வெள்ளத்தால் ஆசியாவின் அபாயம் $8.5 டிரில்லியன்
சூழலியல் பேரிடர்களை இந்தியா, சீனா போன்ற பெரும் நாடுகளும் ஏனைய இதர நாடுகளும் ஆசியாவில் எதிர்நோக்குகின்றன. அதன் தாக்கத்தைக் குறைக்க பாரிய உள்நாட்டுக் கட்டமைப்பு முதலீடுகள் உடனே தேவைப்படுகின்றன.
வளரும் பூகோள இயற்கை அழிவுகள் தொடர்ந்து ஆசியப் பொருளாதாரங்களுக்கு அபாயத்தை உண்டு செய்தவாறே உள்ளன. World Research Institute (WRI) தரவு தகவல்கள் படி 2030 இல் உலகளாவிய பொருளாதார உற்பத்தியில் ஆற்று வெள்ளப்பெருக்கு காரணமாக உருவாக உள்ள சேதம் $17 trillion என்று அனுமானிக்கப்படுகிறது. அதில் பாதி பொருளாதார நஷ்டங்கள். ஆசியா குறிப்பாக இந்தியா, சீனா உட்பட வருடா வருடம் $8.5 trillion பொருளாதார உற்பத்தி நஷ்டங்களை எதிர்கொள்ள உள்ளன. இந்தியாவும், சீனாவும் அவற்றின் வெள்ளப்பெருக்கினால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளன. இதை தவிர்ப்பதற்கு உள்நாட்டுப் கட்டமைப்பு முதலீடுகள் அவசியம்.
உதாரணமாக இந்தியாவின் மும்பையை எடுத்துக் கொண்டால் 2020 ஆண்டில் கடந்த ஜூன் இல் இருந்து செப்டம்பர் வரை நான்கு மாதங்களில் பெருமழை வீழ்ச்சியை எதிர்கொண்டது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் விஷயமாக மாறிக்கொண்டிருக்கிறது இது.. இதன் போது முழங்கால் தொட்டு உடம்பின் அரை பாகம் வரை பல நூறு மில்லியன் மில்லி மீட்டர் மழை தினமும் பொழிந்தது.
இந்தியாவில் இன்றும் 19ஆம் றூற்றாண்டு பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட பாழடைந்த வெள்ள வடிகால் அமைப்புகள் பிரதானமாக உபயோகத்தில் உள்ளன. 2005 இல் ஆரம்பித்த நிலக்கீழ் வடிகால் புனரமைப்பு திட்டம் மிகவும் சொற்ப அளவில் தான் உதவின. இதற்குக் காரணம் பம்பாய் நகர பயன் தராத அதிகாரத்துவம்.
இந்தியாவில் சிந்து நதி மேற்கிலும், கிழக்கில் கங்கை,பிரம்மபுத்திரா போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு பாரிய அளவில் வருடா வருடம் மக்களையும் வர்த்தகத்தையும் பாதிக்கிறது. இதன் காரணமாக நாட்டு பொருளாதாரமும் பெருமளவு பாதிக்கப்படுகிறது. அதே போன்று 2020 ஆண்டு வரை அடுத்தடுத்து 3 வருட காலத்தில் இந்தியா 1400 மேற்பட்ட .பாரிய வெள்ளங்களை எதிர்கொண்டதையும் இவ்விடம் குறிப்பிடலாம்.
அதே போன்று சீனாவை எடுத்து பார்த்தாலும் வெள்ளத்தால் வரும் சேதங்கள் அதிகரித்தவாறே உள்ளது தெரிகிறது. குறிப்பாக யங்சி (Yangtze) சங் சியாங் (Cháng Jiāng) ஆறு, மஞ்சள் ஆறு ஹுவாங் ஹே(Huáng Hé) ஆறுகளின் வெள்ளச் சேதங்களை தடுக்க சீனா தொடர்ந்து முயன்றவாறு உள்ளது.. யங்சி ஆறானது இன்று சீனாவில் பல மில்லியன் சேதங்களை சீனாவின் சிசுவான் மாகாணத்தில் ஏற்படுத்தியவாறே உள்ளது.
