\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

வைனோனா மினசோட்டா

Winona_trip_520x569இது மினசோட்டா மாநிலத்தில் தென்கிழக்குப் பகுதியில், மினியாபொலிஸ் நகரிலிருந்து ஏறத்தாழ 135 மைல்கள் தொலைவில், மிசிசிப்பி பேராற்றின் மேற்புற மடைக்கரை பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் ஆற்றங்கரை நகரம்.

இயற்கையாகவே பல மில்லியன் வருடங்களுக்கு முன்னால் செதுக்கப்பட்டப் பள்ளத்தாக்கில் பழமையும், நவீன நகர வசதிகளையும் ஓரிடத்தில் கொண்ட இடமாக அமைந்துள்ளது.

winona_4_520x370இவ்விடம் இரண்டு பல்கலைக்கழகங்களும் ஒரு தொழில் நுட்பக் கல்லூரியும் உண்டு. பார்க்க வருபவர்கள் குறைந்த நேரத்தில் பார்ப்பதானால் Gavin Heights எனப்படும் மலைக்குன்றிலிருந்து இயற்கை அன்னையின் எழிலான நீள்கூந்தல் போன்று பரவியிருக்கும் மிசிசிப்பி ஆற்றையும், மேலும் கிழக்குக்கரையில் விஸ்கொன்சின் மாநிலத்தையும் பார்வையிடலாம்.

winona_3_520x399வைனோனாவை உல்லாசமாகச் சுற்றிவர அரை நாளிலிருந்து, ஓரிரு நாட்களும் தங்கி வரலாம். இவ்விடம் இயற்கையின் எழிலையும், பன்னிறம் தோய்க்கும் கண்ணாடித் (stain glass studios) தொழிலாளர்களின் கைவண்ணங்களையும் பார்வையிடலாம்.

winona_1_520x347இயற்கையை ரசிப்பவர்கள் வெளிப்புற முகாமிடவும் (Campgrounds) ஆற்றங்கரையில் இருக்கவும் பலபூங்காக்கள் இவ்விடம் உண்டு.
பிரதான இடங்கள் Great River Bluffs State Park, Pla-Ma Campground, Prairie Island Campground மற்றும் Whitewater State Park ஆகியவை. மாநில வனப்பாதுகாவலர் அனுமதியுடன் (Department of Natural Resources DNR, MN State Park Permit) இவ்விடங்களை பாவிக்கலாம்.

உணவகக் குறிப்பு

உணவகங்களைப் பொறுத்தளவில் பெரும்பான்மையாக அமெரிக்க உணவுகள் காணப்படினும், தமிழ் மக்கள் காரமான உணவு சாப்பிட வேண்டின் Little Thailand, Golden China, மற்றும் மெக்சிகன் உணவகங்கள் உண்டு. மேலும் Hy-Vee எனும் காய்கறி, உணவுப்பொருள் கடையும், சந்தை வசதிகளும் உண்டு.

– யோகி அருமைநாயகம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad