\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

யூக்கிரேன் போரும் இந்தியாவின் போர்த்திறஞ் சார்ந்த சுயாதினமும்

ருஷ்யாவின் திட்டமிட்ட யூக்கிரேன் நாட்டின் ஆக்கிரமிப்பு உலகையே திகைக்க வைத்தது. இது பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஆசிய நாடுகளுக்கும் அதிர்வைத் தந்தது.

இதனை விவரிக்க கம்போடிய பிரதமர் ஹுன் சென், நாம் தொலைதூரம் தாண்டியுள்ள சிறிய நாடு எனினும், இப்பேர்பட்ட சர்வதேச நாடுகள் மத்தியில் ஆக்கிரமிப்பு மிகவும் கவலையைத் தருகிறது என்று 2022 பிப்ரவரி மாதம் 24ம் தேதியில் குறிப்பிட்டார். ஹுன் சென் மலேசியப் பிரதமர் இஸ்மையில் சப்ரி யாக்கப் உடன் வியட்நாமிய நொம் பென் சந்திப்பில் கூறியிருந்தார்.

தென்கிழக்கு ஆசிய ஒன்றிய நாடுகளில் மியன்மார் நாட்டைத் தவிர, இந்தோனேசியா, சிங்கப்பூர், புரூனை நாடுகள் பகிரங்கமாக தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. பொதுவாக தென்கிழக்கு ஆசிய நாடுகள் அவற்றின் வெளிவிகார அமைச்சர்கள், இந்த யூக்கிரேன் ஆக்கிரமிப்புப் போரில் ஈடுப்பட்டுள்ள யாவரும் அதிகளவு போர்முனையை விட்டு, பலவகையிலும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு வற்புறுத்தினர். இதை ராஜதந்திர முறையில் எடுத்துப் பார்த்தால் கிழக்காசிய நாடுகள் அல்லது ஆசியான் குழுமியம், ரூஷ்யாவை சீன-அமெரிக்க போட்டியில் எதோவொரு நடுப்பாற்றல் நாடு என்று எடுத்துக் கொண்டன. இது மட்டும் அல்ல தென் கிழக்காசியவைப் பொறுத்தளவில் 2000 தொடக்கம் 2019 வரை பாரிய யுத்த தளபாட விநியோகிப்பு வர்த்தகராகவும் ருஷ்யா பங்குகொண்டது. சிங்கப்பூர் பாதுகாப்பு அவதானிப்புத் தாபனத்தின் ISEAS-Yusof Ishak Institute படி அமெரிக்க டொலர் 10.7 பில்லியன் தொகை, ஆயுதங்களை ருஷ்யா தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு விற்றது. இதன் காரணமாகவே ஆசியான் நாடுகள் ருஷ்யாவின் பகமையை போதிய அளவில் தவிர்க்கப் பார்க்கின்றன.

சீனா இதுவரை, யூக்கிரேன் நாட்டின் பாதுகாப்பிற்குத் தான் உதவி செய்யும் என்று 8 ஆண்டுகள் முன் உறுதிமொழி கூறியிருப்பினும் இதுவரை ருஷ்ய ஆக்கிரமிப்பிற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. எனினும் தொலைபேசி அழைப்பில் சீனப் பிரதமர், ருஷ்யத் தலைமையை பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு பரிந்துரைத்துள்ளது.

பிப்ரவரி மாத ஒலிம்பிக்ஸ் போது சந்தித்த போது ருஷ்யாவும், சீனாவும் நேட்டோ NATO வளர்ச்சியைத் தாம் கண்டிப்பதாக பிரேரணை விடுத்தின. இதன் பொழுது சீனாவிற்கும் ருஷ்யாவிற்கும் இடையே தமது நட்புக்கு எதுவித எல்லையும் கிடையாது, அதேசமயம் தடங்கல்கள் எதுவும் கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. எனினும், பூட்டினின் யூக்கிரேன் நாட்டு ஆக்கிரமிப்பை சீனா முற்று முழுதாக ஆதரிக்கவில்லை என்று தெரியவருகிறது. சில சீன அரசியல் அமைப்புக்களில் இது சற்றுத் திகைப்பையும் உருவாக்கியுள்ளது. தமது நட்புப் பிரகடனம், பூட்டினின் போர் முனை ஆக்கிரமிப்பு, சீன நல்ல நோக்கை திசை திருப்பியுள்ளது என சிரிம்ஸன் சென்ரர் ராஜாந்திர சிந்தனை மையம் Stimson Center கூறுகிறது.

தற்போதய ஆசியான் நாடுகள் எதிர் விளைவுகள் பல தொடர்ந்தும் அதியுச்ச சீன-அமெரிக்க போட்டகளைச் சார்ந்தே அமைந்தவாறே உள்ளன. கிழக்காசியப் பிரதேசத்தில் சீனாவின் தொடர்ந்த நிலவியல் சார்ந்த அரசியல் உந்தல்கள் ஆசியன் நாடுகளின் நிலைப்பாடு இராஜதந்திர ரீதியில் எவ்வாறு தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதைப் பொறுத்து அமைகிறது. சீனாவும் ஏற்கனவெ சிதைந்தவாறுள்ள தனது அமெரிக்க, ஐரோப்பிய தொடர்புகளை தொடர்ந்தும் பேணிக்கொள்ள முயல்கிறது.

எனினும் ஒரு பெரிய ஆசிய நாடான இந்தியா, ருஷ்யவின் யூக்கிரேன் ஆக்கிரமிப்புப் போரில் எவ்வாறு பதில் சொல்வது என்பதில் குழம்பியவாறுள்ளது. ஐ.நா. வின் பாதுகாப்புச் சபை அவசரகாலக் கூட்டத்தில் ருஷ்யாவின் சுயாதீன யூக்கிரேன் நாட்டின் ஆக்கிரமிப்பு ஐ.நா. கோட்பாட்டை வெளிப்படையாக மீறுகிறது என்று பிப்ரவரி 25ம் தேதி முன்வைக்கப்பட்டது. இதை ஒப்புக்கொண்ட போதிலும் இந்திய ஐ.நா. பிரதிநிதி T.S.திருமூர்த்தி, இந்தியா இதில் தமது வாக்குத் தருவதில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். இதனை அறிந்து கொண்ட யூக்கிரேன் சனாதிபதி வொலோடிமியர் செலென்ஸ்கி Volodymyr Zelenskyy இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி Narendra Modi அவர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு தமது நாட்டு நிலவரத்தை எடுத்துக்கூறி அவருடைய ஆதரவைக் கேட்டுக்கொண்டார். இதன் பின்னர் மோடி வன்முறை நிறுத்தப்பட வேண்டும் என்று இந்திய உள்ளூர் தகவல் வலயங்களில் தெரிவித்தாகவும் சொல்லப்படுகிறது. இதன் முன்னரே மோடி இதனை, பூட்டின் உடனான தனது தொலைபேசிக் கூட்டத்திலும் கூறியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த கூற்று சர்வதேச ரீதியில் பரவப்படவில்லை என்றும் அவதானிக்கப்பட்டது. அடுத்து ஐ.நா வில் ஆக்கிரமிப்புக்கு எதிராக அமோக ஆதரவை பல நாடுகள் தந்திருப்பினும், மார்ச் மாதம் 2ம் தேதி, வாக்களிப்பிலிருந்து இந்தியா பின்வாங்கிக்கொண்டது.

 

உலகில் பக்கஞ்சாராத நாடு இந்தியா

இந்தியா தான் பக்கஞ்சாரத நாடு என்று தன்னைப் பகிரங்கப் படுத்திக்கொள்கிறது. ஆயினும் அதன் நடைமுறையில், போர்முனைத் தந்திரங்களில் ருஷ்யாவிற்கு ஆதரவாகவே தொழிற்படுகிறது. இது காலாகாலச் சரித்திரம். இதில் எவ்வாறு தான் இந்தியா சுயாதினமாக சிந்தித்துச் செயல்படுகிறது என்பது கேள்விக்குறியே. வரலாற்று ரீதியில் எடுத்துப் பார்த்தால் சில விடயங்கள் தெளிவாகும். இந்தியா தனது போர் ஆயுத தளபாடங்களுக்கு 60-70% ருஷ்யாவைத் தான் நம்பியிருக்கிறது. இதனால் தான் ருஷ்ய ஆக்கிரமிப்பு, அத்துமீறல்களுக்கு எதிர்ப்புச்சொல்வதில் தயங்குகிறது. இது இந்திய வரலாற்று சமசீரமைப்புக் கொள்கை யுக்தியாகப் பேணப்பட்டு வருகிறது.

இந்திய-ருஷ்யா, ஒருவர்க்கு ஒருவர் சாதகமான தொடர்புகள் ஆரம்ப கால பனிப்போர் Cold war காலத்தில் இருந்து ஆரம்பித்தது. அதன் போது சொற்ப காலம் இந்தியப் பிரதமர் ஜவர்கல்லால் நேரு Jawaharlal Nehru, மற்றும் சீனத் தலைவர் சௌ என்லய் Zhou Enlai தனிப்பட்ட சினேகத்தினால் அணிசாரா நாடுகள்  Nonaligned Nations அமைப்பு உருவாக்கப் பட்டுப் பேணப்பட்டது. எனினும் இது 1962 சீன-இந்திய நாட்டு எல்லைத் தகராறுகளால் செயலளவில் வலுக்குறைய ஆரம்பித்தது.

சீனா பாக்கிஸ்தானுடன் ஒட்டிய உறவை உருவாக்க, 1971இல் இந்தியா சோவித் யூனியனுடன் நட்பு, நல்லுறவு, கூட்டு முயற்சி ஒப்பந்தம் செய்து கொண்டது. ஒரு பக்கத்தில் அணி சேரா நாடு என்று தன்னைக் கூறிக்கொள்ளினும் மறுபகுதியில் இந்தியாவின் சார்பு சோவித் பக்கமாகவே இருந்தது. இதனால் சோவித்துக்கு மற்ற நாடுகளுடன் கோளாறுகள் வந்தால் இந்தியா நடுநிலை பேணி உதவ முன்வந்தது. இது தொடர்ந்தும் இந்திய-சோவித் நட்பைப் பேண வழிவகுத்தது.

1979 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சுயாதீன ஆப்கானிஸ்தான் நாட்டை ஆக்கிரமித்த போது, தமது நடுநிலை காரணமாக அத்துமீறலை தவறு என்று தெரிவித்தது. ஆயினும் ஐ.நா. சபையில் சோவித் யூனியன் ஆக்கிரமிப்புக்கு எதிரான கண்டனங்கள் யாவற்றிலும் பின்வாங்கிக்கொண்டது. இந்தியா தனது சோவித் தொடர்பு, பகிரங்க அத்துமீறல்கள், ஆக்கிரமிப்புகளிலும் முக்கியமானது என்று கருதிக் கொண்டது.

ருஷ்ய சுயாதீன யூக்கிரேன் நாட்டின் ஆக்கிரமிப்புப் போர், இந்தியாவின் இருமுக உணர்ச்சிப் போக்கையும் அதன் இரட்டைத்தன்மைத்துவ முரண்பாடுகளையும் வெளிப்படுத்துகிறது.

முதலாவதாக வடக்கில் இமயமலைப் பிரதேசத்தில் சீன முன் பெயர்வு இதில் எல்லைப் பிரச்சனைகளில் தனது முரண்பாடான நிலைப்பாடுகள். 2020 இல் இந்திய – சீன படையினரிடையே இதன் காரணமாக உயிரிழப்புக்கள் உண்டாயின. இதன் போது இந்தியா – சீன கோரிக்கை முன்வைப்பைக் கண்டு கொள்ளாமல் தவிர்த்து இந்த இமயமலை விடயம் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை என்று கூறிக் கொண்டது. இது தற்போதய யூக்கிரேன் நாட்டு நிலைவரத்தை உணரமறுக்கும் இரட்டைத் தலைநிலை எனலாம்.

இரண்டாவதாக ருஷ்ய அத்துமீறல், ஆக்கிரமிப்புக்களை எடுத்துப் பார்த்தால் அது தனதும் நாட்டுப் பாதுகாப்புக் கொள்ளகளுக்கும் எதிராக அமைந்து கொள்கிறது. ஒரு புறத்தில் சீனாவிற்கு எதிராக நாற்கர பாதுகாப்பு உரையாடல் (Quadrilateral Security Dialogue – Qaud) பாதுகாப்பு அமைப்பை ஜப்பான், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா என்று செயற்பட முனைந்தாலும், இன்னொரு பக்கத்தில் ருஷ்யாவுடனான இராணுவ தொடர்புகளையும் அதிகரித்துள்ளது. டிசம்பர் 2021 இல் இந்திய மோடி மற்றும் ருஷ்ய பூட்டின் ஒன்று சேர்ந்து இராணுவத் தொழிநுட்பங்கள், மற்றும் புதிய ஆயுதங்களை அடுத்த தசாப்ததிற்கு உருவாக்கிக் கொள்ளவும் சம்மதித்துக்கொண்டனர்.

