வள்ளுவர் குடும்பம் கடிதம்
ஐயா அவர்களுக்கு
வணக்கம்! பனிப்பூவானது சூரியனைக் கண்டால் உதிரும் பூக்கள் அல்ல!
தமிழுக்கும் தமிழ் தாய்க்கும் உயிர்ப்பூட்டும் உறவுப்பூக்கள்!
உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முடியாது!
இதனை அனுபவித்தால் மட்டுமே உணரமுடியும்!
தாயின் மடிமீது தலை வைத்து படுக்கும்போது எத்தனை சுகத்தினை அனுபவிப்போமோ அத்தகைய சுகத்தினை இந்த பனிப்பூக்கலின் படைப்புகள் மனதிற்கு இதமான இதழ்களாக உள்ளது.
“ஒரு தாமரை மலரில்
எது முதல் இதழ்
எது கடைசி இதழ்
என்று சொல்ல முடியாது
அது போல பனிப்பூக்களின்
ஒவ்வொரு இதழும்
பாரிஜாத பூக்களே!”
வர்ணிக்கும் பனிப்பூ அல்ல!
இந்த பனிபூக்கள் வரலாறு
படைக்கும் பனிப்பூக்கள்!
“ஒரு மரத்தைப் பார்த்து இது 40 அடி உயரம் உள்ளது” என்பது அறிவியல்.
“இது வானளாவ உயர்ந்துள்ளது” என்பது கலை.
“இது ஏறக்குறைய 40 ஆயிரம் மக்களை கொண்டது” என்பது அறிவியல்.
“எள்விழ இடமில்லாமல் கூடிய கூட்டம்” என்பது கலை.
“தொட்டவுடன் சுருங்கும் தன்மையையுடைய செடியை தொட்டாற்சுருங்கி” என்பது அறிவியல்.
“எனைத் தொடாதே!” என்று கூருவதாக கற்பனை செய்வது கலை. — (அறிவியலும் கலையும்)
வள்ளுவர் தன்னை உலகினுக்கு ஈந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு!
“பனிப்பூக்கள் இணையத்தில் வள்ளுவரும் வலை விரிக்க விழையும் அன்பு உள்ளங்கள்”.
வாழ்த்தும்
வள்ளுவர் குடும்பம்.
வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி, கரூர்.