\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

சந்தைப் பெறுமதி: உங்கள் பெறுமதி என்ன?

அது சரி நீங்கள் சம்பள வேலை செய்கிறீர்களா, அல்லது ஓய்வு பெற்று விட்டீர்களா? உங்கள் பெறுமதி என்னமேலும் நீங்கள் அமெரிக்காவில் வாழுகிறீர்களா? அப்போ நீங்கள் பொருளாதாரச் சந்தையில் பரிமாறப்படும் பண்டமா? இதென்ன கேள்வி அப்படியெல்லாம் கிடையாது என்று சொன்னீர்களானால் வாருங்கள் உங்கள் சனநாயக சுதந்திரம் பற்றி அலசுவோம்.

உலகின் பணக்கார நாடு என்று கருதப்படும் அமெரிக்க நாட்டில், சாதாரண மக்கள் வாழ்வு பொதுவாக நலமாக இல்லை என்பது அனைவரும் அறிந்த விடயமே. இது 245 ஆண்டுகள் நிலைத்துள்ள இந்த நாட்டில் சமுகவியல். அரசியலில், பொருளாதாரவியலில் ஒரு நோய்வாய்ப்பட்ட நாடகவே தெரிகிறது.

இதையொற்றி வந்த கடந்த சில ஆண்டு அரசியல் சுலோகங்களும், அமெரிக்காவை மீண்டும் வலிமையாக்குவோம், அல்லது இன்னும் சிறப்பாகக் கட்டி எழுப்புவோம் என்று தாம் காது, கண்கள் வலிக்க அமெரிக்கரும், உலகும் ஒலி பரப்பப்பட்டது. இதில் ஒரு அரசியல் கட்சிக்காரரும் ஒளிமயம் பற்றிப் பேசவில்லை என்று உணரலாம். அதாவது அமெரிக்க மக்கள் வெளிப்புறம் இருள் என்றே கருதுகின்றனர் என்பது வெளிப்படை.

இந்த தருணத்தில் பாரிய தொற்று நோய் காலத்தில் தொடர்ந்து சுகாதார, சமூக, பொருளாதார மேம்பாடுகளும் செல்வந்தோருக்கும், சாதாரண குடிமக்களுக்கும் இடையே பாரிய பிளவுகளை உருவாக்கி வருகிறது. இது நம்மை என்றாவது முதலாளித்துவம் சனநாயகத்திற்கு சேவகம் ஆகுமா? என்றொரு கேள்வியை எழுப்புகிறது எனலாம்.

கடந்த தடவை 1970களில் அமெரிக்கா மந்தமானதொரு சூழலை அடைந்திருந்தது. அந்தத் தருணத்தில் வர்த்தகச் சந்தையை விடுவித்தால் எல்லாம் சரிவரும் என்ற சிந்தனையை அமெரிக்கர் பின்பற்ற முனைந்தனர். அந்தச் சமயத்தில் சொத்து, மனை, காணி நில உரிமை அதிரித்தல், யாவற்றையும் சந்தைக்குக் கொண்டு வருதல் அதனால் எல்லையற்ற செல்வந்தை உண்டு பண்ணிக் கொள்ளலாம் என்ற சிந்தனை பெரிதாகியது. இதன் பரிவிளைவு அமெரிக்க பொதுமக்கள் யாவருக்கும் சரிசமாக அமைந்து கொள்ளவில்லை. குறிப்பாக சிறுபான்மை மக்கள் பயனுறவில்லை. இது புதிய சமுகவியல் மற்றும் அரசியல் தலையிடிகளையும் உருவாக்கிக் கொண்டது.

