பட்டம் பறக்கும் விழா
மினசோட்டா மாநிலத்தில் உள்ள ஹாரியட் ஏரி பூங்கா (Harriet Lake) சுமார் 470 ஏக்கரில் அமைந்துள்ள இந்த ஏரியின் நடுவில் இந்தப் பட்டம் பறக்க விடும் திருவிழா கடந்த மாதம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. இந்த திருவிழாவில் மக்கள் பலவிதமான பட்டங்களைக் கொண்டு வந்து, அதை மேல் நோக்கிப் பறக்க விட்டனர். இப்பொழுது மினசோட்டாவில் குளிர்காலம் என்பதால் அனைத்து மக்களும் வெளியே செல்வதற்கு ஏதாவது பொழுதுபோக்கு வேண்டும் என்று இந்தத் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். இந்தத் திருவிழாவில் பட்டம் மட்டுமில்லாமல் வந்திருந்த அனைத்து மக்களுக்கும் வேறு பலவிதமான பொழுது போக்கு அம்சங்களும் அமைந்திருந்தன. முக்கியமாக சிறுவர்களுக்கு பனிச்சறுக்கு விளையாட்டு மற்றும் பலவிதமான விளையாட்டுகள் இடம்பெற்றன.
அந்த விழாவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வாசகர்களின் பார்வைக்காக!
Lake Harriet Kite Festival 2022
- ராஜேஷ்
Tags: kite festival