போர் வீரர்களின் நினைவு நாள் கொண்டாட்டம் 2022
அமெரிக்காவில் மே மாதம் கடைசி திங்களன்று ஒவ்வொரு வருடமும் போர் வீரர்களின் நினைவாக அவர்களுக்கு மரியாதை செலுத்தும் தினமாக (Memorial Day) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அரசு விடுமுறை தினமாக கொண்டாடப்படுகிறது. அந்தந்த நகரில் இதை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள அனைத்து நகரங்களிலும் போர் வீரர்களின் நினைவு இடங்களை அலங்கரித்து அன்றைய தினம் குடும்பத்தினர் சென்று அவர்களுடைய சமாதியில் மலர் வைத்து நினைவுகூர்ந்து அவர்களுடைய வீரதீரச் செயல்களைப் பிறருக்குத் தெரிவிப்பார்கள்.
மினசோட்டா மாநிலத்தில் உள்ள உட்பரி நகரில். போர் வீரர்கள் நினைவாக இந்த தினம். இங்கு உள்ள நகராட்சி கட்டிடத்தில் நடைபெற்றது. உள்ளூர் மாநகர முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினர் பங்கெடுத்து இந்த விழாவைச் சிறப்பித்தனர். அவர்களுடைய. நினைவு, ராணுவத்தில் பெற்ற மற்றும் வாழ்க்கையில் பெற்ற அனுபவத்தை இங்கு பகிர்ந்தனர்.
போர் வீரர்களின் நினைவாக அவர்களுக்கு வானத்தை நோக்கி துப்பாக்கிக் குண்டுகள் முழங்க மற்றும் அவர்களுடன் பயிற்சி பெற்ற மற்ற சக வீரர்கள் வந்திருந்து இந்த விழாவை சிறப்பித்தனர். இளைஞர் முதல் வயதானவர் வரை அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள். அவர்களின் நினைவாகத் துப்பாக்கி குண்டுகள் முழங்கியதும் மிகவும் சிறப்பாக இருந்தது.
அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்களுக்காக!!