இந்தச் சந்தர்ப்பத்தில் சகலதும் சந்தை மயமே என்ற கருத்துக் கொள்கை தலையாயது ஆகியது. அதாவது மனிதரும், அவர்கள் சேவகமும் ஒருவகை சந்தைப் பொருள் ஆனார்கள். எனவே நல்ல இலாபம் பெற்றுக் கொள்ள ஒருவர் தம்மைத் தாமே நன்றாக சந்தையில் விற்பனை அடையும் பொருளாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றாகியது. சூழலியல் மாசுக்கள் ஒரு பண்டமாற்றுப் பொருள் என்று மீள வகைப்படுத்தப்பட்டு இலாபங்கள் தேடப்பட்டது. காசு செலவழித்தல் என்பது ஒரு வகைப் பேச்சுச் சுதந்திரம் என்றும் குறிப்பிட்டுக் கொள்ளப்பட்டது.

சுதந்திரமான பண்டமாற்றத்தினால் காசு உழைத்துக் கொள்ள முடியும் என்று வாதாடியவர்கள் சனநாயகச் சிந்தனைக்கு ஆப்பு வைக்க ஆரம்பித்தனர் எனலாம். அதாவது ஒழுங்கமைக்கப்படாத வர்த்தக முதலீடுகள் தாராளவாத சனநாயகம் என்றெல்லாம் சிந்திக்கப்பட்டது. ஆயினும் சுமார் அரை நூற்றாண்டுகளின் பின்னர், தற்போது அமெரிக்கக் குடிமக்கள் இதை நம்புவதாக இல்லை. காரணம் நமது நாட்டின் நிலைப்பாட்டில் சொத்து சேர்த்துக் கொள்ளப் படுவதற்கான சனநாய உரிமைக்கும் இடையே தகராறுகள் பல தெரிகின்றன. இதன் காரணம் அமெரிக்க ஆட்சி அமைப்பு அரசியல் சுதந்திரம் என்ற ரீதியில் ஆபத்தான சனநாயக உரிமைக்கு மாறான சொத்து உரிமைப் பேதங்களில் கை வைத்தல் எனலாம். அதாவது, இன்று செல்வந்தருக்கு ஒரு சட்டம் சாதாரண மக்களுக்கு இன்னொரு சொத்து உரிமைச் சட்டம் என்றாகிவிட்டது.

இந்த நிலைப்பாட்டை தாராளவாத சனநாயகம் என்ற ரீதியில், கலவரங்கள் இன்றி அரசியல் சுற்று மாத்துக்கள் மூலம் பேணி வரத்தொடங்கியது பலவித மாநில, மத்திய அரசமைப்புக்கள். இது எந்த கட்சி ஆளுமைக்கு வந்தால் என்ன மாறுவதாக இல்லை. இதனால் செல்வந்தர் தமது பணத்தால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் என்ன, தமது செல்வம் பெருக சட்டரீதியில் வழிவகை தொடர்ந்து பண்ணிக் கொண்டனர்.

அமெரிக்க வலது சாரிக் கட்சிகள் இன்று பொருள் ஈட்டுவதற்காக சனநாயக் கொள்ளகையையே கைவிடத்தயாராகியுள்ளனர். 2021 Globalist எனும் புத்தகத்தில் இது பற்றித் தெளிவாக விவரிக்கப்படுகிறது. அதாவது தமது பாரிய சொத்துக்களைக் காப்பாற்ற விரும்புவோர், தமது சிந்தனைக்கு எதிராக எந்த அரசியல்வாதிகளும் தலைமைக்கு வராது பார்த்துக் கொண்டனர். அதே சமயம் பல ரக யுக்திகள் பாவித்து சட்டரீதியில் ஆளுமைக்கு வருபவர் ஒன்றுமே செய்து கொள்ள முடியாதவாறு சட்ட கோட்டைகள், அகழிகளை உருவாக்கி பாதுகாத்துக் கொண்டனர்.

இந்த செல்வந்தர் யுக்திகள் பல பொருளாதார வலிமை இல்லாத குடிமக்களை ஆத்திரம் வைத்தமையை நாம் தொடர்ந்தும் காணலாம். அமெரிக்க கனவு என்றும் நனவாகியது தவிடு பொடியானதும் மக்கள் தெளிவாக உணர்ந்து கொண்டனர். இதனால் அண்மைக்காலத்தில் பல வித அமெரிக்க சந்தை, பங்குச் சந்தைப் பொருளாதாரத்திற்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். இதனால் வலது சாரி என்றால் என்ன இடது சாரி என்றால் என்ன அமெரிக்க மக்கள் சந்தேகத்துடனேயே பார்த்தவாறே உள்ளனர். இதன் அடிப்படைக் காரணம் சாதாரண அமெரிக்கப் பிரசை வாழ்வில் முன்னேறிக் கொள்ள வழிகள் பல இல்லை என்ற சூழல் ஆகும்.

இதைப் பற்றிப் பல ஆழமான சிந்தனைகள் அண்மையில் ஆய்வுக் கட்டுரைகளாக வெளிவந்துள்ளன. உதாரணம் Freedom From the Market எனப்படும் முற்போக்கான சிந்தனைக் கருத்துப் புத்தகம். இந்தப் புத்தகத்தில் அமெரிக்கர் மீண்டும் மீண்டும் தம்முடன் இணைத்துக் கொள்ளும் சொல் சுதந்திரம் பற்றி குறிப்பிடப்படுகிறது. உண்மைச் சுதந்திரந்திரத்திற்குத் தேவையானது நாம் எவ்வளவு தூரம் வர்த்தக,பங்குச் சந்தையில் இருந்து அப்பால் அப்போது தான் வரும் என்கிறது. பங்குச் சந்தைப் பொருளாதாரமானது பெரும்பான்மையான பொதுமக்கள் புனர்வாழ்வு, செழிப்பை, இல்லை அரசியல் சுதந்திரத்தையோ தரவல்லது அல்ல என்கிறது. அதன் தெளிவான காரணம் சந்தை சார்ந்த தாராளவாத சிந்தனை, பெருமளவில் மக்கள் சுதந்திரத்தை இலாபத்திற்காக கட்டுப்படுத்திக் கொள்ளும். எனவே இது சனநாயக சிந்தனைக் கோட்பாட்டிற்கு அப்பாற்பட்டது.

மக்கள் சுதந்திரத்திற்குத் தேவையானது

சுதந்திரம் எனப்படும் முற்போக்கான சிந்தனையானது திடீரென உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. இது பல நூறு ஆண்டுகள் முயற்சிகள், பிழைகள் பல கண்டு உருவாக்கிய சமூக சிந்தனை. இதைப் பல உலக பாகங்களிலும் மக்கள் தமக்கு தெரிந்த வகையில் அடக்குமுறையை எதிர்த்து போராடிப் பெற்றனர். ஆயினும் அமெரிக்க நாட்டின் சாசனத்தில் உரிமைகள் Bill of rights தெளிவாக மக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் செப்டெம்பர் 25, 1789 இல்  பரிந்துரைக்கப்பட்டு இன்று வரை பேணப்படுகிறது. சட்டத்தின் முன்னர் யாவரையும் சமமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை குடிமக்கள் முழுதாகப் பங்கு பெற்ற முடியாவிட்டால் பயனில்லை. எனவே அடுத்து வந்தது அமெரிக்க சகல மக்களும் பங்கு பெற்று சர்வ மக்கள் வாக்குரிமை.  இதைத் தொடர்ந்து அமெரிக்க சனாதிபதி பிராங்க்ளின் ரூசவெல்ட் 1944இல் கூறினார். நாம் தெளிவான சிந்திப்புக்கு உள்ளாகிக் கொள்ள வேண்டும், அதாவது மக்களின் தனிப்பட்ட உண்மைச் சுதந்திரமானது, அவரவரின் பொருளாதாரப் பாதுகாப்பையும், விடுதலையும் இல்லாத அமைந்து கொள்ள முடியாது.

