தாய்லாந்து நாட்டின் புது வருட தினம் 2022 (SONGKRAN)
ஐக்கிய அமெரிக்காவில் பல்வேறு நாடுகளின் மக்கள் குடியேறி உள்ளனர். பல தரப்பு மக்கள் தங்களது கலாச்சாரம் சார்ந்த சிறப்புப் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்கள் அனைத்தையும் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இன்றைய தினம் நாம் பார்க்க இருப்பது தாய்லாந்து மக்களின் புது வருட விழாக் கொண்டாட்டம்.
மினசோட்டா மாநிலத்தில் செயின்ட் பால் மாநகரில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தாய் மக்களின் கலாச்சாரம் சார்ந்த உணவு வகைகள், பாரம்பரிய நடனங்கள் , இசை என அனைத்தும் மைதானத்தை அலங்கரித்தது. தாய்லாந்துக்கு நேரில் சென்று வந்தது போன்ற உணர்வைத் தந்தது இந்தத் திருவிழா,
அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில உங்களுக்காக!!!
- ராஜேஷ் கோவிந்தராஜன்