சீனாவிற்கு எதிரான நாற்கரப் பாதுகாப்பு, அதே சமயம் ருஷ்யாவுடன் சேர்ந்து கொள்ளுதல் இதுவரை பெரியதாக இந்தியாவிற்குத் தென்படவில்லை. ஆயினும் ருஷ்ய அத்துமீறிய சுயாதீன யூக்கிரேன் நாட்டு ஆக்கிரமிப்புப் போர் இதனை நிச்சயம் மாற்றிவிட்டது எனலாம்.

அமெரிக்கா ருஷ்யாவிடம் இருந்து போர்முனை ஆயுதங்கள் வாங்குவதை, 2017 தடைகள் சட்டத்தின் மூலம் அமெரிக்காவின் எதிரிகளை எதிர்கொள்வது – என்றதன்படி முட்டுக்கட்டை போடலாம். இந்தச் சட்டத்தினால் துருக்கி நாடு 2020 இல் ருஷ்ய S-400 மேற்பரப்பில் தாக்கும் எறிதாங்கி அமைப்புகள் (surface-to-air systems) வங்கியமைப்புக்கு, அமெரிக்க வர்த்தக தடுப்பு நடவடைக்கைகள் எடுக்கப்பட்டது. அதே சமயம் இந்தியா இதே ஆயுதத்தை ருஷ்யாவிடம் இருந்து 2021இல் பெற்ற போது, இந்தியாவின் தொடர்ந்த ஆதரவுக்காக அமெரிக்கா கண்டும் காணாதும் இருந்தது.

ஆயினும் ருஷ்ய சுயாதீன யூக்கிரேன் நாட்டு அத்துமீறல், ஆக்கிரமிப்புப் போரில் இந்தியா பின்வாங்கியதால் அமெரிக்க சனாதிபதி வெளிப்படையாகவே எரிச்சலுடன் இருந்ததும் அவதானிக்கப்பட்டது. அமெரிக்கா இந்தியாவின் நிலைப்பாடு காரணமாக வருங்காலத்தில் தடுப்பு நடவடிக்கை எடுக்கவும் வழிமுறை உண்டு. அமெரிக்கா நேரடியாக இந்தியாவுடன் பகையாளியாக மாறவிடினும், சீனாவிற்கு எதிரான இந்தியாவிற்குத் தேவையான நாற்கர பாதுகாப்பு Quad முயற்சிகள் சிறிது சிறிதாகவும் பிற்போடவும் முனையலாம். இந்திய,மற்றைய ஆசியான் நாடுகளைப் போன்றதல்ல. இந்தியா ஏறத்தாழ 1.4 பில்லியன் மக்கள் கொண்ட உலகின் 6வது பொருளாதார வலுப்பெற்ற நாடு. இந்தியா தொடர்ந்து முன்னேற, அதன் இராஜதந்திரக் கொட்பாடுகளை நாட்டிற்குச் சாதகமாக அமைந்துக்கொள்ளவேண்டும்.

இந்தியா – யூக்கிரேன் நிலைவரத்தில் யதார்த்தமான, மனிதாபிமான சர்வதேச நோக்கைப் பின்பற்றிக்கொள்ளலாம், இல்லையேல் தனது நாட்டின் சுய நிலைப்பாட்டை வைத்து முடிவெடுத்துக்கொள்ளலாம். இது இந்தியா எவ்வாறு அடுத்த இந்து-பசுபிக் போர்முறையில் பங்கு பெற வாய்ப்புக்கள் உண்டாகும் என்பதனையும் நிர்ணயிக்கலாம்.

    ஊர்க் குருவி  –

உசாத்துணை

1 Countering America’s Adversaries Through Sanctions Act | U.S. Department of the Treasury

2 Ukraine: Did China Have a Clue? • Stimson Center

3 Non-Aligned Movement (NAM) – The Nuclear Threat Initiative (nti.org)

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad