\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

விலங்கு

விலங்கிட்டு எனைப் பூட்ட

விலங்கா நான்?

விளங்காத இந்நினைப்பை

விலக்கவும் இயலவில்லை!

விலங்கிடப் பட்டேன் நான்!

விலங்காக நடத்தப்பட்டேன்!

விலகவும் இயலவில்லை

விளக்கவும் எவருமில்லை!

விளக்காய் ஒளி வீச

விழைந்தே அவதரித்தேன்!

விலங்கான மனிதர்களால்

விளங்காத துயரடைந்தேன்!

விலகிப் போகையிலே

விழவைத்துச் சிரித்தனர்!

விளங்கா வயதினையும்

விதைக்குள்ளே ஒழித்தனர்!

விலக வேண்டும் இனவெறி!

விலக்க வேண்டும் வன்முறை!

விளக்க வேண்டும் மானுடர்க்கே

விரிவாக அஹிம்சைதனை!!

    • வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad