\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பொங்கும் பூந்தோட்டம்

மினசோட்டாவில், மங்கு பனி ஓய்ந்திட, மாரி மழை பெய்திட பொங்கி வந்தது வசந்தகாலம். மரகதப் பச்சை இலைகள் ஒரு புறம். மஞ்சள், செம்மஞ்சள், வெள்ளை, இளஞ் சிவப்பு, சிவப்பு, நாவல், என மலர்ந்திடும் பூக்கள் மறுபுறம். வெப்பவலயத்திலிருந்து வட அமெரிக்காவில் வந்து குடியேறி வாழும் தமிழர்கள் பலருக்கு ஆரம்பத்தில் வட அமெரிக்க காலநிலை சற்றுப் புதிராகவும் அல்லது கேள்விக் குறியாகவும் அமையலாம். குறிப்பாக, வீட்டின் பிந்தோட்டத்தில் தாவரங்கள், பூக்கள், மரங்கள் வளர்க்க விரும்புவோர்க்கு எப்போது, அவற்றை விதைப்பது என்ற சந்தேகம் தோன்றுவது சகஜம். 

ஏப்ரல் மழை மே மாதங்கள் பூக்கள் தரும் என்பது இவ்வூர் பழமொழி. மினசோட்டா காலநிலை தொடர்ந்து மாறி வருகினும் பொதுவாக மே மாதம் 15ம் திகதிக்கு அப்பால், உறைபனி தாக்கம் இருக்காது. அதாவது வெளியில் நட்ட செடி அல்லது பயிர்கள் திடீரென அதி குளிரினால் உறைந்து விட மாட்டாது. மாறாக இந்தச் சமயத்தில்  மினசோட்டா மண்ணும் அதன் உள் வெப்பநிலையும் உயர்ந்து தாவரங்களுக்கு ஆதரவாக அமையும்.

நீங்கள் புதிதாகப் பூந்தோட்டம் இடுகிறோர்களோ, இல்லை ஏற்கனவேயிருந்த பூந்தோட்டத்தைப் பேண விரும்புகிறீர்களோ எதுவாயிருப்பினும் ஒரு சிறு திட்டம் போட்டு ஆரம்பிப்பது சாலவும் நன்று. இதன் ஒரு காரணம் மினசோட்டா தாவர வளர்வு காலம், வெப்பவலயம் (Tropical) போன்றது அல்ல; இம்மாநில வெப்பதட்பத்திற்கேற்ப மண்வளம் மாறுபடுவதால், செடிகள்/பயிர்கள் தழைக்கும் காலம் சற்று மட்டுப்பட்டது ( Growth Zones பற்றிய குறிப்பு கீழே தரப்படும்). 

மினசோட்டாவில் வழக்கம் போல ஏப்ரல் மாதமே தாவரங்கள் துளிர் நேரம். இது பனிக்கு தெற்கு நோக்கிப் புலம் பெயர்ந்த பறவைகள் மீளும் சமயமும் ஆகும். வசந்த காலம், ஆரம்ப கோடைக்காலங்களில் பூச்செண்டுக் கடைகளில் யாவும் பச்சைப் பசேலெனக்காணப்படும். சில செடிகள் அவ்விடம் பூக்கவும் ஆரம்பித்தும் விடும். ஆனால் சற்று சிந்தித்து திட்டமிட்டு யூலை, ஆகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில் பூக்கக் கூடியவற்றையும், அறுவடை செய்யக் கூடிய தாவரங்களை பார்த்து, கேட்டு வாங்குதல் உங்களுக்குப் பயன் உள்ளதாகவும் அமையும். மேலும் தெளிவாக நான்கு பருவ காலங்கள் உள்ள எமது மாநிலத்தில் பச்சைத் தாவரங்கள் (Evergreen), நிறம் மாறும் தண்டு, இலைகள் உடைய தாவரங்கள், பனிகாலத்தில் பறவைகளுக்கு உதவும் பெரிகள், சிறிய பழங்கள் தருபவை பனிக்காலத்திலும் பரவசம் தரலாம்.

இதோ நீங்கள் வட அமெரிக்காவில் உடன் ஆரம்பிக்க கூடிய தாவரப் பட்டியல். இவற்றில் பல தமிழ் மண்ணில் வளராதவை ஆயினும், மினசோட்டாவில் மனமகிழ்ச்சி தரும் தாவர வகைகள் இவை.

கீழே குறிப்பிடப்படும் தாவரங்கள் யாவும் ஃபிப்ரவரி மாதக் கடைசியிலிருந்து வீட்டினுள், செயற்கை ஒளியுடன் விதைகளாக ஆரம்பித்து, பின்னர் மே மாத மத்தியில் வெளியே நடக் கூடியவை. ஆயினும் சற்று இலகுவாக ஆரம்பிக்க விரும்பினால் மே மாதம் கடையில் வாங்கியும் வளர்த்துக் கொள்ளலாம். 

