\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அகரவரிசையில் அழகிய மினசோட்டா

minnesota

அ – அல்பெர்ட் லீ (Albert Lea);

ஃபிரீபோர்ன் (Freeborn) மாவட்டம் தென் மினசோடா – இவ்விடம் பெருவிவசாயத் தொழிலை மையமாக வைத்து அமைந்த சமூகம். அல்பெர்ட் லீ போகும் வழியில் பெருஞ்சாலை தெற்கு 35 இல் பெரும் மலிவு கடைச் சந்தைகள் உள்ளன. அல்பெர்ட் லீ நகரம் ஏறத்தாழ 300 ஏக்கர்களில் 41 பூங்கா, விளையாட்டு, மற்றும் சுற்று வெளி அரங்கு வசதிகளைக் கொண்டது. இவை யாவும் வருவோர்க்கு இலவசம்.citylogo-color_sm_albertlea180x108

இவ்விடம் பிரதான உல்லாசப் பயணிகள் பார்வைக்கு அல்பெர்ட் லீ ஆடோபான் (Audobon) இயற்கை காட்டுப் பிராணிகள் காப்புப் பூங்காவும், ஃபிரீபோர்ன் மாவட்ட சரித்திர நூதன சாலை, மற்றும் முதல் குடியேற்றக் கிராமும், ராண்டேவூ (Rendezvous) பெருந்தீவும்,மையர்-பிக் தீவுப் பூங்காவும் மற்றும் பெலிக்கன் பறவைகளைப் பார்க்க அல்பெர்ட் லீ ஏரியில் படகு உல்லாசச் சவாரியும்  உள்ளன.

ஆ – ஆல்ட்ரிச் (Aldrich) இது வடேனா (Wadena) மாவட்டத்தைச் சேர்ந்த பழைய நகரம். மாவட்டத்தின் முதல் புகையிரதப்பாதை, தபால் காரியாலயம் ,மற்றும் உரோமன் கத்தோலிக்கத் தேவாலயம் இவ்விடம் தான் தாபிக்கப்பட்டன.   ஓஜிப்வா (Ojibwa) ஆதிவாசிகளுக்கும், ஐரோப்பிய குடியேற்றக்காரர்களிற்குமிடையே 1874இல் நடைபெற்ற செங்கன் போர் (Chengun War) இவ்விடத்தில்தான்நடைபெற்றது.

இன்று ஆல்ட்ரிச் பழைய டிப்போ போன்று பெரும் மரங்களினால் கட்டப்பட்ட வடேனா மாவட்ட வரலாற்றுச் சம்மேளனம் இவ்விடம் உல்லாசப் பயணிகள் பார்வைக்கு உண்டு. மேலும் இவ்விடம் ஆல்ட்ரிச் விவசாய உழும் இயந்திர விற்பனை நிலையம்  உள்ளது.

இ – இ ஃலன் (Ihlen) – இவ்விடம் புல்வெளியில் புனல் ஏரி, புகையிராதப் பிரதான இணைப்பிடம், பண்டைய வங்கிக் கொள்ளைகள் என பல விடயங்களுக்குப் பெயர்பெற்ற இடம். இந்நகரம் மினசோட்டா மாநிலத்தின் தென்மேற்குப் பாகத்தில் அமைந்துள்ளது.

இவ்விடம் வருடாவருடம் ஏறத்தாழ 100,000 உல்லாசப் பயணிகளைத் தனது 228 ஏக்கர் ஸ்ப்ளிட் ராக் க்ரீக் (Split Rock Creek Park) என்னும் பூங்காவிற்கு வரவேற்கிறது. மேலும் இ ஃலன், மாநிலத்திலேயே மிகப்பெரிய, கல்லினால் ஆன வளைவுப் (Stone Arch) பாலத்தையும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

(தொடரும்…)

– யோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad