இந்த வருட சிறுகதைப் போட்டியில் உலகளவிலிருந்து பல அருமையான படைப்புகள் கிட்டின. இவற்றிலிருந்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பது பெரும் சவாலாகவெ இருந்தது. இருப்பினும் எமது சிரேஷ்ட நடுவர்களால் நான்கு கதைகள் பரிசுக்குரியவையாகத் தெரிவு செய்யப்பட்டன. பரிசு பெறாது போன சிறுகதைகள் அனைத்துமே ஒரு வகையில் மிகவும் சிறப்புடன் அமைந்திருந்தாலும் நூலிழையில், குறுகிய இடைவெளியில் வெற்றி வாய்ப்பைத் தவற நேர்ந்தன.
இந்த போட்டியின் மூலம் உலகளவில் இருந்து பல எழுத்தாளர்களும் வாசகர்களும் கிடைத்திருப்பதையிட்டு மிகவும் மகிழ்வடைகின்றோம். இந்தியாவிலிருந்து இரண்டு எழுத்தாளர்களும், சிங்கப்பூரிலிருந்து இரண்டு எழுத்தாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்தப் போட்டியில் வென்றவர்களுக்கும், பங்கு பெற்ற அனைவருக்கும் எமது மனாதராந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் நன்றியுடன் தெரிவிப்பதோடு எதிர்காலத்திலும் உங்களது பங்களிப்பு தொடர வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம். |
பரிசு பெறும் சிறுகதைகள்: |
முதலாவது பரிசு – தமிழ்ச்செல்வி இராஜராஜன், சிங்கப்பூர் எழுதிய “நான் ஒரு தடவை முடிவு செஞ்சிட்டா…” |

|
இரண்டாம் பரிசு – சஹானா கோவிந்த், கோயம்புத்தூர், இந்தியா எழுதிய “ஆகாசவேணி” |

|
மூன்றாம் பரிசு – கவுரி சங்கர் , சென்னை, இந்தியா எழுதிய “கிளப் ஹவுஸ் ஜவுளிக்கடை” |

|
நான்காம் பரிசு – மணிமாலா மதியழகன், சிங்கப்பூர் எழுதிய “சவால்” |

|
வாழ்க தமிழ், வளர்க வையகம் |
பனிப்பூக்கள் சஞ்சிகை

|
ISSN 2326-7763 (Online) | P.O. Box 3021, Burnsville, MN 55337, USA |