தமிழ் புத்தாண்டு விழா 2023
தமிழ் புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக மினசோட்டா மாநிலத்தில் உள்ள மேப்பில் குரு நகரில் அமைந்துள்ள இந்து கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்ற மாதம் ஏப்ரல் 16ஆம் தேதி இந்த தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு வழிபாடுகளுடன் ஆரம்பித்து பின்பு பக்தர்கள் அனைவரும் கந்த சஷ்டியுடன் ஆரம்பித்து பின்பு இறைவன் பாடல்களை பாடி பின்பு இறைவனுக்கு அலங்காரம் செய்து பூஜை செய்து சிறப்பாக வழிபட்டனர்.
பூஜை முடிந்தவுடன் அனைவருக்கும் தமிழ் பண்பாடான வாழையிலை விருந்து வழங்கப்பட்டது. இதில் வரும் நன்கொடை அனைத்தும் கோவிலுக்கு சென்றடையும். பல நாட்கள் பல்வேறு தன்னார்வத் தொண்டர்கள் வேலை செய்து இந்த வாழையிலைப் விருந்து மிகவும் சிறப்பாக செய்து இருந்தனர். சுமார் 800 பேர் வந்து இருந்து இந்த வாழை இலை விருந்து மிகவும் சிறப்பாக செய்து இருந்து வந்திருந்து அனைவருக்கும் வாழையிலை விருந்து வழங்கப்பட்டது.
அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படம் உங்களுக்காக!!