மினசோட்டாக் கொல்லையில் வளரும் உணவுத் தாவரங்கள்

நிழலில் வளரக்கூடிய காய்கறி வகை
Arugula
Beet greens
Broccoli
Chard
Cucumbers – வெள்ளிரிக்காய்
Kale
Lettuce -கீரை வகை
Peas
Radishes
Scallions – இலை வெங்காயம்
Spinach – கீரை வகை
Squash – சீமைப்பூசனி
புதியவர்கள் வளர்க்கக் கூடிய இலகு காய்கறி வகைகள்
Eggplants – கத்தரிக்காய்
Ground Cherries
Onions – வெங்காயம்
Peppers – மிளகாய்
Tomatoes – தக்காளி
Brussels sprouts
Tomatilios
Cabbage
Kale
Lettuce
Kohirabi
Turnips
Rutabagas
Cucumbers
Carrots
Squash
Zuccini
Peas
Chard
இலகுவாக வளரும் மூலிகை Herbs வகை
Basil
Chives
Cilantro – மல்லிக் கீரை
Dill
Chervil
Summer Savory
Oregano
Parsley
Sage
Rosemary
Thyme
Chamomile

அழகிற்குரிய தாவரங்கள்

நிழல் தழுவும் பல்லாண்டு பூஞ்செடிகள் (Perennials)
Bleeding Heart (Dicentra spectaiblis)
Forget-me-not (Brunnera)
Coralbell (Heucheara)
Japanese Painted Fern (Athrium nipponicum)
Barrenwort (Epimedium)
Foamflower (Tiarella)
Wild Geranium (Geranium maculatum)
Jacob’s Ladder (Polemonium)
Lungwort (Pulmonaria)
Meadow Rue (Thalictrum)
Spiderwort (Tradescantia)
Sweet Woodruff (Galium odoratum)
Toad Lilt (Tricyrtis)

 

நேரடி சூரிய ஒளியை நாடும் பல்லாண்டு பூஞ்செடிகள்
Purple Coneflower (Echinacea)
Black-eyed Susan (Rudbeckia)
Bee Balm (Monarda)
Butterfly Flower & Milkweed (Asclepias) எருக்கலை
Hyssop (Agastache)
Aster (Aster)
Blazing Star (Liatris)
Purple Prairie Clover (Dalea)
Delphinium (Delphinium)
Lupine (Lupinus)

 

வருடாந்த நிழல் தழுவும் பூஞ்செடிகள் (Annuals)
Begonia
Browallia
Coleus
Impatience
Torenia

 

வருடாந்த சூரிய ஒளியை நாடும் பூஞ்செடிகள்
Cleome (Cleome hassleriana)
Cosmos (Cosmos sulphureus , Cosmos bipinnatus)
Fan Flower (Scaveola aemula)
Mexican Sunflower (Tithonia rotundifolia)
Zinnia ( Zinnia American, Zinnia acerosa)

 

மினசோட்டா காலநிலை சார்ந்த குறிப்பு

பூகோள பயிர்ச் செய்கை கால நிலை அட்டவணை Zone Chart – என்ற ஒன்றை நாம் வட அமெரிக்காவில் பாவித்தும் மினசோட்டாவில் வாழக் கூடிய தாவரங்களை தேர்வு செய்யலாம் .

மினசோட்டாவில் பெரும்பாலான தமிழ் மக்கள் மினியாப்பொலிஸ், செயின் பால், றொச்செஸ்டர் பாகங்களில் வாழ்வதால் Zone 3-4 தாவரங்கள் பொதுவாக பல்லாண்டுகள் வாழக்கூடியவற்றை தெரிந்து கொள்ளலாம்.

 

ஏனைய அழகான zone 5 – 10 தாவரங்கள் கோடை காலத்தில் மாத்திரம் வெளியிலும் பின்னர் சில தாவரங்கள் இல்லையுதிர் காலம் உள் வீட்டுக்கு எடுத்து வைத்தும் பேணிக் கொள்ளலாம். இவற்றிற்கு உதாரணம் மல்லிகை, முல்லை, செவ்வரத்தை, கனகாம்பரம், கற்பூர வெள்ளி, வல்லாரை, ரம்பை, கறிவேப்பிலை போன்ற வெப்ப வலயத் தாவரங்கள். செவ்வந்தி, மணி வாழை, வாழை பொதுவாக மினசோட்டாவில் ஓராண்டு கோடை கால வளர்ப்புத் தாவரங்கள் மாத்திரமே.

மேலே பட்டியல்களில் தரப்பட்ட தாவரங்கள் யாவும் நீங்கள் உள்ளூர் மினசோட்டா பூந்தோட்டக் கடைகளில், மற்றும் மளிகைக்கடைகள் அருகாமையில் வசந்த கால தாவரக் கூடாரங்களில் வாங்கிக் கொள்ள முடியும்.

 

  • யோகி அருமைநாயகம்

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad