படுகிறது. குறிப்பாக H-1B வீசா நாட்டில் 1990இல் அமுலுக்கு வந்ததது. இது அப்போது அமெரிக்காவில் தென்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, குறிப்பாக விசேட தொழிற்பயிற்சி உடையவர்களை வரவழைக்க உருவாக்கப்பட்டது.

இது ஒரு நல்ல அபிவிருத்தித் திட்டமாகக் கருதப்படினும் பல நடமுறையில் பல ஓட்டைகளும் இந்தச் சட்ட அமுலில் 1998இல் இருந்து காணப்பட்டது. குறிப்பாக அமெரிக்கத் தொழிநுட்பத் தொழிலாளரை, வெளிநாட்டவர் கொண்டு நிரப்புதல் நாட்டின் பொருளாதாரவியலில் தலையிடியாகியது. 

எனவே பல சமயங்களில் இந்த வெளிநாட்டவர் விசாக்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதும் படிப்படியாக அதிகரித்தும் காணப்படுகிறது. இந்த வழிமுறைத் துஷ்பிரயோகங்கள் இந்தத் தொழில்களை நாடி வரும் மக்கள் பொறுப்பு மாத்திரம் இல்லை. வர்த்தக இலாபத்திற்காக இப்பேர்பட்ட சூழல்களை ஏற்படுத்திக் கொள்ளும் பாரிய அமெரிக்கக் கம்பனிகளும் ஒரு காரணம்.

கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்கக் கம்பனிகள் சம்பளம் கொடுப்பதில் உள்ளூர் வேலையாட்கள் செலவு அதிகம் என்பதால் வெளிநாட்டவரை ஒப்பீட்டளவில் குறைந்த சம்பளத்தில் கொண்டு வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இது குறிப்பாக தொழிநுட்பக் கம்பனிகளில் கண்டும் காணாக மாதிரி தொடர்ந்தும் நடந்து வருகிறது என்பது நாட்டின் சில பொருளாதார, சனசமூக அவதானிகள், மற்றும் அமெரிக்க நீதித் துறையினரும் நிலைப்பாடு.

அடுத்தடுத்த பாரிய பொருளாதாரத் தாழ்வுகளினால் அமெரிக்காவில் சாதரண மக்கள் பொருளாதார சூழ்நிலைகள் வெகுவாக மாற்றமடைந்துள்ளது. எனவே ஒருகாலத்தில் உற்பத்தி, தொழிற்சாலை, வேலை என்பன பல நடுத்தர வேலையாட்களைப் பாதித்து. இன்றைய தொழிநுட்ப வேலைகளிலும் இந்த நிலை தொடர்கிறது என்பது பல சாதாரண அமெரிக்கர் நிலைப்பாடு. எனவே அமெரிக்க தொழில் சார்ந்த குடிவரவு விசாக்கள் பலவும் மீழவும் எடுத்துப்  பார்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாகப் பெரும்பாலான இந்திய மக்கள் வரும் H1B வீசா. 

அமெரிக்க மக்கள் வேலை தேடும் அதே சமயம், குறிப்பிட்ட பயிற்சியுடைய தொழிலாளர் பற்றாக் குறை பற்றி அமெரிக்கத் தொழிநுட்பக் கம்பனிகள் அமெரிக்க அரசுடன் தமது வியாபாரம் தொடர்பாக வாதாடி வருவதும் இவ்விடம் குறிப்பிடத் தக்கது. எனினும் இன்று நீதித் துறை விசாரணைகள் காரணமாக பாரிய தொழிநுட்ப வேலையாளரைக் கொண்ட Facebook கம்பனி சற்று சட்ட வழக்கு மூலமாக அதன் வேலையாட்கள் தேர்வு முறை பரிசீலனைக்கு உள்ளாகியுள்ளது.

மேலும் குறிப்பில் அமெரிக்க நீதி அமைச்சு உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு வைக்க முற்று முழுதாகவும் மறுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சராசரி சம்பளம் $156,000 உள்ள சுமார் 2,600 வேலை வாய்ப்புக்கள் உள்ளூர் மக்களைத் தாண்டி வெளிநாட்டு தொழிலாளர்களைக் குறிவைத்துள்ளது.

நீதி அமைச்சு விசாரணை

இந்தக் குற்றச்சாட்டு கடந்த January 1, 2018 இல் இருந்து September 18, 2019 வரை நடைபெற்று புலன்விசாரணைகள் அடிப்படையில் அமைந்துள்ளது.