WRI கணிப்பீட்டின்படி இந்தியா, வங்காள தேசம் போன்ற நாடுகளின் வெள்ளம் எதிர்கொள்ளக் கூடிய கட்டமைப்புக்கள் இன்றும் பலவீனமாகத்தான் உள்ளன. தற்போது இந்திய வெள்ள நிவர்த்தி அமைப்புக்கள் 11 வருடத்தில் ஒரு முறை வரும் வெள்ளத்தைத் தாக்குப் பிடிக்கும் தன்மை உள்ளது. அதே சமயம் வங்காளதேசம் 3 வருடங்களில் ஒரு முறை வரும் வெள்ளங்களைச் சமாளிக்கும் வண்ணமுள்ளது. சீனா 35 வருடங்களுக்கு ஒரு முறை வரும் வெள்ளங்களைத் தாக்குப் பிடிக்கும். அதே சமயம் ஜப்பான் தனது பூகோள அமைவினால் 90-91 வருட காலத்திற்கு ஒரு முறை வரும். வெள்ளங்களை தாக்குப்பிடிக்கக் கூடியதாக அமைத்துள்ளது.
பெரிய உள்நாட்டு வெள்ளக் காட்டுப்பாட்டு கட்டட அமைப்புகள் பெரிய அளவிலான முதலீட்டை ஈர்க்கும். அதனால் வருவாய் அதிகரிக்கும். அடுத்த 30 ஆண்டுகளில் கட்டப்படவுள்ள அணைகள், பாலங்கள் மற்றும் பிற கட்டமைப்புகள் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிய நாடுகளை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க வடிவமைக்கப்படும். WRI மதிப்பிட்டுள்ளதுபடி, இக்கட்டமைப்புகளுக்கு அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியா 217 பில்லியன் டாலர் முதலீடு செய்ய வேண்டியிருக்கும், சீனா 347 பில்லியன் டாலர் முதலீடு செய்ய வேண்டும் . இது இந்நாடுகள் தற்போது எதிர்கொள்ளும் வெள்ளம் தொடர்பான பொருளாதார இழப்புகளில் மிகக் குறைந்த அளவு.
எனவே, வெள்ளப் பாதுகாப்புத் திட்டங்கள் அவர்களின் வீடுகள் மற்றும் வணிகங்கள் மட்டுமின்றி மில்லியன் கணக்கான மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஒரு ஊக்கியாக இருக்கும். உலக நாடுகளின் பொருளாதாரங்கள்தான் உலகளாவிய காலநிலை மாற்றத்தை அறிந்திருக்கின்றன, அதற்கேற்ப காலநிலை பாதுகாப்பு முதலீடுகளை செய்கின்றன
- யோகி
உச்சந்துணைகள்
- New Data Shows Millions of People, Trillions in Property at Risk from Flooding — But Infrastructure Investments Now Can Significantly Lower Flood Risk https://www.wri.org/news/2020/04/release-new-data-shows-millions-people-trillions-property-risk-flooding-infrastructure
- The Exposure, Vulnerability, and Ability to Respond of Poor Households to Recurrent Floods in Mumbai http://documents1.worldbank.org/curated/en/418931467991989631/pdf/WPS7481.pdf
- Devastating monsoon flooding strikes Mumbai, a city gripped by the coronavirus pandemic – Washington Post – https://www.washingtonpost.com/weather/2020/08/07/mumbai-india-monsoon/
- China’s worst floods in decades – South China Post – https://multimedia.scmp.com/infographics/news/china/article/3094790/china-floods/index.html
- HCTT Response Plan – Monsoon floods – United Nations Bangladesh Coordinated Appeal (July 2020 – March 2021) – https://reliefweb.int/report/bangladesh/hctt-response-plan-monsoon-floods-united-nations-bangladesh-coordinated-appeal