\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ஒரு “டீ” பரிணாமம்

Filed in கதை, வார வெளியீடு by on March 22, 2021 2 Comments

 

மாலை வெயில் இன்னும் குறையவில்லை. மினசோட்டாவில் கோடைக்கால வருகையைப் பறைசாற்றும் விதமாக ஆறு மணியாகிவிட்டிருந்தாலும் இன்னும் சுள்ளென்று முகத்தில் வெயில் அடித்து மணி மூன்று போல காட்டியதுவீட்டின் வாசலில் வண்டியை நிறுத்தி விட்டு, உள்ளே நுழைந்தாள் மது என்ற மதுரம்.

வழியில் பூத்துக் குலுங்கத் தொடங்கியிருந்த மலர்கள் இதமாக இருந்தது. கைப் பையை எடுத்துக் கொண்ட பொழுது, அதிலிருந்து அலைபேசிகிர்ர்என்று அடித்தது. எடுத்து கையில் பார்த்தாள். “ஹே கங்க்ராட்ஸ் பா  ” என்று தோழியிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. அன்றைய தினம் அவளுடைய அலுவலக வாழ்க்கையில் ஒரு பெரிய வணிக ஒப்பந்தம் கையெழுத்து செய்திருந்தாள். அதனால் நிறுவனம் அவளுக்கு ஒரு புதிய விருதும் பதவியும் அளித்திருந்தது.  முதலில் இந்தச் செய்தியைக் கேட்டதும் யாரிடமாவது சொல்ல வேண்டும் போலத் தோன்றியது.  “யாரிடம் பகிர்வது?”. யார் இருக்கிறார்கள் அவளுடைய வளர்ச்சியை மகிழ்ந்து ஊக்குவிக்க? தேசம் விட்டு தேசம் வந்துள்ளோம். கூட பழகும் நட்புகள் எல்லாம் பெரும்பாலும் பிள்ளைகளின் நண்பர்களின் பெற்றோர்கள். அவர்களுக்கு இவள் வளர்ச்சி பற்றி என்ன கவலை?

அதிலும் இன்னும் சிலர் நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், மனதார பழகும் நட்பு என்பது மிகக் குறைவு. அதிலும் பொறாமை இல்லாமல் , அவர்கள் கவலையை நினைத்திராமல் இவளது அன்றைய வெற்றியை மனதார பாராட்டுபவர்கள் இன்னும் குறைவு. வள்ளலாரின் “உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு களவாமை வேண்டும்” வரிகள் மனதில் வந்து போயின. நம்ம ஊர்ல இது தோணினதே இல்லை. ஒரு ஆட்டோ ஓட்டுநர் கிட்ட பேசும் பொழுதோ, தெருவில் நடந்து போகும் பொழுதோ யாருடனும் உண்மை தான் தெரியுமே. என்னமோ  Minnesota Nice  என்று சொன்னாலும் இங்குள்ளவர்களிடம் அன்னியத்தன்மை தான் அதிகமாக தோன்றியது மதுவிற்கு . “நெஞ்சத்து அக நக நட்பே நட்பு”!! 

அவளுடைய பழைய கல்லூரித் தோழிக்கு, இவளுடைய விருது பற்றிய செய்தியை மதியம் அனுப்பியிருந்தாள் . அவள் தான் பதில் அனுப்பியிருந்தாள். மிக மகிழ்ச்சியாகயிருந்தது அவளுக்கு. நமக்கென்று ஒருவர் இருப்பது இனிமையான சுகமான நட்பு. சிறிய புன்னகையோடு , மன நிறைவோடு வீட்டின் உள்ளே நுழைந்தாள. 

உள்ளே வரும் பொழுதே தேநீர் மணம் வீசியது. கையில் ஒரு குவளையைத் தந்தான் கணவன் ரவி. நன்றி உரைத்தபடி வீட்டை ஒரு பார்வையால் அளந்தாள் மது. சமையலறையில் காலையில் சென்றபோது போட்டது போட்டபடி பாத்திரங்கள், வீட்டின் நடு கூடத்தில் பிள்ளைகளின் படிப்பு புத்தகங்கள். இப்படி சரி செய்ய வேண்டிய ஒராயிரம் விஷயங்கள்

எந்த அலுப்பும், கோபமும் வரவில்லை. எதிலுமே மனம் நிக்கவில்லை ஒருடீ“. மனதை , வயிற்றை சமாதானம் செய்தது. இவள் உடை மாற்றி வீட்டு வேலை தொடங்கலாம் என்று நினைத்த பொழுது,

பன்னிரெண்டு வயது மகள் ஆதிரை கீழே வந்துபோலாமா?என்றாள்

எங்கேஎன்ற இவளின் கொக்கிப் பார்வைக்கு

பதிலாக”Don’t tell me you forgot ” என்பது போல முறைத்தாள்

இவள் திரு திரு முழிக்கு பதிலாக அவளே தன் தோழியின் பிறந்த நாள் வைபவத்தைப் பற்றி மூன்று நாட்களாக பேசியதை நினைவூட்டினாள்

என்னைக் கொண்டு போய் இறக்கி விடுஎன்று கட்டளை பிறந்தது

ரவி நீங்க கூட்டிட்டுப் போறீங்களா?”.

இல்லைம்மா . நான் இப்போ தான் வந்தேன் . உனக்கு டீ கேட்பியேன்னு  போட்டேன். எனக்கு அலுவலக வேலை நிறைய இருக்கு. நீயே கொஞ்சம் ஹாண்டில் பண்ணிக்கோ“. என்று முடித்து விட்டு அவள் பதிலை எதிர் பாராமல் சென்று விட்டான். டீ போடுவதோடு அவன் கடமை முடிந்து விட்டாற்போல சென்றுவிட்டான்.

அவள் வயிற்றில் இதமாக இறங்கிய அந்த டீ இன்னமும் நன்றி சொல்லியபடி இருக்க, உட்காரச் சொல்லி அலுத்த உடம்பைக் கவனிக்காமல், சரி வா ஆதிரை போலாம்”  மீண்டும் அவளோடு வெளியே வந்தாள் மது.

அம்மாஎன்று அவளுடைய பதினாலு வயது மகன் அபினவ் டென்னிஸ் மட்டையுடன் வந்து நிற்க. நீ என்னை என் நண்பன் வீட்டில விளையாட இறக்கி  விடு. ஆதிரையை திருப்பிப் கூட்டி வரும்பொழுது என்னையும் கூட்டி வா. ஒரு அரை மணி நேரம் தான்.” என்று கூடவே கிளம்பினான் .போகிற வழியில் எல்லாம் ஏதோ இவளிடம் சொல்லியபடி வந்தார்கள். சிலமுறை மதுவிற்கு இவர்கள் என்னை ஒரு குப்பைத்தொட்டி போல நடத்துகிறார்களே என்று தோன்றியது.

சே சே !! . என் குழந்தைகள் . வேறு யாரிடம் போய் சொல்வார்கள்என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள். மீண்டும் வீடு வந்து சேர ஏழரை மணி ஆனது. சூரியன் தணியத் தொடங்கியிருந்தான்.

வீட்டினுள்  நுழையும் பொழுது , மதுவிற்கு உடம்பு இன்னும் சோர்வுற்று இருந்தது. இருப்பினும், பொறுமையாய்ப் பல்லைக் கடித்தபடி சமையல் அறையைச் சுத்தம் செய்தபடி இரவு உணவு தயார் செய்யத் தொடங்கினாள். சில முறை பிள்ளைகளை வேலை வாங்கத்  தேடினாள். அவர்கள் படிக்க வேண்டும் என்று ஓடி விட்டார்கள். ரவி கண்ணிலேயே தென்படவில்லை

ஆனால் மதுவிற்க்கு இது பழக்கமான ஒன்று. பெண்ணியம் எல்லாம் ஒன்றும் பேச முடியாது. சிரித்தபடி, ஒரு மணி நேரத்தில், வீட்டை நேர்படுத்தி, சப்பாத்தி செய்து, சுடச்சுடப்  பன்னீர் மசாலா செய்தாள்

மனதிற்குள் அம்மாவின் நினைவுகள்

அம்மாவும், இவளும் எத்தனையோ முறை கடைக்குச் சென்று அலுத்து வீடு திரும்பும் பொழுது , அப்பாமங்களம் ஒரு டி போடேன்என்று கேட்கும் பொழுது எல்லாம், மது தையா தக்கா என்று பெண்ணியம் பேசிக் குதித்திருக்கிறாள். “ஏன்  நீ டீ போட்டு வெச்சா என்ன . வெளில போயிட்டு வந்தும், உனக்கு அம்மா தான் போட்டு தரணுமா?” . என்று கத்தியிருக்கிறாள்.

அந்த சமயங்களில் அம்மா ஒரே பொறுமையான குரலில்எனக்கு ஒண்ணும் சிரமம் இல்லை. நான் போட்டுத்  தரேன்என்று சொல்வாள்.

“எல்லாரையும் நீ தான் அம்மா கெடுக்கற. இந்த அப்பாவை முதல்லயே சரி பண்ணி வெச்சிருக்கணும் என்று மது கோபமாக கூறிய தருணங்களில் சிரித்தபடி அம்மா, “சரிடி நீ சொல்லித் தா நான் தெரிஞ்சுக்கறேன்என்று சொல்வாள். பிரபு தேவா பாடறா மாதிரி , “புரட்சிகள் ஏதும் செய்யாமல் பெண்ணுக்கு நன்மை கிடையாதுஎன்று மது உரக்க பாடுவாள்.

