\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

டிவின் சிட்டிஸ் தமிழ்ச் சங்கத்தின் தீபாவளி கொண்டாட்டம்

டிவின் சிட்டிஸ் தமிழ்ச் சங்கம் கடந்த அக்டோபர் மாதம், 28 ஆம் தேதியன்று “தீபாவளி கொண்டாட்டம்” என்ற நிகழ்ச்சியைத் தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த பல்சுவை கலைஞர்களுடன் இணைந்து நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பாடகர்களான மூக்குத்தி முருகன், வர்ஷா, வானதி, பாலாஜி, மற்றும் குழுவின் ஒருங்கிணைப்பாளரான கோபால் ஆகியோர் கலந்து கொண்டு இசைக்கச்சேரியினை நடத்தினர். பல புகழ்பெற்ற தமிழ்த் திரையிசைப் பாடல்களை, தங்களது அசர வைக்கும் குரலில் பாடி பார்வையாளர்களைக் கைத்தட்டி மகிழ வைத்தனர். நகைச்சுவைக் கலைஞர் அரக்கோணம் தினேஷ் அவர்கள் நகைச்சுவைப் பேச்சில் மக்களைக் கவர்ந்தார். மேஜிக் கலைஞர் விக்கி கிருஷ் அவர்கள் குழந்தைகளைக் கவரும் மேஜிக் நிகழ்ச்சியைச் செய்து காட்டி குதூகலமூட்டினார்.

TCTA Deepavali Event 2023 - 01_620x349
TCTA Deepavali Event 2023 - 16_620x279
TCTA Deepavali Event 2023 - 12_620x279
TCTA Deepavali Event 2023 - 10_620x279
TCTA Deepavali Event 2023 - 14_620x279
TCTA Deepavali Event 2023 - 17_620x279
TCTA Deepavali Event 2023 - 09_620x279
TCTA Deepavali Event 2023 - 08_620x279
TCTA Deepavali Event 2023 - 07_620x279
TCTA Deepavali Event 2023 - 05_620x279
TCTA Deepavali Event 2023 - 04_620x349
TCTA Deepavali Event 2023 - 02_620x349
TCTA Deepavali Event 2023 - 15_620x279
TCTA Deepavali Event 2023 - 13_620x279
TCTA Deepavali Event 2023 - 03_620x349
TCTA Deepavali Event 2023 - 11_620x279
TCTA Deepavali Event 2023 - 06_620x1377
TCTA Deepavali Event 2023 - 01_620x349 TCTA Deepavali Event 2023 - 16_620x279 TCTA Deepavali Event 2023 - 12_620x279 TCTA Deepavali Event 2023 - 10_620x279 TCTA Deepavali Event 2023 - 14_620x279 TCTA Deepavali Event 2023 - 17_620x279 TCTA Deepavali Event 2023 - 09_620x279 TCTA Deepavali Event 2023 - 08_620x279 TCTA Deepavali Event 2023 - 07_620x279 TCTA Deepavali Event 2023 - 05_620x279 TCTA Deepavali Event 2023 - 04_620x349 TCTA Deepavali Event 2023 - 02_620x349 TCTA Deepavali Event 2023 - 15_620x279 TCTA Deepavali Event 2023 - 13_620x279 TCTA Deepavali Event 2023 - 03_620x349 TCTA Deepavali Event 2023 - 11_620x279 TCTA Deepavali Event 2023 - 06_620x1377

மாலை நான்கரை மணியளவில் ‘ஹாப்கின்ஸ்’ நகரத்தின், ‘ஐசன்ஹவர் சமூகக் கூடத்தில்’ தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் உள்ளுர் கலைஞர்களின் இசைக்கச்சேரியும், சிறுவர் சிறுமியரின் ஆடல் நிகழ்ச்சிகளும்  நடைபெற்றன. வந்திருந்த பார்வையாளர்களுக்கு இரவு உணவும் வழங்கப்பட்டு, இந்த நிகழ்ச்சி இரவு ஒன்பது மணியளவில் நிறைவு பெற்றது. வந்திருந்த கலைஞர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு மக்கள் திருப்தியுடன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விடைபெற்றனர்.

 

  • சரவணகுமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad