வாலி
வில்லாடி வெல்ல முடியாததை ஒளித்து
மறைந்தாடி வதைத்தாய் வாலியை அன்று!
சொல்லாடி வெல்ல இயலாததை நினைத்து
நோயாடிக் கொண்டாயோ வாலியை இன்று?
விண்ணுலகில் வாழ்த்திசைக்க இசை வித்தகரை
வரிந்து வாரங்களாகவில்லை! விளைந்த சோகம்
விலகுமுன், அவர்உனை வாழ்த்தும் பாடலுக்கு
வரியெழுத விரைந்தழைத்தாயோ எங்கள் வரகவியை?
தரைமேல் பிறந்து தண்ணீரில் மிதந்தான்!
மனம்போன போக்கிலே மனிதனவனும் போனான்!
அளவோடு ரசித்து அளவின்றிக் கொடுத்தான்!
ஊனக்கண்ணால் பார்த்து யாவும் குற்றமென்றாயே!
மெய்யென்று மேனியை யார் சொன்னது?
மூன்றெழுத்து மூச்சு முடிந்தாலும் பேச்சிருக்கும்!
விதிகொன்று மதிகொண்டு எழுதிய அவனை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்
ஏனென்று கேள்வி கேட்டு வாழ்ந்தவன்
உனைக் கண்டதும் கேட்க மறுத்தானோ?
தவறிழைத்தவன் தேவனானாலும் விட மாட்டானே!
தற்போது தவறிழைத்த உனை என்செய்வானோ?
– ரவிகுமார்
மண்ணாள் மன்னர் இறந்திட இரங்கினர்
பண்ணாள் பாணர் பண்டை காலத்தில்
மண்ணை துறந்து விண்ணை அடையும்
அன்னை தமிழுக்கு அணியாம் வாலியால்
விண்ணும் மண்ணும் மோதும் நிலையும்
இந்நாள் வந்தால் சாலவும் தகுமே
வாலியை இழந்தது பேரிழப்புதான்
அந்த இழப்பிற்காக
நீங்கள் எழுதிய கவிதையை படித்து
வாலியின் பிம்பமாய் தங்களை பார்கின்றேன்…