\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

லம்பேர்ட்டனில் பண்டைய இரும்புத்தொழில்

BlackSmith_1_520x393இரும்புத் தாதுப் பொருள் பண்டையத் தமிழர் நாகரீகத்தில் இடம்பெற்ற முக்கியமானதொரு உலோகம். மினசோட்டா மாநிலமும் சென்ற இரண்டு நூற்றாண்டுகளில் மிகப்பெரிய இரும்புத்தாதுப் பொருள் அகழ்வுப் பிரதேசமாக இருந்து வருகிறது.

தமிழ் வரலாற்றிலும் பாண்டிய தொன்மை காலத்தை  இரும்பு காலமாக அகழ்வாராய்ச்சியாளர்கள் வகுத்து எமது தமிழ் நாகரீகத்தை படிக்கிறார்கள்.

இயந்திரமயமாக்கபட்ட நகர வாழ்க்கையில் நம்மில் பலருக்கு இரும்பினால் ஆன தளவாடங்களை வாங்கத் தெரியுமே தவிர அவை எவ்வாறு உருவாக்கப் பட்டன என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

blacksmith_7_520x579என்னதான் யூடியூப்பிலே கானொளியாகப் பார்த்தாலும் நேரடியாகத் இரும்புத் தொழிலைப் பார்த்து அறிந்து கொள்ள எமது மினசோட்டா மாநிலத்தின் தென்மேற்குப் பாகத்தில் பசேலென சோளவயல்களின் மத்தியில் இருக்கும் லம்பேர்ட்டன் என்னும் விவசாயக் கிராமம் வழிவகுக்கிறது.

லம்பேர்ட்டனில், ஹான்ஸ்லிக் இரும்பு கொல்லர் தொழிற்சாலை
(Hanzlik BlackSmith Shop) உள்ளது. இந்தத் தொழிற்சாலை இப்பகுதியில் 1895 தொடங்கி இயங்கி வருகிறது. இவ்விடம் விவசாயத்திற்கு, குதிரைகளின் இலாடம், உழவுக்குத் தேவையான ஏர்க் கலப்பைகள் தொடங்கி, வீடு வாசலிற்குத் தேவையான தாழ்ப்பாள் போன்ற சகலத்தையும் இரும்புத் தாதுப் பொருளில் இருந்து உருவாக்கி வந்துள்ளனர்.

blacksmith_5_520x435பழைய உரிமையார்கள் இறந்த பின்னர், வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு நபர்கள் பொறுப்பெடுத்து நடத்தி வருகின்றனர். இன்றும் லம்பேட்டன் வரலாற்றுச்சபை வருங்கால சந்ததியினருக்காக இந்த இரும்புக் கொல்லையைப் பேணி வருகின்றனர். தற்பொழுது Mike Hubert என்னும் 27 வயது இளைஞரும், அவர் குடும்பமும் தமது விவசாய மூதாதையருக்கு பெருமைசேர்க்கும் வகையில் இந்த தொழிற்சாலையைக் கண்காட்சிக்காகவும், இரும்பியில் கலையை வளர்க்கவும்பேணி வருகிறார்கள்.

BlackSmith_3_520x511Mike Hubertன் தந்தையார் Larry Hubert, மற்றும் அவர்பாட்டனார் Lawrence Hubert இருவருமே விவசாயிகள், . பாட்டனார் விவசாய உபகரணங்களை அமைக்கத் தேவையான அளவு இரும்புத்தொழில் நுணுக்கங்களைத் தெரிந்து வைத்திருந்தாராம்.

blacksmith_4_620x482தற்போதைய பேரன் இன்றும் தமது நெருப்பு உலையில்இரும்பை உருக்கப் பாவிப்பது அவர் பாட்டனார் சேர்த்து வைத்த நிலக்கரியே என்று பெருமையாகச் சொன்னார்.

தமிழராகிய நாம் ஒரு காலத்தில் ஊர் ஊராக வைத்திருந்த இரும்பாலை உலைகள் உளிகள், கத்திகள், வாள், அறுவடை அரிவாள், சத்தகம்,
பாக்கு வெட்டி, கோவில், கட்டடத் தூண்கள், கோபுரங்கள், மணிகள் போன்றவற்றை உருவாக்கி வந்தன.  நவீனமயமாக்கங்களினால் பல இரும்பாலைகள்  மறைந்து விட்டன, மேலும் மறைந்து கொண்டு இருக்கின்றன,

BlackSmith_2_520x511ஆயினும் இதைப்பற்றி எமது இனிய வாரிசுகளுக்கு சொல்லிக் கொடுக்க எமது மாநிலமான மினசோட்டாவில் வாய்ப்பு இருக்கிறது. நீங்களும் போய்ப் பார்வையிடலாம்.

தொகுப்பு – யோகி அருமைநாயகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad