\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இயந்திரங்களின் எழுச்சி: 2023 செயற்கை நுண்ணறிவு (AI) ஆண்டாக இருக்கலாம்

அமெரிக்கா உட்பட உலகளாவிய நாடுகள் சென்ற மூன்றாண்டுகள் பலவீன பொருளாதாரச் சூழலில் இருந்து 2023ஆம் ஆண்டிற்கு நகர்கின்றன. பலவீனமான பொருளாதார நிலைமைகள் எப்பொழுதும் செலவுகளைக் குறைப்பதற்கும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதால், ஏற்கனவே வளர்ந்து வரும் பொருளாதார மந்தநிலை செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence AI) வர்த்தகங்கள், உற்பத்திச்சாலைகள் ஏற்றுக்கொள்வதில் பெரும் உந்துதலை அளிக்கலாம்.

 2023 ஆம் ஆண்டைத் தொடங்குவதற்கு நாங்கள் தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில், நிறுவனங்கள் இன்னும் அதிகச் செலவுகளால் நசுக்கப்படுகையில், உலகப் பொருளாதாரம் தள்ளாடுகிறது என்பது நாம் அறிந்த விடயமே. எனவே எவ்வாறு செலவுகளை மட்டுப்படுத்திக்கொள்ளலாம் என்றும் வர்த்தக தாபனங்கள் தொடரந்து சிந்திக்கின்றன. அதற்கு மேல், ஒரு பொருளாதார மந்தநிலை கூட அவர்கள் எதிர்கொள்ளும் இறுக்கமான தொழிலாளர் தொழில்பரிமாற்று சந்தையில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது. தொழில்நுட்பங்கள் மிக வேகமாக முன்னேறி வருவதோடு, நிறுவனங்களின் அடிமட்டத்தை மேம்படுத்துவதற்கான வழிகளைத் தேடுவதால், பொருளாதாரம் மற்றும் தொழிலாளர் சந்தையை மாற்றும் வகையில் AI பயன்பாட்டில் பெரும் முன்னேற்றத்திற்கு நேரம் சரியானதாகவே உள்ளது.

 AIஐத் தழுவுதலில் வட அமெரிக்கா முன்னணியில் உள்ளது. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் செயற்கை நுண்ணறிவுக்கான 2021 உலகளாவிய அதிர்வு தரவரிசையின்படி, அமெரிக்கா நாடு முதலாவது இடத்தில் உள்ளது, அடுத்து சீனா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் கனடா வரிசையில் இருக்கின்றன. AI இல் வேலை வாய்ப்புப் பணியமர்த்துதல், நாட்டிற்குள் செய்யப்படும் ஆராய்ச்சி மற்றும் துறையில் முதலீடு செய்தல் உள்ளிட்ட பல அளவீடுகளைப் பயன்படுத்தி இந்தக் குறியீடு கணக்கிடப்படுகிறது. AI துறையில் பணியமர்த்தல் என்று வரும்போது, கனடா, இந்தியாவிற்கு அடுத்தாக, இரண்டாவது நிலையில் உள்ளது.

ஒட்டு மொத்தமாக எமது பொருளாதார சூழலைப் பார்க்கும் போது, பழைய வர்த்தக அனுபவங்கள் சில அடிப்படை உண்மைகளைத் தெளிவாக்குகின்றன. அதாவது தொழில்நுட்பத்தை உருவாக்குவதும், அதைப் பல்வேறு தொழில்களில் செயல்படுத்துவதும் இரண்டு வெவ்வேறு விடயங்கள். பொருளாதார ரீதியில் அவதானித்தால் தற்போது பல பின்தங்கிய வளர்ச்சி இடங்கள் உள்ளன. எனவே, செயற்கை நுண்ணறிவு இந்த அளவிலான வளர்ச்சி மந்தநிலையை மாற்ற AI ஒரு பெரிய உந்துதலை வழங்க முடியும்.

இப்பேர்ப்பட்ட விடயத்தை சமூக வர்த்தக சூழலில் முன்பும் பலமுறை பார்த்திருக்கிறோம்: பலவீனமான பொருளாதார நிலைமைகள் வர்த்தக்ங்களைப் பொறுத்தளவில் எப்பொழுதும் செலவுகளைக் குறைப்பதற்கும் உற்பத்தித்திறனை உயர்த்துவதற்கும் இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான பிரயோக வேகத்தை அளிக்கின்றன. ஆயினும் இது அன்றாட தொழிலாளிகள் ஊதியத்தை உயர்த்துவதாக இல்லை.

அமெரிக்கப் பொருளாதார உதாரணங்களை எடுத்து பார்த்தால் இது தெளிவாகும். மிகச் சமீபத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் இது பெரிய அளவில் நடந்தது, சில ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் விலை வீழ்ச்சி உற்பத்தி செயல்முறைகளில் மாற்றங்களைத் தூண்டியது, இறுதியில் பல செயல்பாடுகளுக்கு குறைவான மக்கள் தேவைப்பட்டனர். இப்போது, உற்பத்தி முதல் சேவைகள் வரையிலான தொழில்கள் ஒரு சவாலான ஆண்டை எதிர்நோக்குவதால், செயல்திறனை உருவாக்கும் போது அனைத்தும் வர்த்தகங்களின் குறிக்கோளாக இருக்கும்.

 இன்னும் ஒரு உதாரணம். அமெரிக்க சில்லறை விற்பனை நிறுவனங்கள் சில, ஏற்கனவே AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றன. 2022இல், வால்மார்ட் Walmart ஒரு AI மாதிரியைப் AI-model பயன்படுத்தி அமெரிக்க நன்றி நவிலல் நாள் (Thanksgiving) ஒவ்வொரு சாம்ஸ் கிளப் கடையிலும் எத்தனை பூசணிக்காய்ப் பணியாரம் (Pie) இருக்க வேண்டும் என்பதைக் கணிக்க, வானிலை உள்ளிட்ட காரணிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, ஒரு பகுதியில் அமெரிக்க ஃபுட்பால் வெளிமாநிலத்தில் அல்லது உள்மாநிலத்தில் விளையாடப்படுமா, அப்படி உள்மாநிலத்தில் நடந்தால் அதன் போது எவ்வளவு பணியாரங்கள் தேவைப்படுகிறது, எந்தப் பகுதியில் பீக்கான் பணியாரங்கள் (Pecan pies) அதிகம் தேவைப்பட்டன என்பது போன்ற பல தகவல்களை நிர்ணயித்துக் கொண்டது. அனைத்து தரவு உள்ளீடுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டவுடன், மணிநேரத்திற்கு எத்தனை பைகள் கையில் இருக்க வேண்டும் என்பதற்கான பரிந்துரைகளை சாம்ஸ் கிளப் கடைகள் பெற்றன.

மேலும் டிசெம்பர் 2022இல் அமெரிக்க பாரிய ‘மெக்டொனால்ட்ஸ்’ (McDonalds) உணவகம் முதலாவது முழுதும் எந்திரமயமாக்கப்பட்ட உணவகத்தையும் திறந்தது. இந்த உணவகத்தில் ஆர்டர் எடுப்பதிலிருந்து உணவு பரிமாற்றம் வரை எவ்வித மனித இடையூறும் கிடையாது. 

ஒரு காலத்தில் அறிவியல் புனைகதை புனைய பயன்பட்ட செயற்கை நுண்ணறிவை நிறுவனங்கள் கையகப்படுத்துதலுக்குத் தொழிலாளர்கள் பயப்படுகிறார்களா அல்லது AI ஐப் பயன்படுத்துவதில் தங்கள் முதலாளிகளுக்கு பலம் கூடும் என்று அவர்கள் பயப்படுகிறார்களா என்ற நிலை , பலரின் இதயங்களில் பயத்தைத் தூண்டும். வரலாற்று ரீதியாக தொழில்நுட்ப மாற்றங்கள் தொழிலாளர்களுக்கு சாதகமாக அமைந்து, அதிக முக்கியம்வாய்ந்த பணிகளைச் செய்ய அவர்களை விடுவித்துள்ளன என்றாலும், இவ்வகை ஆதாயங்கள் தொழிலாளர்களுக்குப் பகிரப்படாமல், மேலும் வேலையின்மை அதிகரிக்கும் என்ற நியாயமான கவலையும் உள்ளது.

முதன்முதலில் தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவதற்கான நகர்வைத் துரிதப்படுத்திய அதே காரணிகளில் ஒன்று தொழிலாளர்கள் மீதான சுமையை மென்மையாக்கும். அமெரிக்காவில் தொழிலாளர் சந்தை இப்போது மிகவும் இறுக்கமாக உள்ளது. மக்கள்தொகை சூழ்நிலையுடன் தொடர்புப்படுத்தி பார்த்தால், முதுமையடைந்த தொழிலாளர்கள் பலர் ஓய்வு பெறுகிறார்கள், ஆனால் இளைஞர்களிடையே வேலைவாய்ப்பு வளர்ச்சியின் அளவு பெரிய அளவில் மாறவில்லை.

 முந்தைய தலைமுறைகளைக் காட்டிலும், அமெரிக்காவிலும் மற்றும் பல நாடுகளில் வேலையின்மை விகிதம் இப்போது குறைந்துள்ளது. இது ஊதியச் செலவுகள் மற்றும் பணவீக்கத்தைத் தூண்டியது, மேலும் ஒருபோதும் ஊதிய உயர்வைக் கோராத எந்திரங்களை உபயோகிக்கும் யோசனையில் முதலாளிகள் ஆர்வமாக உள்ளனர். உண்மை என்னவெனில், தொழிலாளர் சக்தி வளர்ச்சியானது, வரவிருக்கும் ஆண்டுகளில் எந்திரர்கள் (Robots) மற்றும் AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான நகர்வு இன்று நிலவும் வேலையின்மை நிலையை அதிகரிக்காமல் செய்ய முடியும். நீண்ட காலத் திட்டங்களின் படி, மிகவும் திறமையான தொழில்கள் அதிக வேலைகள் மற்றும் அதிக திறன் மற்றும் அதிக ஊதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்பது வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் சில பொருளாதாரவியலாளர் நம்பிக்கை.

இயந்திரமயமாக்கம், செயற்கை நுண்ணறிவு பற்றி அறிந்து கொள்ளும் போது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விடயங்கள்.

நான்காவது தொழிற்துறை புரட்சி Fourth Industrial Revolution

இது 21 ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்பம், தொழில்கள், சமூக உருவகங்கள், வடிவங்கள் மற்றும் அன்றாட தொழில் செயல்முறைகளில் விரைவான அதே சமயம் அறிவுத்திறம் வாய்ந்த மாற்றக் குறிக்கோள் கொண்டு இயங்குவதாகும்.

செயற்கை பொது நுண்ணறிவு Artificial General Intelligence (AGI)

இது தொழில்நுட்ப இயந்திரங்களின் புத்திசாலித்தனமாகும். இந்த செயற்கை நுண்ணறிவு முறை மனிதர்களைப் போலவே, அறிவுசார் பணிகளைப் புரிந்துகொள்ளவும், கற்றுக்கொள்ளவும், செய்யவும் அனுமதிக்கிறது.

இதன் மூலம், இயந்திரங்கள் எந்த வகையான சிக்கலான சிக்கலையும் தீர்க்க மனித மனதையும் நடத்தையையும் பின்பற்ற முடியும். விரிவான அறிவு மற்றும் அறிவாற்றல், கணினித் திறன்களைக் கொண்டிருக்க வடிவமைக்கப்பட்டு உள்ளதால், இந்த இயந்திரங்களின் செயல்திறன் மனிதர்களிடமிருந்து பிரித்தறிய முடியாத வகையில் அமையும். 2022 செயற்கை நுண்ணறிவு ஆய்வு மாநாட்டின் படி வரவிருக்கும் 2030இல் ஏறத்தாழ 30சதவீதமான மனித தொழிலாளர் செயல்பாடுகள், இயந்திரங்களால் 50 சதவீதம் முடித்து வைக்கப்படும். இது நிச்சயம் மனித தொழிலாளர் வேலைகளுக்கு ஆப்பு வைக்கலாம்.

நாம் 2023இல் அறிந்து கொள்ள வேண்டிய தலைப்புச் செய்தி, நான்காவது தொழில்துறை புரட்சி ஏற்கனவே முழு வீச்சில் உள்ளது என்பதாகும். இந்தப் புரட்சியும், தொழில்நுட்ப மாற்றங்களும் அரசியல், பொருளாதாரச் சூழல்களைப் பொருட்படுத்தாமல் நடக்கும். இருப்பினும். அறிவியலாளர்கள் சொல்வது போல் தேவைதான் கண்டுபிடிப்பின் தாய். மேலும் 2023 இன் பொருளாதாரம் தொழிற்புரட்சி செய்வதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடிப்பது அவசியமாக்கலாம். AI மற்றும் எந்திரர்கள் அதைச் செய்யத் தயாராக உள்ளன, எனவே வரவிருக்கும் மாற்றங்களை அறிந்து அவதானித்து, முடியுமாயின் அதனூடு பயன்பெறவும் வழி பார்த்துக் கொள்வது அவசியமாகிறது.

    யோகி

 

Tags: , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad