காதல் கிளை பரப்பிய மரம்
ஒற்றை சிவப்பு ரோஜா!
உலர்ந்த மலர்,
சீரற்ற அளவில் அழுத்தியது கையை.
உலர்ந்த சிவப்பு!
திறந்த பழைய புத்தகம்!
என் காலத்தை நினைவுபடுத்தியது.
அது உன்னை இன்னும் எனக்கு,
நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறது.
நான் பொக்கிஷமாக வைத்திருக்கும் பரிசு நீ.
அதை நீ எனக்கு வழங்கிய நாள்,
எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.
உன் கருவிழி உருட்டி என்னை
ஏறிட்டுப் பார்க்கையில் நீ
அங்கேயே என்னை
மையம் கொள்ள வைத்து விட்டாய்.
அன்று நீ என் இதயத்தில் தூவிய விதை
இன்று, முளை விட்டு மூளை வரை,
கிளை பரப்பிய மரமாகி நிற்கிறது.
என் வாழ்க்கையின் முக்கியமான தருணத்தில்,
உன் காதலை என்னிடம் நீ சொன்னாய்.
அந்த இரவின் இனிய ராகம்
இப்போதும் என் காதில்,
காதலாய் இனிக்கிறது.
இந்த ரோஜா
நம்மைப் போலவே விலை மதிப்பற்றது.
உன் போல உடையக் கூடிய தண்டுகளை,
பார்த்தவுடன் தொடப் பயந்தேன்.
அதன் மென்மையான இதழ்கள்,
அடிக்கடி ஒன்றைச் சொல்லிற்று,
அது காய்ந்தாலும் நாமே என்று.
அன்பே உன் முத்தங்களை,
நான் விரும்புவதை இடை நிறுத்த மாட்டேன்.
உன் வலுவான அரவணைப்பில்
நான் நித்தமும் குளிர் காய்வேன்.
மீண்டும், மீண்டும்,
இரவின் நித்திய பிணைப்பில்,
நாம் சாரைகளானோம்.
புத்தகத்தையும் ரோஜாவையும் மூடினேன்,
உயர்ந்தது விலக்கிப் போதையுண்டேன்!
–தியா-