நீர்ச்சறுக்கு விளையாட்டு
வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் 10,000 ஏரிகள் உள்ளது. இந்த ஏரிகளில் பருவ காலங்களுக்கேற்ப அதற்குண்டான விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. இப்பொழுது மினசோட்டா மாநிலத்தில் வசந்தகாலப் பருவம் நடந்து கொண்டு உள்ளது மக்கள் வசந்த கால அனுபவத்தை அனுபவித்துக் கொண்டு உள்ளனர். எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்ற மரங்களும் வண்ணப் பூக்களால் ஆன பூச்செடிகள் காணப்படுகின்றன.
பருவக் காலங்களுக்குத் தகுந்தாற்போல் உள்ளுர் மக்களும் பொருத்தமான உணவு, உடை, பொழுது போக்குகளை அனுபவிக்கின்றனர். வசந்தகாலத்தில் நடத்தப்படும் போட்டிகளில்ம் நீர் சறுக்கு விளையாட்டு என்பது மிகவும் பிரசித்தி பெற்ற விளையாட்டு. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்கின்றனர்.
இந்த விளையாட்டு பயிற்சி பல விதமான ஏரி மற்றும் ஆற்றல் ஆற்றின் கரையோரங்களில் பயிற்சி எடுக்கின்றனர். நாம் பார்க்க இருப்பது மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள மிசிஸ்ஸிப்பி (Mississippi River) ஆற்றின் கரையில் மக்களுக்காக நீர் சறுக்கு விளையாட்டு விளையாட்டைச் செய்து காண்பித்தனர். இளம் கன்று பயமறியாது என்பது பழமொழிக்கு ஏற்றாற்போல் சிறுவர் முதல் பெரியவர் வரை பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தினர்.
படகின் உதவியுடன் மிகவும் வேகமாக வந்து தண்ணீரில் தாவுவது. குதிப்பது, நடனமாடுவது என பல விதமான திறமைகளை அவர்கள் வெளிப்படுத்தினர். வெளியே இருந்து பார்ப்பதற்கு இந்த சாகசங்கள் சிலிர்ப்பாகவும், ஆச்சரியமாகவும் இருந்தாலும் மிகவும் அபாயகரமானதாகவே தோன்றுகிறது!!
அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்களுக்காக!!
-ராஜேஷ் கோவிந்தராஜன்
நல்ல தகவல், நன்றி