எனவே நாம் அமெரிக்கப் பிற்கால சந்தைப் பொருளாதாரத்தை எடுத்துப் பார்த்தால் இது கெக்கெட்டம் விட்டு சிரிப்புக் குரிய விடயமே. அதாவது பாரிய ஐந்து வெள்ளி ஹோட்டல் ஏழை, செல்வந்தர் யார் வேண்டுமானாலும் செல்ல வரவேற்கிறது தான். ஆனால் யாவரும் ஹோட்டல் சேவைகளைப் பயன்படுத்த செலவு பணம் எதிர்பார்க்கவும் முடியாது.

எனவே நாம் பாரிய ஹோட்டல் சேவை பற்றி அங்கலாய்க்கத் தேவையில்லை. அன்றாட மக்கள் தேவைகளாகிய தரமான சுகாதார சேவை, வாழ்வை செழிப்பாக்கும் பாடசாலைக் கல்வி, தொலைதொடர்பு மின்வலை உபயோகிப்பு போன்றவற்றை அனைத்து மக்களும் பெறுவது அவசியம். இவற்றையெல்லாம் இலாபகர சந்தையில் ஒப்புவிப்பது, தனியார் செல்வந்தர் காசு பணம் உருவாக்கிக் கொள்ள பயனாக இருக்கும் ஆயினும் சாதாரண மக்கள் வாழ்வை மேம்படுத்தாது. காரணம் பொருளாதராச் சந்தையில் பங்கு பெற்றுபவர் நோக்கு வருமானம் உண்டு பண்ணலே தவிர பொதுசன பயனுறுதல் அல்ல.

அமெரிக்கா அதன் ஆரம்ப காலத்தில் இருந்தே அமெரிக்க இலாப சந்தை என்ற சிந்தனையை மக்கள் வாழ்வுக்காக மந்தப் படுத்தியே வந்தது. எனினும் ஒரு விவசாய நிலத்தில் வளரும் களைகள் போல சந்தைப் பொருளாதாரம் தொடர்ந்து அமெரிக்காவை இருநூறு ஆண்டுகளாக ஆக்கிரமித்தவாறே உள்ளது. இதன் பக்க விளைவு தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் பெருந்தொகை சாதாரண அமெரிக்க மக்கள் தாம்.

இந்தப் பொருளாதார சூழலில், இதுவரை மக்களை எண்ண வைத்தது என்னவென்றால், பொருளாதாரச் சந்தை என்பது தனிச்சுதந்திரத்திற்குச் சமன், இதில் பகையாளி அரசாங்கம். அரசாங்கம் சந்தையையும் இதனோடு தனியார் சுதந்திரத்தையும் ஒடுக்கிறது. எனவே அதை நாம் போராடி மடக்க வேண்டும்.

 இது எவ்வளவு போலியான சிந்தனை என்பதற்கு தொடர்ந்து குறைந்து போகும் சாதாரண அமெரிக்க குடிமக்கள் வாழ்வு ஒரு சான்றாகும். இதை உணர்ந்து பொருளாதார சந்தையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வராவிட்டால், தற்போது உள்ள பாரிய பொருளாதார பிளவு முடிவிலை வரையும் போகலாம் நாடும் சனநாயக உரிமைகள் தோல்வி பட்ட விடயமாக மாறலாம்.

முதலாளித்துவம் உண்மையில் சனநாயகத்திற்கு சேவகமாகுமா?

திறந்த பொருளாதாரம் என்பது தெளிவான பொருளாதாரம் என்பார்கள் முதலீட்டைச் செய்யவிரும்பும் செலவந்தர்கள். எனவே பொருளாதாரச் சந்தைக்கு எவ்வித கட்டுப்பாடும் போடாவிட்டால் அது தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும். இது பக்க விளைவாக அனைவருக்கும் பலனையும் தரும் என்ற சிந்தனை முற்று முழுதான குறிப்பு அல்ல. அமெரிக்க உற்பத்தி வெளிநாடுகள் நோக்கி நகர்ந்த பொழுது, பொருளியல் வித்தகர் பறுவாயில்லை இது வேலையில் இருந்து நீக்கப்பட்ட அமெரிக்கருக்கு உயர்தர சம்பள வேலைகள் தானாகவே உருவாக்கப்படும் என்றனர். இதன் போது உள்ளூர் அரசாங்கமும் போதிய அளவில் பொதுமக்கள் எதிர்காலத்தை பாதுகாக்கும் அளவில் ஒன்றும் செய்து கொள்ளவில்லை.

உலகளாவியவாதம் Globalism வென்றது, முதலிட்டோர் பங்குச்சந்தையில் கை நிறைய இலாபம் கண்டனர், அமெரிக்க உற்பத்தி சாலையில் உழைத்தவன் வருமானம் இல்லாமல் மண் கவ்வினான். இப்பேர்பட்ட குறைந்த விலையில் வாங்கி நிரம்ப விற்கும் பொருளாதாரச் சந்தை முறைமை சாதாரண அமெரிக்க மக்களுக்கு பொருளாதார பாதுகாப்பையோ, அல்லது விடுதலையோ தரவில்லை. மாறாக அவர்கள் சுதந்திரம் பறிக்கப்பட்டு வாழ்வில் தோல்விகளை எதிர் நோக்க வைத்தது.

சென்ற ஐம்பது ஆண்டுகள் அமெரிக்கருக்கு பல விஷயங்கள் படமாக அமைந்திருக்க வேண்டும். மின்னுவது எல்லாம் பொன் அல்ல. முதலாளித்துவத்தில் அனைவரும் பங்கு பெற்றுக் கொள்ள முடியாது. அமெரிக்க சாசனத்தில் உள்ள குடிமக்களின் தனிச் சுதந்திரம் என்பதற்கு மாற்றுக் கோட்பாடு முதலாளித்துவத்தை திணிக்க முனைந்தனர். முதலாளித்துவமும், கட்டுப்பாட்டிற்குள் இல்லாத சந்தைப் பொருளாதாரமும் சனநாயகத்துக்கு ஒவ்வாது செல்வந்தர் தன்னலக் கருவிகள். இதிலிருந்து விடுபட சனநாயக ரீதியில் சாதாரண மக்களின் அத்தியாய உரிமைகளாக சுகம், சூழல், கல்வி, பொருளாதார விடுதலை உணரப்பட வேண்டும்.

அமெரிக்க மக்கள் வாழ்வு என்பது பொருளாதார சந்தைப் பொருள் பண்டங்கள் அல்ல. இதுவரை நடந்த தாராளவாத சந்தைப் பொருளாதார, சமூகவியல் தாக்கங்களில் இருந்து மக்கள் வாழ்வு திருந்த பல காலம் ஆகலாம். ஆயினும் அமெரிக்க மக்கள் யாவரும் அடிப்படைத் தேவைகளைப் பெற, சகல மக்களும் கல்வி பெற்று, அமெரிக்கப் பொருளாதாரத்தில் பங்கு பெற்று வாழ்ந்திட புதிய அரசு அத்திவாரம் போடும் என்று நம்புவோம்.

    யோகி

 

உச்சாந்துணைகள்

  1.       Freedom From the Market: America’s Fight to Liberate Itself from the Grip of the Invisible Hand Hardcover – January 12, 2021
  2.       Horace Greeley’s New-York Tribune: Civil War—Era Socialism and the Crisis of Free Labor. By Adam Tuchinsky.(Ithaca: Cornell University Press, 2009. xviii, 312 pp
  3.     Bill of Rights | U.S. Constitution | US Law | LII / Legal Information Institute (cornell.edu)
  4.     1944 State of the Union Address Text – FDR Presidential Library & Museum (fdrlibrary.org)
  5.     Democratic Theory (1): What makes a democracy ‘democratic’? – Prophetic Politics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad