காதல் எப்படி பேசுகிறது
காதல் எப்படி பேசுகிறது
கன்னக்குழி அழகில்
மெல்லிய இதழ் விரிப்பின் சிவப்பில்
மிரளும் கண் விழியின் தவிப்பில்
பெருமூச்சுக்கு இடையில் வரும் மூச்சில்
புன்னகையின் இதழவிழ்ப்பில்
அன்பு தளும்பும் மென்மொழியில்
சீரற்ற இதயத் துடிப்பில்
தனிமையில், மௌனத்தில் மற்றும்
கண்ணீரில் காதல் பேசுகிறது.
மின்னும் கண் பயத்தில்
இணை சேர்ந்த மகிழ்ச்சியில்
பெருமிதத்தில், பெரும் இதயத்துள்
காதல் பிரகாசத்துடன் நிரம்பி வழிகிறது.
அன்பான முகத்தில்
சிலிர்த்து நடுங்கும் உடலின் அசைவில்
வெட்கத் தொடுதலில்
மகிழ்ச்சி மற்றும் வலிகளின் இடையில்
அன்பான மற்றும்
கரடுமுரடான வார்த்தைகளில்
ஆனந்தத்தில் கரையும் அணைப்பில்
வெட்கப்பட்டு சுருங்கும் விழியசைவில்
தீயாய் தாக்கும் பார்வையில் – மற்றும்
ஒரு முத்தத்தின் பேரானந்தத்தில்
பெரும் புயலுக்கு முந்திய மின்னல் போல
காதல் பேசுகிறது.
-தியா-