\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

குடும்பத்தலைவி

குடும்பம் என்பது மரமானால்- அதில்

அடியும் வேரும் நீ தானே!

பாசக் கிளைகள் 

விரிந்தோட-அதில்

அன்பாய் இலைகள் நீ தானே!

பிள்ளைகள் என்பது

விழுதாகும்- அது

பிரிந்து வேர் ஊன்ற

பெரிதாகும்!!

மழையோ, புயலோ

வந்தாலும்- அது

உந்தன் உறுதியில் 

கரைந்தோடும்!

உன் உழைப்பில்

பெரிதாகும்- மரம்

உலகம் வியக்க

செழித்தோங்கும்!

குடும்பத் தலைவி

பெண்ணே நீ

உந்தன் – சிரிப்பில்

பூ பூக்கும்!!

உலகம் இயங்கும்

உன்னாலே – வணங்கிப்

போற்றுவோம் என் நாளும்!!

  • இளங்கோ சித்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad