\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இதயத்தில் முள் தோட்டம்

Filed in கதை, வார வெளியீடு by on January 13, 2021 0 Comments

தென்னை மரங்களைத்  தழுவியபடி கடலிலுருந்து  சுகமான  காற்று வீசியது. காலைப்  பதினோரு மணி. இது அரையாண்டு பள்ளி விடுமுறை நேரம்.  முட்டுக்காடு ‘பேக்வாட்டர்ஸில்’  சுற்றுலாப் படகுகளுக்கு நடுவே கொஞ்சம் தண்ணீர் தெரிந்தது என்று கூடச் சொல்லலாம். குற்றப்பிரிவு சி.ஐ.டி. பிரிவைச் சேர்ந்த போலீஸ் ஜீப் சுழலும் விளக்குகளைப் போட்டபடி வேகமாக முட்டுக்காடு பாலத்தைத் தாண்டிச் சென்றது. மக்கள் அதை ஒரு  பொருட்டாக மதித்ததாகத்  தெரியவில்லை. அவர்கள் போலீஸ் ஜீப்பை விட வேகமாகப்  பயணிக்கவே முயற்சித்தனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு (டி.எஸ்.பி) ராஜீவ் மற்றும்  இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சற்று இறுக்கமான முகத்துடன் உட்கார்ந்திருந்தனர். டிரைவர் மாணிக்கம் வழிவிடாத மக்களைத்  திட்டியப்படி வேகமாக ஓட்டினான் .

“மாணிக்கம் , இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு?” எனக் கேட்டார் ராஜீவ்.

“சார், கூகிள் மேப்பில் இன்னும் ஆறு  கிலோமீட்டர்  இருக்குன்னு காமிக்குது.  20 நிமிஷத்துல அங்கே இருக்கலாம். இந்த பன்னாடைகள் போலீஸ் வண்டிக்கே இடம் விட மாட்டேனுதுங்க! “.

“சரி, நீ பாத்துப்  போ” என்று சொல்லியப்படியே அவர் தனது மேல் அதிகாரிக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். சிறிது நேரம் கடந்தது.

“ராஜேந்திரன் என்ன யோசனை?  எல்லாம் ஓகேவா?”.

“சார், என் ஒய்ஃப் கிட்டயிருந்து வாட்ஸ்அப் மெசேஜ்.  நாளை என் மகளோட பிறந்த நாள். வீட்டிற்கு வரதுக்கு முன்னாடி ஒரு கேக் வாங்கிட்டு வாங்கன்னு சொன்னாள் . இதுக்கெல்லாம் நம்ப பொழப்புல எங்க சார் டைம் இருக்கு!”

“நான் உங்களுக்கு பல முறைச் சொல்லியிருக்கேன்.  நாம போலீஸ்னா பர்சனல் லைஃப் கிடையாதா என்ன? உங்கள் குடும்பத்தையும் கொஞ்சம் கவனிச்சுக்கோங்க” என சற்று கோபமாகவே சொன்னார் ராஜீவ் .

ஓகே, ஓகே என்று தலையாட்டினார்  ராஜேந்திரன்.

ராஜீவ் குற்றப்பிரிவு குற்ற விசாரணைத் துறையில்  நான்காம் நிலை மேல் அதிகாரி. அவர் தனது துறையில் நன்கு மதிக்கப்படும் ஒரு  மூத்த அதிகாரி. மிக வேகமாக மேல் நிலையை அடைந்தவர். பல பதக்கங்கள் மற்றும் விருதுகளைப் பெற்றவர்.   பெரும்பாலான மக்கள் தவறவிடக்கூடிய விஷயங்களைக் கண்டறியும் தனித்திறன் அவரிடம் உள்ளது.  ராஜேந்திரன் அவருடைய “சைடுகிக்”!  சமீபத்தில் கூட  மிகப் பெரிய அரசியல்வாதி சம்பந்தப்பட்ட ஒரு கொலை வழக்கைத் தீர்த்து வைத்துப் பதவி உயர்வு  பெற்றனர்.

“சார், கோவளம் மீன்  மார்க்கெட் வந்திடுச்சு. திரும்பி வரப்ப, மீனா மேடம் மீன்  வாங்கிட்டு வரச் சொன்னாங்க!” என்றான்  மாணிக்கம்.  மீனா ராஜீவின் மனைவி.

“யோவ்! நம்ப இப்ப எங்க போறோமுனு உனக்குத் தெரியுமா, தெரியாதா? நான் பேசிக்கிறேன்” என்று கத்தினார் ராஜீவ்.

சில மணி நேரத்திற்கு முன்னாள் அவருக்கு ஐ.ஜி.பி.யிடம்  இருந்து  கைப்பேசி அழைப்பு வந்தது. தமிழ் திரைப்பட உலகின் தொண்ணூறுகளின் கனவுக் கன்னி   கவிதா படுகொலை செய்யப்பட்டு விட்டதாகச்  சொன்னார்.  கவிதாவின் கணவர் சண்முகம்  மிகப் பெரிய தயாரிப்பாளர். அவர் ஒரு ஆளும் கட்சி அமைச்சரின் உறவினர்கூட. அவர் அந்த அரசியல்வாதியின் பினாமி என்ற பேச்சும் உண்டு. இந்தக் கொலை வழக்கை ராஜீவ் விசாரிக்க  அவர்கள் ஒரு சிறப்பு வேண்டுகோள் விடுத்ததாகச்  சொன்னார் ஐ.ஜி.பி.

தொண்ணூறுகளில் வெளிவந்த திரைப்படங்களில்  கவிதா இல்லாமல் வந்த  படங்கள் மிகக்குறைவே! .  அவளுடன் நடிக்காத நடிகர்களை அல்லது அவளை இயக்காத இயக்குனர்களைக் கைவிரல் விட்டு எண்ணி விடலாம். தேசிய விருதும்  பிலிம்ஃபேர் விருதுகளும் அவள் காலடியில் கொட்டியது எனக் கூட சொல்லலாம்!! அவள்  இயக்குனர்களின் செல்லம், எந்த எதிரிகளும் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக நடிப்பதை நிறுத்திவிட்டாள். அதனால்தான் ராஜீவ் கொஞ்சம் குழப்பமாயிருந்தார்.

“ராஜேந்திரன், கவிதாவை பற்றி உங்களுக்கு தெரிஞ்சதைச் சொல்லுங்க” என்றார் ராஜீவ்.    

சார், சண்முகம்  அவருடைய முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு பத்து ஆண்டுகளுக்கு முன்புதான்  கவிதாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். அவர் தயாரித்த  பல திரைப்படங்களில் நடிச்சிருக்காங்க.   இவங்களுக்குள்ள  பத்து வயசுக்கு மேல  வயது வித்தியாசம் இருக்கும்

உடனே  மாணிக்கம்இந்த அம்மா சமீபத்துலதான் 50 வது பிறந்த நாளைக் கொண்டாடினாங்க, பேப்பர்ல படிச்சேன் சார். அவங்க தெரு வந்திடுச்சு ” 

கிழக்குக் கடற்கரைச் சாலையில்  உயரமான இரும்பு வாயில் கொண்ட பங்களாக்கள் நிறைந்த  தெருவில் ஜீப் மெதுவாக நுழைந்தது.   எட்டு முதல் பத்து அடி வரை உயரமுள்ள மதில் சுவர்கள். ஒவ்வொரு வீட்டிலும் காவலாளிகளுக்காக, சிறியசென்ட்ரி ஹவுஸ்’ இருந்தது. தெருவில் கடைசி வீட்டின் அருகே சாலையில் ஏராளமானோர் நின்றிருந்தனர். நிறைய மீடியா மற்றும் பிரஸ் வேன்கள் இருந்தன. 

போலீஸ்சைரன்’ கேட்டதும் மடமடவென மக்கள் விலகினர். வாட்ச்மேன் கேட்டைத் திறந்து அவர்களை உள்ளே அனுப்பி, மீண்டும் கேட்டை மூடினான்

விசாலமான வில்லா வகை வீடு. இப்போதெல்லாம் டிவி சீரியல்களில் வரும் ஒரு பெரிய வீடு போல் இருந்தது. ‘டிரைவ் வே’ வின் ஒரு பக்கம் வெளிநாட்டுலிருந்து இறக்குமதி செய்யப்பட்டடர்ஃப்ஸ்டோன் பேவர்’  வைத்துக் கட்டிய வராண்டாஅதன் நடுவில் இருக்கும் ஓட்டைகளிலிருந்து புற்கள் நிரம்பி வழிந்தது. மறுபக்கம்  இயற்கையான  தோட்டங்கள் மற்றும் புல்வெளிகள்.   மாணிக்கம் ஜீப்பைடிரைவ் வே’ வில் நிறுத்தினான்.

சார், நானும்  உள்ளே வரலாமா? நடிகை கவிதாவை நான் நேர்ல பார்த்ததில்லை.” என்றான் மாணிக்கம்.

யோவ்! நீ என்னையா பேசறே? நாம எங்க வந்திருக்கோம், நீ என்ன கேட்கறே? உள்ளே வா, நான் அவளோட  ஆட்டோகிராஃப் வாங்கித்தரேன்என்று கடுப்பாகச் சொன்னார்  ராஜீவ்மாணிக்கம் சட்டை செய்யாமல் அவரைப் பின் தொடர்ந்தான். அவர்கள் நுழைந்தவுடன்போலீஸ் பாணியில் அவர்களுக்கு ஒரு இன்ஸ்பெக்டர் போலீஸ்  வணக்கம் தெரிவித்தார்

சார், என்  பெயர் தன்ராஜ், கோவளம்பிரான்ச் இன்ஸ்பெக்டர்’நாம  பின்பக்கத்திற்கு  செல்லலாமா?” எனக் கேட்டார்.

லெட்ஸ் கோஎன்றார் ராஜீவ்.

கொல்லைப்புறத்தில்  உயரமான தென்னை மரங்களும், பூவரசு மரங்களும்  மற்றும் சில செடி, கொடிகளும்  இருந்தன. கடல் மிக அருகில் இருப்பதைக்  காற்றின் வேகத்தைக் கொண்டு உணரமுடிந்தது. பூவரசு மரம் உப்பு சகிப்புத்தன்மை கொண்ட மரமாதலால்  கடற்கரை பக்க வீடுகளில் நிறையக்  காணலாம்நிறைய மருத்துவத் தன்மைகளைக் கொண்ட மஞ்சள் நிறப் பூக்கள்  அந்த மரத்தில் பூத்துக்  குலுங்கியதுபின்பக்கத்தின்  நடுவில் தென்னை மரக் கீற்றுகளால் கட்டப்பட்ட குடிசை பாணியில் (கஸிபோ ஸ்டைலில்) ஒரு இடம்நடுவே சிமெண்ட் தரை. அந்த இடத்திற்குள்ளே  சில  மூங்கில் நாற்காலிகளும் ஒரு மூங்கில் டீபாயும் போடப்பட்டு இருந்தது. மூங்கில் டீபாயில்பூம் ஸ்பீக்கரும்’, சில மது  பாட்டில்களும், சிறியஐஸ் பாக்ஸும்’ மற்றும்  பாதி குடித்து வைத்த கிளாஸும் இருந்தன.

அங்கே நடிகையின் உடல் நாற்காலியில் இருந்த  தலையணையில் சற்று படுத்தவாறே உட்கார்ந்த தோரணையில் இருந்தது. அவளது பின்புறம் கிட்டத்தட்ட நாற்காலியின் முடிவில் இருந்ததுஒரு சாதாரண இரவு உடைதான் அணிந்திருந்தாள். கிட்டத்தட்ட 5 அடி 6 அங்குலங்கள் இருப்பாள். நல்ல எலுமிச்சைப் பழம் கலர்தலையில் அங்காங்கே  வெள்ளை முடிகள். கண்கள் மூடியிருந்தனவாய்டக்ட் டேப்பால்’  மூடப்பட்டிருந்ததுஅவளைக்  கொலையாளி அறைந்திருப்பான் போலும்.  விரல் அச்சுகள் கன்னத்தில் நன்றாகத் தெரிந்தன. அவள் கழுத்தைக்  கயிறு அல்லது ஏதோ ஒன்றை கொண்டு நெரித்ததிற்கான  அடையாளங்கள் நன்குத் தெரிந்தன.

சார், மாளிகை மாதிரி வீடு, வீட்டுப் பின்பக்கம்ரிசார்ட் ஸ்டைல்ல’ இருக்கு. பாவம், இந்த அம்மாவுக்கு இப்படியொரு சாவா! கொடுமை சார்! ஆனா நான் நினைச்சதை விட  இவங்க கொஞ்சம்  வயசாதான் இருக்காங்க!” என்றான்   மாணிக்கம். அவனைச் சற்று முறைத்தப்படியேதன்ராஜ், நீங்களோ அல்லது யாரோ இவங்க கண்களை மூடினீங்களா?”

நோ சார்

ஓகேமுதல் விசாரணையிலிருந்து நீங்கள் என்ன  கண்டுபிடிச்சீங்க?” 

சார், இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் கொலை நடந்து இருக்கும்னு  நினைக்கிறேன்

எப்படி அவ்வளவு உறுதியாகச்  சொல்றீங்க?” எனக் கேட்டார்  ராஜேந்திரன்

சார், இந்த வீட்டை இரண்டுவாட்ச்மென்’  பாத்துக்கிறாங்க.   ஒருத்தர்டே ஷிஃப்ட்’, இன்னொருத்தர்  ‘நைட் ஷிஃப்ட்’.  8 முதல் 9 மணி வரை இங்கு யாரும் இருப்பதில்லை. பக்கத்து வீட்டுவாட்ச்மேன்கொஞ்சம் கண்ணு வச்சுப்பாரு, அவ்வளவுதான்! ஆனால் அவருக்கும்  எந்தச் சத்தமும் கேட்கவில்லை. இந்தத்  தெருவில் இது கடைசி வீடு. பக்கத்து வீட்டுக்காரர்களும்  வீட்டில் ஒரு வாரமாய் இல்லை.”

கவிதா வாய்  ‘டக்ட் டேப்பால்’  மூடப்பட்டிருந்ததால் கூட இருக்கலாம். நைட் ஷிப்ட்  வாட்ச்மேன் எப்ப வந்தாரு , ஏதாவது  கவனிச்சாரா? ” எனக் கேட்டார்  ராஜேந்திரன்.

நைட் ஷிப்ட்  வாட்ச்மேன்  ஒரு ஒன்பது இருபது போல வந்தேன்னு சொன்னான். அவன் கவிதாவிடம் ரிப்போர்ட் பண்ணவில்லை. தட்ஸ் வாட் ஹி டஸ் எவெரிடே! வீட்டு வேலைக்காரி காலைல  7 மணிக்கு வந்தப்போதான் இதைக்  கவனிச்சுருக்கா”  என்றார் தன்ராஜ்.

கற்பழிப்பு அல்லது திருட்டுக்கான ஏதாவது முயற்சி..” எனக் கேட்டார் ராஜீவ்.

நோ சார், நோ ரேப் அட்டெம்ப்ட், கொலையாளி வீட்டிற்குள் நுழையலை. நேற்றுக்கு முன்னாடி நாள் இங்கு கடுமையான மழை. கொல்லைப்புறம்  இன்னும் ஈரமாத்தான்  இருக்குஒரு ஆணின் ஷூ போலத்தான் தெரியுது. இந்த நாற்காலியைத் தாண்டி ஷூ அடையாளம் இல்லைஒரு திட்டமிட்ட கொலை போலத் தெரியுது

இன்டெரெஸ்ட்டிங், இது ஒரு திட்டமிட்ட கொலைன்னு  எப்படிச் சொல்றீங்க?’ எனக் கேட்டார்  ராஜீவ்.  

