சபிக்கப்பட்டவர்களின் கனவு!
எனக்கு உள்ளே ஒரு நெருப்பு கனன்று கொண்டிருக்கின்றது.
மன அழுத்தம், சிதளூரும் காயங்கள், மற்றும் நெஞ்சு நிறைந்த வலிகள்,
எல்லாம் ஒன்றுகூடி ஒவ்வொரு நொடியும் என்னை விரட்டுகின்றன.
இருள் ஆழமாக, அதிகமாக என்னைப் பின்தொடர்ந்து வருகிறது.
மிகவும் சிக்கலான கோடுகள் என்னைச் சுற்றி வரையப்படுகின்றன.
என் சுதந்திரம் சிறைபிடிக்கப்பட்டபோது யதார்த்தம் செத்துப்போனது.
நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உதிர்ந்த ஒரு பின்னிரவில்,
நிலவு மறைந்து போனது, மீளா இருள் எங்கும் வியாபித்தது.
மின்மினிகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசை கட்டிப் பறந்தன.
நீரோடி வியாபித்த நீர்நிலைகள் வற்றி வறண்டன.
பள்ளத்தாக்குகள் சுக்குநூறாகப் பிளவுபட்டன.
கண்ணுக்கெட்டிய திசையெங்கும் கந்தகப் புகை வியாபித்தது.
மின்னலுடன் இடி முழக்கம், வானதிர்ந்தது.
மிருகங்களின் உறுமல் சத்தம் இதயத்தை ரணமாக்கியது.
இரவின் கறுப்பில், இருண்ட வெற்றிப் பதாகைகள் காற்றில் அசைந்தன.
பேயின் நகம் பட்ட மோசமான கீறல்கள் பெருவலியெடுத்தன.
போர் முடிவுக்கு வந்த பிறகு, பற்கள் மற்றும் நகங்களை நிமிர்த்தியபடி பேய்கள் அங்குமிங்கும் உலாவின.
லூசிபரின் சொந்த நரகத்தில் சபித்து வளர்க்கப்பட்ட கோர்கன்களின் கொடுஞ் செயலால்,
எண்ணற்ற உடல்கள் அங்கே பரிதாபமாகச் சுருண்டு கிடந்தன.
எங்கள் சொந்த நிலத்தை விட்டு வெளியேறும்படி அவர்கள் வானதிரக் கூவினர்.
ஒருவர் பின் ஒருவராகச் சிறைப்பட நடந்த மக்களின் கூக்குரல்கள்,
அவர்களின் காதுகளைச் சென்றடையுமுன் செத்துச் செயலிழந்தன.
எதிரிகளின் மூச்சு மக்களுக்கு விஷ நெருப்பைச் சுவாசிக்கத் தந்தது.
எங்கள் இனிய வாழ்க்கையின் மீது நிலவொளியின் இருண்ட பக்கங்கள் நுழைந்தன.
ஆனாலும், பிரபஞ்சத்தின் அனைத்தையும் பார்க்கும் உணர்வு மட்டும் இன்னும் இழக்கப்படவில்லை.
நரகக் கோபத்தில் பிறந்த மின்மினிப் பூச்சிகள், அழிந்தவர்களின் கடந்தகாலப் பாவங்களை அள்ளிக் கோபத்தில் வீசின.
அடர் மிகு இருளில் அந்தி பேய்கள், நிழல் உலகின் தாதாக்கள் போல நிமிர்ந்து நின்றன…
நான் முன்போல் மிகவும் சுதந்திரமாக இயங்க விரும்புகிறேன்.
மிளிரும் நட்சத்திரங்களைக் கண் முன்னே காண விருப்பம் கொள்கிறேன்.
என்னை உறுதியாக வெளிச்சம் போட்டுக் காட்டும் கடவுளின் கடிகாரத்திற்கு நன்றி!
எங்கள் வீட்டின் பின்புறத்தே அடர்ந்து பரந்துள்ள டான்டேலியன்களைப் பார்க்கிறேன்.
நாங்கள் டான்டேலியன்களைப் போன்றவர்கள்!
எந்தத் தழும்புகளுக்கும் மருந்தளிக்கும் வல்லமைப் படைத்தவர்கள்.
முன்பொருநாள், பதற்றம் கலந்த பயங்கரமான பயத்தின் சுவட்டால், நான் தூங்குவதற்காக அழுதேன்.
ஆனால், நான் இப்போது கண்ணீர் விடமாட்டேன்!
ஏனென்றால், நான் நெரிசலான தொழிற்சாலைகளில் இருந்து வளர்க்கப்படாத கோழி!
நிம்மதியாகப் பறக்கும் ஒரு பில்லியன் பறவைகளில் ஒருவன்.
எனக்கு நன்கு தெரிந்த என் நிலத்தில் என்னை விட்டு விடுங்கள்…
என் அற்புதமான காடுகளில் மட்டுமே என் மகிழ்ச்சியைத் நான் தேடுவேன்!
இறுதியாக… ஒன்றை மட்டும் சொல்கிறேன், நாங்கள் டெய்ஸி மலர் போன்றவர்கள்!
என்றும் சாம்பியன்களாக இருப்பதையே விரும்புகிறோம்!!!.
-தியா-