மேற்குறிப்பிட்ட விசாரணைக் காலகட்டத்தின் போது Facebook தனது வேலையாட்கள் தேடுதலை நேரடியாகக் கம்பனி மின்வலயத்தில் வேலை தேவை வெளியிட்டு விளம்பரங்கள் மூலம் அறிவிக்கமால், வேலை விண்ணப்பதாரர்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பமாறு கூறியும், மேலும் தகுதி வாய்ந்த அமெரிக்க குடிமக்களை இந்த வேலைகளுக்கும் மறுத்துள்ளதாகவும் விசாரணை தெரிவிக்கிறது.

ஆயினும் வழக்கமாக Facebook மின்னவலயம் மூலம் விளம்பரம் தந்து விண்ணப்பதாரரை தேர்ந்தெடுக்கும் முறையே வழக்கமான விடயம் என்றும் இதில் இருந்து Facebook அகன்றுள்ளது என்றும் இந்த சட்ட வழக்குக் குறிப்பிடுகிறது.

இதன் காரணமாக நீதி அமைச்சு விசாரணையில் இருந்து,  இந்தக் காலகட்டத்தில் Facebook வேலைத் தேர்வுகள் 99.7% சதவீதமான வேலை வாய்ப்பு அதன் நிரந்தர வேலை வாய்ப்பு சான்றளிப்பு permanent labor certification வழியாக மாத்திரமே அமைந்தது என்று தெரிவிக்கிறது.

இதன் சில பின்னணி விடயங்கள்

1986 இல் அமெரிக்க காங்கிரஸ் குடிவரவு, குடியுரிமை சட்ட நடவடிக்கையின் the Immigration and Nationality Act (INA) மாற்றம் மூலம், வேலை சேர்ப்பதற்கு பாகுபாடு ஒருவரின் குடியுரமை நிலமை, எங்கிருந்து வந்தார்கள் என்பதை வைத்து வேலைக்கு அமர்த்துதல், வேலையிவ் இருந்து நீக்கம் செய்தல்,  பரிந்துரைத்தல், காசு வைத்து வேலையாள் சேர்ப்பு தவிர்க்கப் படவேண்டும் என்று பிரகடனமாக்கியது (U.S.C. § 1324b).

மேல் குறிப்பிட்ட சட்டத்தை ஒரு காரணியாக வைத்து அமெரிக்க நாட்டின் குடி வருவோர், வேலையாட்கள் அடிப்படை உரிமை தாபனம் இந்த சட்டவழக்கின் மூலம் Facebook சட்டத்திற்கு மாறான பாரபட்சமான தேர்வு செய்யும் கடைப்பிடிப்புக்களை உடன் நிறுத்தம் செய்ய கோரியுள்ளது.

அமெரிக்க பொருளாதார மாற்றங்கள்

ஒரு காலத்தில் அமெரிக்க மக்கள் பொருளாதாரம் மேம்பட்டு இருந்த போது, சிற்சில குடிவரவு, தொழில் தேர்வு விடயங்கள் பாரியதாகவும் இருக்கவில்லை. இதன் காரணம் போதிய அளவு வேலை வாய்ப்பு உள்ளூர் மக்களுக்கும், மேலும் வெளிநாட்டு மக்களுக்கும் இருந்து வந்தது. எனினும் அவ்வகையான சூழலில் அமெரிக்கா தற்போது இல்லை. எனவே பொதுவான மக்கள் அபிப்பிராயங்களும் தென்பாடுகளும் பொருளாதார ரீதியில் தம்மை முதல் பார்த்துக் கொள்வது முக்கியமாகிறது.

கல்வி பயில அமெரிக்க வந்து அதன் பின்னர் இவ்விடம் வரத்தகங்களை உண்டாக்குவோருக்கு இன்றும் வரவேற்பு உண்டு. ஆயினும் சிறப்புத் தொழிநுட்பம் சார்ந்த வேலைகளைத் தேடிவருவோர்க்கு பல நெருக்கடிகளை கடந்த 2008 பொருளாதார விழ்ச்சியின் பின்னர் படிப்படியாக அதிகரிக்கப் பட்டுள்ளதும் தற்போது அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அமெரிக்கா தொடர்ந்து பொருளாதார ரீதியில் வளர எமக்கு உலகமக்கள் வருகை தேவை. ஆயினும் அண்மைக்காலத்தில் Facebook போன்று மற்றய கம்பனிகளும் ஆதாயம் மாத்திரம் கருதி வெளிநாட்டவரை வரவேற்றால் இதற்கு எதிர்ப்புகள் தொடரும் என்பதும் இன்றய அமெரிக்க நிலைப்பாடு.

-ஊர்க்குருவி-

உச்சாந்துணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad