மினசோட்டா வரலாற்றுச் சங்கக் கட்டடத்தின் ஒரு பகுதிக்கு இந்தியரின் பெயர்
வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாகாணத்தில் செயிண்ட்பால் நகரில் புகழ்பெற்ற ‘மினசோட்டா வரலாற்றுச் சங்கத்தின்’ கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடத்தில் மினசோட்டா மாநில வரலாறு குறித்த அனைத்து தகவலும் சேகரிக்கப்பட்டு கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை https://www.mnhs.org/ இணையதளத்தில் காணலாம்.
டாக்டர் எஸ். கே. டேஷ் (Dr.S.K Dash, Sita Kantha Dash – Scientist & Founder of Probiotics), அவர்கள் மினசோட்டா மட்டுமல்லாது, அமெரிக்காவில் உள்ள அனேகத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும், இந்தியாவில் செயல்படும் பல தன்னார்வத் தொண்டு அமைப்புகளுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் நன்கொடையாகப் பொருளுதவி அளித்துவருபவர். இந்தியாவிலுள்ள கல்வி நிறுவனங்களில், கலை மற்றும் வரலாற்றுப் பதிவுகளைப் பாதுகாக்க பேருதவி செய்து வருகிறார். (டாக்டர் எஸ். கே. டேஷ் குறித்த மேலதிக விவரங்களுக்கு www.drdashfoundation.com எனும் இணையமுகரிக்கு சென்று காணலாம்).
இவ்வகையில் ஐக்கிய அமெரிக்காவிலும், இந்தியாவிலும் கல்வி, கலை, வரலாற்று வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் பெருந்தொண்டாற்றி வரும் டாக்டர் எஸ். கே. டேஷ் அவர்களைக் கவுரவிக்கும் விதத்தில், மினசோட்டா வரலாற்று சங்கத்தின் சிறப்புமிக்க கட்டடத்தின் ஒரு பகுதிக்கு, அவரது பெயர் சூட்டப்பட்டது. இது தொடர்பாக நடந்த விழாவில் மாநில அரசியல் தலைவர்களும், இந்திய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சிறப்பு பிரதிநிதிகளும், கோவில் நிர்வாகத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்து கலாச்சார முறைப்படி, வழிபாட்டுடன் இந்தக் கட்டடத்தின் பெயர் பலகை திறக்கப்பட்டது. விழாவுக்கு வந்திருந்த பொதுமக்களும், அனைத்து நிர்வாகிகளும் டாக்டர் எஸ்.கே. டேஷ் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்து அவரை வாழ்த்தினார்கள்
அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்களுக்காக!!!
ராஜேஷ் கோவிந்தராஜன்.