அம்மா பசிக்குதுஎன்ற ஆதிரையின் குரல் நிகழ் காலத்திற்கு மதுவைத் தள்ளியது.

சப்பாத்தி ரெடி ” 

நால்வரும் சாப்பிட்டார்கள். அவரவர்கள் ஏதோ பேசியபடி சாப்பிட்டார்கள். பிறகு ஆளுக்கு ஒரு பக்கம் சென்று விட்டார்கள். மது சமையல் அறையைச் சுத்தம் செய்தபின் மாடிக்குப்  படுக்க சென்ற பொழுது தான், இரண்டு நாட்கள் முன்  துவைத்தத் துணிகள்  ஒரு பக்கம் மடிக்காமல் இருப்பது நினைவு வந்தது. இன்றும் அதை ஒத்தி வைக்க முடியாது என்று பெரிய மூச்சுடன் மணி பத்து என்பதை பார்த்தபடி துணியை மடிக்கத் துவங்கினாள்

ஆதிரை அப்பொழுது அவள் அறையிலிருந்து, தண்ணீர் அருந்த வெளியே வந்தாள் மலை போல குவிந்திருந்த துணிகளைக் கண்டு மனது இளகி, “அம்மா நான் உனக்கு உதவி பண்ணுகிறேன்என்று வந்தாள்.

நீயே தான் எல்லா வேலையும் பண்றே மா!!. பாவம் நீ

புன்முறுவலுடன் மது,  “உனக்கு என்ன வேண்டும்என்று கேட்டாள்.

இல்லாம நிஜமா நீ ரொம்ப பாவம் . நானா இருந்தா எல்லாரையும் அதட்டி உருட்டி வேலை வாங்குவேன் “. என்று விறுவிறுவென ஆதிரை பேச, மதுவிற்கு களுக்கென்று சிரிப்பு வந்தது.

“ஏன்மா சிரிக்கற?”

வா ஒரு கதை சொல்றேன்என்னோட கொள்ளு தாத்தாவிற்கு  ரொம்ப கோபம் வருமாம். பாட்டியை அடிச்ச கதை எல்லாம் நிறைய சொல்லுவாங்க எங்க பாட்டி. என்னோட தாத்தாவிற்குக் கொஞ்சம் கோபம் வரும். என்னோட அப்பாக்குக் கோபம் வராது. ஆனா  உதவி பண்ண எல்லாம் தெரியாது. ஒரு டீ கூட போட தெரியாதுஉன்னோட அப்பாக்கு சொல்லிச் சொல்லி இப்போ தான் ஒரு டீ போடத் தெரியுது

ஒவ்வொரு தலைமுறைக்கும் ஆண்களிடம் ஒரு பரிமாண வளர்ச்சி ஆகிறது. இந்த தலைமுறைக்கு டீ மட்டும் வந்திருக்கு நம்ம குடும்பத்தில.

என்று மது முடித்த பொழுது. சின்ன ஆதிரை எப்பொழுதோ தூங்கி இருந்தது அவளுடைய நீண்ட ஆழமான  மூச்சில் இருந்து தெரிந்தது.

துணிகளை எடுத்து வைத்த பின், மது அலாரத்தில் நாளைய  ஐந்து மணியைச் சரி பார்த்தாள் . அருகில் வேலை செய்து கொண்டிருந்த கணவனிடம்  “ரவி !!. இன்னிக்கு எனக்கு ஒரு விருது குடுத்தாங்க” என்று சொன்னாள். அவன் ஒரு சின்ன தம்ப்ஸ் அப் காட்டியபடி ஆஃப் ஷோர் அழைப்பை தொடர. ஒரு பெருமூச்சோடு  கண்ணயர்ந்தாள் மது

பின் குறிப்பு : வேலைக்கு போகும் பெண்களின் மன அழுத்த நிலை எப்பொழுதும் உயர்ந்தே இருக்கிறது . குறிப்பாக கொரோனா தொற்று சமயத்தில் 47% பெண்கள் அதிகப்படியான மன அழுத்தத்தை உணர்ந்ததாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. பெண்களின் வளர்ச்சியில் பெருமிதம் கொள்ளும் பொழுதே, ஆண்களின் பரிணாம வளர்ச்சி இல்லங்களில் எவ்வாறு இருக்கிறது என்று கூர்ந்து பார்ப்பது மிக முக்கியம்.

-லட்சுமி சுப்பு

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. Balaji Kannan says:

    Keep Rocking Lakshmi Iam proud of u. May god bless you and your family

  2. Harinee says:

    இந்த தலைமுறைக்கு டீ மட்டும் வந்திருக்கு நம்ம குடும்பத்தில – . Sooper, Lakshmi. How is it like, whatever story you write, it reflects my life, including this one. But innum tea podara parimaanam kooda innum varala inga. . Keep rocking and the final fact is absolutely true……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad