துருவக்கரடித் தோய்தல் (Polar Bear Plunge – Woodbury) 2023
வடஅமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் குளிர்காலம் கடந்த டிசம்பர் முதல் கடுமையாக இருந்தபோதிலும் துருவக்கரடித் தோய்தல் (Polar Bear Plunge) என்ற போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி ஜனவரி 28-ஆம் தேதி முதல் ஆரம்பித்து மே 10ஆம் தேதி வரை, ஒவ்வொரு ஊரிலுமுள்ள ஏரிகளில் நடைபெறுகிறது.
போட்டி நடைபெறும் ஏரியின் விபரத்தை இந்த முகநூல் https://www.plungemn.org/ பக்கத்தில் காணலாம். இந்தப் போட்டிகளில் முக்கிய அம்சம் நிதி திரட்டுவது. விசேஷ ஒலிம்பிக் போட்டியாளர்கள் மற்றும் காவல்துறை, தீயணைப்பு படையினர் அனைவருக்கும் உதவும் நோக்கத்துடன் இந்த நிதி திரட்டல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. போட்டி நடக்கும் இடங்களுக்கு மக்களை அழைத்துச் செல்ல, நகரின் மையப் பகுதிகளிலிருந்து பள்ளிப்பேருந்துகள் இயங்குகின்றன. மக்கள் தங்கள் வாகனங்களை இங்கு நிறுத்திவிட்டு அங்கிருந்து பள்ளிப்பேருந்துகளில் வந்து இந்தப் போட்டிகளைக் கண்டு களிக்கின்றனர். நடைபெற்ற , நடைபெறப் போகின்ற போட்டிகளில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால்,பாதிக்கப்பட்டவர்களை உடனே மருத்துவமனைக்குச் கொண்டுசெல்ல முதலுதவி வண்டிகள் (Ambulance), முதல் உதவி செய்பவர்கள் மற்றும் காவல் படையினர் தயாராக நிறுத்தப்பட்டுள்ளனர். கடுமையான குளிர் நீரில் குதிப்பது மிகவும் சிரமமானது மட்டுமல்லாமல் ஆபத்தானதும் கூட. இதில் எந்த நேரத்தில் யாருக்கு என்ன ஆகும் என்று தெரியாத காரணங்களால் இவ்வகை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
முந்தைய ஆண்டுகளில் துருவக் கரடித் தோய்தல் போட்டிகள் தொடர்பாக, பனிப்பூக்கள் சஞ்சிகையில் வெளியான படைப்புகளை, கீழ்கண்ட முகவரியில் காணலாம்.
2015 – https://www.panippookkal.com/ithazh/archives/5522
2018 – https://www.panippookkal.com/ithazh/archives/15309
2022 – https://www.panippookkal.com/ithazh/archives/24011
நீங்களும் இந்தப் போட்டிகளில் பங்கேற்று நிதி திரட்டும் முயற்சிக்கு உதவலாம். https://www.plungemn.org/
மினசோட்டா மாநிலத்தின், வுட்பரி (Woodbury, MN) நகரில் நடைபெற்ற துருவக் கடடித் தோய்தல் பிப்ரவரி 11ம் 2023 விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்களுக்காக.
- ராஜேஷ் கோவிந்தராஜன்