\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மார்கழி மாதங்களில் திருப்பாவை

இறை வழிபாட்டில் ஒவ்வொரு மதத்திலும் பல வகைகள் இருப்பினும், பக்தியில் உருகி பாக்கள் பாடி, இறை வழிபாடு செய்வது அனைத்து மதங்களுக்கும் பொதுவான ஒன்று. சங்க இலக்கியத்தில் பெருமளவு பக்தி இலக்கிய நூல்கள் உள்ளன. வேறு எம்மொழியிலும். தமிழ் மொழியில் தோன்றிய அளவு பக்தி இலக்கிய நூல்கள் தோன்றவில்லை. பக்தி இலக்கிய நூல்களில் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்கள் மிக முக்கியமானவை. பன்னிரு ஆழ்வார்களில் “ஒரு பெண்ணின் தமிழ்” என்று அழைக்கப்பட்ட திருப்பாவை எழுதிய ஆண்டாள் பல நூறு ஆண்டுகள் முன்பே வாழ்க்கை நெறிகளை பாக்களாக பாடி அனைவரையும் பாட வைத்தார். அதற்கு முன்னர் பல அவதாரங்கள் எடுத்து, உபதேசம் செய்து சாதிக்க முடியாத வழிமுறையை, அன்னையாக வந்த ஆண்டாள் முப்பதே பாசுரங்களில் எழுதி மக்களை எளிமையாக வழிநடத்தினாள்.

தமிழ் மாதங்களில் ஒன்றான மார்கழி பக்திக்கும், இசைக்கும், கலைகளுக்கும், இறை வழிபாட்டுக்கும் மிக முக்கியமான ஒன்று. பகவான் கண்ணன் “மாதங்களில் நான் மார்கழி ” என்று தன்னை அழைத்து கொண்டதில் இருந்து, மார்கழி மாதத்தின் முக்கியத்துவத்தை நாம் தெரிந்து கொள்ளலாம். ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் விடியல் நேரத்தில், திருப்பாவை, திருவெம்பாவை ஓதுதல் இறைவன் வழிபாட்டில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டாள் தன்னுடைய பிள்ளைத் தமிழால், இறைவனை நோக்கி பாவை நோன்பு நூற்று, முப்பது பாசுரங்கள் பாடி, ரங்கமன்னாரை திருமணம் செய்ததும் மார்கழியில் தான். பகவான் கண்ணன் கீத உபதேசமாக வாழ்க்கை நெறிகளை தந்தையாக நமக்கு கற்று தந்தது போல, ஆண்டாள் அன்னையாக திருப்பாவையின் மூலம் கற்று தந்தாள். “வேதம் அனைத்துக்கும் வித்தாகும் “ என்று அழைக்கப்படும் திருப்பாவை அறியாதவர்கள் அவர்கள் வாழ்க்கையை வாழ்ந்ததில் எந்த பயனும் இல்லை.

“அன்ன வயற்ப் புதுவை ஆண்டாள் அரங்கற்கு

பன்னு திருப்பாவை பல்பதியம்

இன்னிசையால் பாடி கொடுத்தாள் நற்பாமலை

பூமாலை சூடிக் கொடுத்தாளை சொல்லு”.

கலியுகத்தில், கலி புருஷனின் கொடுமையால், மனிதர்கள் துன்புறும் பொழுது இறை வழிப்பாட்டுக்கு பாடல்களையும், நாம சங்கீர்த்தனங்களையும், ஸத்சங்கங்களையும் வழிகளாக பாகவத புராணம் சுட்டி காட்டுகிறது. இவ்வாறாக மார்கழி மாதத்தில், இசை வழிப்பாட்டோடு, இறை வழிப்பாடு செய்வது நமக்கு ஆண்டாள் காட்டிய திருப்பாவை.

திருப்பாவை நிகழ்வு

divya2_620X349
collage_620X349
kalanjali1_620X467
kalanjali2_620X349
divya1_620X645
sahana_620X465
samyuktam1_620X1327
samyuktam2_620X404
sanskriti3_620X559
sanskriti_620X349
sanskriti2_620X1142
Thiruppavai JAN2022 - 01_620 X 465
Thiruppavai JAN2022 - 02_620 X 620
Thiruppavai JAN2022 - 03_620 X 620
Thiruppavai JAN2022 - 05_620 X 465
Thiruppavai JAN2022 - 04_620 X 620
divya2_620X349 collage_620X349 kalanjali1_620X467 kalanjali2_620X349 divya1_620X645 sahana_620X465 samyuktam1_620X1327 samyuktam2_620X404 sanskriti3_620X559 sanskriti_620X349 sanskriti2_620X1142 Thiruppavai JAN2022 - 01_620 X 465 Thiruppavai JAN2022 - 02_620 X 620 Thiruppavai JAN2022 - 03_620 X 620 Thiruppavai JAN2022 - 05_620 X 465 Thiruppavai JAN2022 - 04_620 X 620

மின்னெசோட்டாவில் இந்த ஆண்டு மார்கழி மாதத்தில், நிருத்ய கலாக்ஷேத்ரா நடன பள்ளி, அமெரிக்காவின் பல இதர நடன பள்ளிகளான கலாஞ்சலி நடனப் பள்ளி விஸ்கான்சின், SFO அலபத்ம, சீயாட்டில், சன்ஸ்க்ரிதி பள்ளி, நியூ ஜெர்சி, சம்யுக்தம் நாட்டிய அகாடமி, ஜார்ஜியா மற்றும் DIVYAA thellore SFO  உடன் இணைந்து திருப்பாவையில் உள்ள அனைத்து பாசுரங்களுக்கும் ஒரு நடன வடிவம் கொடுத்தது.  நிருத்ய கலாக்ஷேத்ரா நடன பள்ளியின் இயக்குனர் திருமதி சிவானுஜா பாலாஜி. இவர் உலகப் புகழ் பெற்ற கலாக்ஷேத்ரா நிறுவனம் மற்றும் மறைந்த மூத்த கலைஞர் அடையாறு திரு.கே. லக்ஷ்மன் அவர்களிடம் நடனம் பயின்றவர். நடனம் ஆடிய மாணவர்களுக்கு திருப்பாவை பாசுரங்களை நடன வடிவில் கற்று தந்து அதை அரங்கேற்றியது செவிக்கும், சிந்தனைக்கும்  மாற்றுமல்லாது கண்களுக்கும் மிக அருமையான விருந்தாக இருந்தது. இசையுடனும், நடனத்துடனும், பக்தியும், மனமும் கலக்கும் பொழுது நித்திய பேரின்பம் சத்தியம்.

இந்த நிகழ்வை சாத்தியமாக்கிய ஆதரவாளர்கள் “Gurram Tax”, “MVP cricket academy”, Minu John Realtor” அனைவருக்கும் நன்றி. இந்த மார்கழி மாதத்தில், கோவிட் தொற்றின் சமயத்திலும்  நமக்கு நம் இல்லங்களில் கண்டு களிக்கும் படி திருப்பாவை நடன நிகழ்ச்சியை தந்த குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த நிகழ்ச்சியை அனைவரும் கண்டு கழிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன் படுத்தவும்.

Margazhi Thingal – PAASURAM 1 | Thiruppavai | Andal | Margazhi Utsavam 2021 – YouTube

https://youtube.com/channel/UC3CER3QDMs3gDe24MeqgWbQ

-லட்சுமி சுப்பு-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad