மாண்ட்ரீல் நோட்ர டாம் நெடுமாடக்கோயில் (Notre-Dame Basilica of Montréal)
கனடாவின் பிரஞ்சு மாகாணமாகிய கியூபெக்கில், பிரதான நகரங்களில் ஒன்று மாண்ட்ரீல் (Montreal). மாண்ட்ரீல் கியூபெக் மாகாணத்தின் இரண்டாவது சனத்தொகை உடைய நகரமாகும். இந்த நகரம் மே மாதம் 17ம் தேதி, 1642 ஆம் ஆண்டு “மேரியின் நகரம்” (Ville-Marie) என்ற பெயரில் தாபிக்கப்பட்டது. மாண்ட்ரீல் நகரம் பழைய மாண்ட்ரீல், மாண்டரீல் என பிரதேச ரீதியில் பிரிக்கப்பட்டுள்ளது.
பிரஞ்சு நாட்டு சல்பிசன் எனும் ரோமன் கத்தோலிக்கர் 1657 ஆம் ஆண்டு, ‘மேரியின் நகர்’ என்றழைக்கப்பட்ட தற்போதைய மாண்ட்ரிலை வந்தடைந்தனர். அவர்கள் 1840 வரை அந்நகரை ஆண்டனர். அவர்கள், தமது ஆட்சி வட்டாரத்தை, ‘புனித மேரி மாதா வட்டாரம்’ (parish) என்று அழைத்துக் கொண்டனர். அதன் போது ‘நோட்ர டாம் தேவாலயம்’ 1672இல் தாபிக்கப்பட்து. இதன் போது அதன் உள்ளமைப்பை பிரன்ஸுவா பைலாஜியே (François Baillairgé) என்னும் சிற்பி அமைத்தார். இத்தக்கட்டிட வேலைகள் 1795 வரை நடைபெற்றது. இதன் பின்னர் தேவாலயமானது 1818இல் ஆரம்பித்து, பிரதான மாண்ட்ரீல் நெடுமாடக்கோயிலாக 1822 வரை இருந்தது.
பெருகிவந்த மக்கட்தொகைக்கு சேவை செய்யும் வகையில், தேவாலயம் மீண்டும் 1824இல் 10,000 பக்தர்களைக் கொள்ளும் அளவில் புதுப்பிக்கபட்டது. இந்தக் கட்டட வேலைகள் 1830களில் முடிவிற்கு வந்தது.
‘மாண்ட்ரீலின் நோட்ர டாம் நெடுமாடக்கோயில்’ (Notre-Dame Basilica of Montréal) பழைய மாண்ட்ரீல் பிரதேசத்தில் மேரி மாதாவிற்கு யூலை மாதம் 1ம் தேதி, 1829இல் அர்பணிக்கப்பட்டது. அதன் அருகில் செயின்ர் சல்பிஸ் கத்தோலிக்க கல்விகூடமும் (Saint-Sulpice Seminary) காணப்படும். இந்தத் தேவாலயத்தில் உட்புறம் கண்களைக் கொள்ளையிடும், மிகவும் கவர்ச்சியான கோத்திக் மறுமலர்ச்சிக் கட்டக் கலையை (Gothic Revival architecture) கொண்டதாகக் காணப்படுகிறது.
உள்ளே கூரையமைப்பானது கரும் நீலத்தில் இருந்து பலவகை நீலம்,ஊதா சார்ந்த வர்ணங்களைக் கொண்டு அமைந்திருக்கிறது. இதனுடன் மிகவும் நுணுக்கமான மரவேலைப்பாடுகளும் தூண்களாகவும், மற்றும் கத்தோலிக்கப் புனிதர்கள் (saints) சார்ந்த சிற்பங்களும் அமைந்துள்ளன. பல கதவுகள், யன்னல்களும் பல நிறச்சாய்வு படைத்த பன்னிறக் கண்ணாடிகள் கொண்டும் ஜொலிக்கின்றன.
தேவாலயமானது இன்னும் ஒரு பிரமாண்மான் வாயு (Casavant Frères pipe organ) இசைக் கருவியைக் கொண்டமைந்தும் இருந்த து. இந்த இசைக்கருவி 1891ம் ஆண்டில் இணைக்கப் பட்டதாம். இது நான்கு தட்டுப்பலகைகளையும் (keyboards), 7000 தனித்தனி இசைதரும் குழாய்களையும் கொண்டமைந்தது.
நீங்கள் கத்தோலிக்க மதத்தினரோ இல்லையோ வடஅமெரிக்காவில் 400 ஆண்டுகள் முன்னர் பிரெஞ்சு ஐரோப்பிய வாழ்வு முறைகளை அறிய இந்த தேவாலயம் நல்லதொரு எடுத்துக் காட்டாகும்.
-ஊர்க்குருவி
Tags: Basilica, Montréal, Notre Dame