கொலையாளி அவங்க சத்தம் போடாமல் இருக்க டக்டேப்பால் வாயை மூடி, கழுத்தை நெரிக்க கயிறு போல ஏதோ ஒன்றைப்  பயன்படுத்தியிருக்கான்“. என்று சொல்லிவிட்டு  தன்ராஜ் அவர்களைப் பின் பக்க மதில் சுவருக்கு அருகில் அழைத்து சென்றார்அங்கே ஒரு பிளாஸ்டிக் நாற்காலி தரையில் கிடந்தது மற்றும் ஒரு ஏணி சுவற்றில் சாய்ந்தபடி இருந்தது.

சார், மதில் சுவர் கிட்டத்தட்ட எட்டு அடி இருக்கும்.   கொலையாளி சுவரில் ஏற ஒவ்வொரு பக்கமும் ஒரு  பிளாஸ்டிக் நாற்காலியைப் பயன்படுத்தி இருக்கான். யாராவது ஒருத்தர்  ஏணியில் ஏற முடியுமா?”  எனக் கேட்டார்  தன்ராஜ்ராஜேந்திரன் ஏணியில் ஏறினார்.

சார், நிறைய புதரும் கடல் மண்ணும் தெரியுது. கடல் இங்கிருந்து நூறு அடி கூட இருக்காதுன்னு நினைக்கிறேன். அந்தப் பக்கம் ஏதாவது தடயங்களைக் கண்டு பிடிச்சிங்களா?” எனக் கேட்டார்  ராஜேந்திரன்.

அவன்  இன்னொரு சேரை எடுத்துட்டுப் போய்ட்டான்னு நினைக்கிறேன். அவன் நடந்த அடையாளம் புதராய் இருக்கறதினால கண்டுபிடிக்க முடியல. இந்தப் புதர் கொஞ்சம் தள்ளி ஒரு ஒத்தை அடிப் பாதையில முடியுது. அங்கே பைக்ல வந்த தடம் கொஞ்சம் தெரிஞ்சது. அந்த ஒத்தை அடிப் பாதை மெயின் ரோட்டுல முடியுது. ” எனச் சொன்னார்  தன்ராஜ்.

தன்ராஜ், அந்த பைக்கை யாராவது பார்த்தாங்களா?” எனக் கேட்டார் ராஜீவ்

நான் இந்தத் தெருவில் இருக்கிற எல்லா வாட்ச்மேன்களையும், ஹவுஸ் ஓனர்ஸையும் கூப்பிட்டு விசாரிச்சுட்டேன். நோ லக் சார்!”

சீசர் எதாவது  கண்டுபிடிச்சானா?” 

சீசர் பின்பக்கத் தெருவின் கடைசி வரை ஓடினான்நிறைய புதர்கள் இருக்கு. கொலையாளி மிளகாய் தூள் வேற  தூவி இருக்கான். நோ லக் சார்

எனிபிங்கர்ப்ரிண்ட்ஸ் ? “

அவன்  கையுறைகள்  போட்டிருந்தான்போல. ஆனால்  அவன் தன் கையுறையை எடுத்துட்டு கவிதாவை அடிச்சுருக்கான். “

நாட் குட், கேன் யு கால் ட்ரேஸ் டி.என். டீம் அஸ் வெல்“. 

எஸ் சார். ஃபிங்கர்ப்ரின்ட் டீம்  இஸ் ஹியர் ஆல்ரெடி. வி வில் கால் ட்ரேஸ் டி.என். டீம்  ” என்றார்   தன்ராஜ்.

ஹவ் அபௌட் கிரைம்  ரேட் இன் திஸ் ஏரியா?”

இது குற்றம் அவ்வளவு இல்லாத ஏரியா சார். டே அண்ட் நைட் வாட்ச்மேன் இருப்பதால்சிறிய திருட்டைக் கூட இந்த ஏரியா பார்த்ததில்லை. கேமராவோ செக்யூரிட்டி சிஸ்டமோ இல்லை.”

 “நோ கேமரா ஆர்  செக்யூரிட்டி சிஸ்டம்? தட்ஸ் நாட் குட்! வீட்டுல நேற்று  இரவு யாராவது இருந்தாங்களா?” எனக் கேட்டார் ராஜீவ்

சண்முகம் சார் நேற்று இங்கே இல்லை. கவிதா மட்டும்தான் வீட்டிலே தனியா  இருந்துருக்காங்க. அவங்களுக்கு குழந்தைளும்  இல்லை. “

சண்முகம் சார் எங்கே?”

தயாரிப்பாளர்கள் சங்கம் ஈவென்ட்க்காக நேத்து பாண்டிச்சேரி போயிருக்கார். அவர் ஒரு மணி நேரத்திற்கு முன்னாடிதான்  இந்த நியூஸ் கேள்விப்பட்டு பாண்டிச்சேரியில் இருந்து வந்தார்அவர் கவிதாவின்  பாடியப் பார்த்தவுடனே மயங்கி கீழ விழுந்துட்டார். முதலுதவிக்காக ஆம்புலன்ஸ் அழைக்க வேண்டியிருந்தது. அவர் மாடில  ஓய்வெடுக்கிறார். “

வெல் டன்  தன்ராஜ்! அம் வெரி இம்ப்ரெஸ்ட் வித் யுவர் இன்வெஸ்டிகேஷன் ரிப்போர்ட்!!! வீட்டு வேலைக்காரி, வாட்ச்மேன் மற்ற சஸ்பெக்ட்ஸ் கிட்ட இருந்து ஹாண்ட்ப்ரின்ட்ஸ் வாங்கிகங்க. இப்போதைக்கு சண்முகம் சார்ட ஹாண்ட்ப்ரின்ட்ஸ் வேண்டாம். நான் இந்த வீட்டைக் கொஞ்சம் சுத்திப் பார்த்துட்டு வரேன்என்று சொல்லிவிட்டு ராஜீவ் மற்றும்  ராஜேந்திரன் அவர் கைகளைக் குலுக்கினார்கள்.

தாங் யூ சோ மச்! வில் டூ சார்! ” என்று சொல்லிவிட்டு  தன்ராஜ்  போலீஸ் பாணியில் அவர்களுக்கு மீண்டும் ஒரு  வணக்கம் தெரிவித்தார். ராஜீவ் மற்றும்  ராஜேந்திரன் வேறு எதாவது துப்பு கிடைக்குமா என்று வீட்டைச் சுற்றிப்பார்க்க கிளம்பினார்கள்.

எதிரே வந்த  மாணிக்கம், “பாவம் சார், மக்களை சந்தோஷப்படுத்த நிறைய படங்கள்ல நடிச்சு இருக்காங்க! அவங்களுக்கு ஒரு  அமைதியான மரணம் இல்லையே சார்!! பாக்கவே பாவமா இருக்குஎன்று வருத்தப்பட்டான்.

 “ஷோ பிசினஸ் கர்ஸ்! இங்குள்ள அனைவருக்கும் லஞ்ச் ஆர்டர் செய்என்று ராஜீவ் சொல்லிவிட்டு  ராஜேந்திரனிடம்வீட்டு வேலைக்காரி, டே அண்ட் நைட் ஷிஃப்ட், பக்கத்து வீடு  வாட்ச்மேன்கள், பக்கத்து வீட்டு மக்களையும் வீட்டு முன் பக்கத்துக்கு  வரச் சொல்லுங்க. விசாரணையைத் தொடங்கலாம்.” என்றார் ராஜீவ்.

கிட்டத்தட்ட நான்கு  மணி நேரத்திற்குப் பிறகு முதல் கட்ட விசாரணை முடிந்தது. கவிதாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சண்முகம் மிகவும் தளர்ந்து போயிருந்தார். அவரிடம் மிக அதிகமாக விசாரணை எதுவும் நடக்கவில்லைஅவரது அண்ணன் வீட்டிற்குச் செல்வதாகக்  கூறி கிளம்பி விட்டார். பிரஸ் மற்றும் ரசிகர் கூட்டம் யாரும் இல்லை. அந்த இடமே வெறிச்சோடி இருந்தது.

ராஜீவ்தன்ராஜ், இந்த வீட்டை சில நாட்கள் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் பாதுகாப்பில் வைங்க ?” என்று சொல்லிவிட்டு தன் சகாக்களுடன் கிளம்பினார்

ஜீப் கிளம்பியவுடன்ஏன் சார்சண்முகத்திடம்  தீவிர விசாரணை நடத்தவில்லை, அவர் கைரேகைகளையும்  பெறவில்லைஎனக் கேட்டார்  ராஜேந்திரன்

அவர் பாண்டிச்சேரியில் இருந்ததாக எனக்கு ஒரு உறுதியான தகவல் கிடைச்சுது. அவர் அமைச்சரின் நெருங்கிய உறவினர் கூட. சரியான ஆதாரங்கள் இல்லாமல் அவரை  நெருங்க கூடாது. அவருக்கும் இந்தக் கொலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையென்று என் உள் மனசு சொல்லுது. பட் டோன்ட் ரூல் ஹிம் அவுட்அவரது முதல் மனைவி மகனைப் பற்றி பேச அடுத்த வாரம் அவரைச் சந்திக்கப் போறேன்திஸ் இஸ் தீ  பிளான் பார் நெக்ஸ்ட்பியூ வீக்ஸ்அவரது முதல் மனைவி  மகனைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறுவதில் நீங்கள் கவனம் செலுத்துங்கள். உங்க சப் இன்ஸ்பெக்டரை கோடம்பாக்கம் சைடுல பணம் கொடுக்கல் வாங்கல்ல  எதாவது பிரச்சனை இருக்கான்னு  பார்க்கச் சொல்லுங்க.   தன்ராஜை இந்த ஏரியா சைடுல வேறு எதாவது பிரச்சனை இருக்கான்னு தீவிரமா விசாரிக்கச் சொல்லுங்க. அப்படியே வீட்டு வேலைக்காரி, வாட்ச்மேன் மேல ஒரு கண் வைக்க சொல்லுங்க.இது ஒரு எளிதான கேசா   இருக்காது. நமக்கு மேல் இடத்திலிருந்தும் பிரஸ்லிருந்தும் நிறையப்  பிரஷர் வரும். அதைப் பற்றி கவலைப்படாதீங்க. கொலையாளி நாம முற்றிலும் எதிர்பாராத நபராக கூட இருக்கலாம். ஏன் அந்த அமைச்சராகக் கூட இருக்கலாம்!!! பீ ரெடி ராஜேந்திரன் ஃபார் ஸ்லீப்லெஸ் நைட்ஸ்!!!”.

பேசிக் கொண்டிருக்கும் போதே கோவளம் மீன்  மார்க்கெட் வந்ததைக்  கவனித்தார். “மாணிக்கம், வண்டிய கொஞ்சம் ஓரம் கட்டு. மீன் வாங்கிட்டு போகலாம். அப்படியே போற வழியில பேக்கரி இருந்தா நிறுத்து, ராஜேந்திரன் அவர் பொண்ணுக்கு கேக் வாங்கட்டும்என்றார்  ராஜீவ்.

இவர் பெயரைக் கேட்டாலே சிட்டி கிரிமினல்ஸ் பயப்படுகிறாங்க, ஆனா நா அப்பக் கேட்டதுக்கு இவரு சீன் விட்டாலும், மீனா மேடம் கேட்டதை இவர் மறக்கலே! நல்ல மனுஷன். அவரோட வேலைப்  பார்க்கிறவங்களை பற்றியும் நினைக்கிறாரே! பெரிய விஷயம்என்று நினைத்தபடியே   வண்டியை ஓரங்கட்டினான் மாணிக்கம்.

தொடரும் 

  • மருங்கர் 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad