\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

விண்மீன்கள் வெடிப்பைக்களைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் முதல் செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்கியுள்ளார்கள்

விண்மீன்கள் / நட்சத்திரங்கள் வெடிப்பைக்களை வெற்றிகரமாக அடையாளம் கண்டு உறுதிப்படுத்தக்கூடிய செயற்கை நுண்ணறிவு (A.I.) கருவியை உருவாக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விண்மீன்கள் வெடிப்பைக்கள் ஆங்கிலத்தில் சூப்பர்நோவா (Supernova) என்பது ஒரு நட்சத்திரத்தின் மிகவும் பிரகாசமான, சக்திவாய்ந்த வெடிப்பு என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா (NASA) தெரிவித்துள்ளது. ஒரு நட்சத்திரத்தின் வாழ்நாளின் முடிவில் வெடிப்பு நிகழ்கிறது.

விண்மீன்கள் வெடிப்பைக்களைக் கண்டுபிடிப்பதற்கான தற்போதைய செயல்முறை பொதுவாக இயந்திரங்கள் மற்றும் மக்கள் இரண்டையும் உள்ளடக்கியது. தொலைநோக்கிகள் இரவு வானத்தின் படங்களை மீண்டும் மீண்டும் சேகரித்துக் கொடுக்க, வல்லுனர்கள் அவற்றை ஒப்பிட்டு, படங்களில் உள்ள வேறுபாடுகளை அவதானித்து இந்த வெடிப்பைக்களை அடையாளம் காண்கின்றனர்.

எந்திர (Robo) தொலைநோக்கிகள் சாத்தியமான விண்மீன்கள் வெடிப்பைக்களின் பட்டியலை மனித விஞ்ஞானிகளுக்கு வழங்க முடியும். இந்தத் தரவு பின்னர் மனித விஞ்ஞானிகளால் ஆராயப்படுகிறது, அவர்களின் வேலை விண்மீன்கள் வெடிப்பைக்களை அடையாளம் கண்டு உறுதிப்படுத்துவதாகும். இப்போது, முதல் முறையாக, இந்த செயல்முறையின் அனைத்து படிகளையும் முடிக்க செயற்கை நுண்ணறிவு கருவியை வெற்றிகரமாகப் பயன்படுத்தியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சர்வதேச விஞ்ஞானிகள் குழு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அமைப்பை உருவாக்கியது. இல்லினாய்ஸின் சிகாகோவில் உள்ள வடமேற்கு பல்கலைக்கழக (Northwestern University) ஆராய்ச்சியாளர்கள் இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கினர். அணியின் தலைவராக ஆடம் மில்லர் என்ற அறிஞர் பொறுப்பேற்றிருந்தார்.

புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்புடன் அதன் வெற்றியை, தனது குழு சமீபத்தில் சர்வதேச வானியல் சமூகத்திற்குத் தெரிவித்ததாக மில்லர் கூறினார். இந்தக் கருவி ‘பிரைட் டிரான்சியண்ட் சர்வே போட்’ அல்லது ‘பி.டி.எஸ்போட்’ (Bright Transient Survey Bot BTSBot ) என்று அழைக்கப்படுகிறது.

இந்த எந்திரன் முதன்முறையாக விண்மீன்கள் வெடிப்பைக்களைக் கண்டறிந்து வகைப்படுத்த பயன்படுத்தப்பட்டது என்றார் மில்லர். விண்மீன்கள் வெடிப்பைக்களைக் கண்டறிந்து வகைப்படுத்துவதற்காக ஆராய்ச்சியாளர்கள் கடந்த ஆறு ஆண்டுகளில் தொலைநோக்கித் தரவுகளைப் பார்க்க 2,000 மணி நேரத்திற்கும் மேலாக செலவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

“முதல் முறையாக, எந்திரர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளினூடே கண்காணிக்கப்பட்டு, பின்னர் அடையாளம் காணப்பட்டுள்ளன. பின்னர் மற்றொரு தொலைநோக்கியுடன் தொடர்பு கொண்டு இறுதியாக விண்மீன்கள் வெடிப்பைக்களின் கண்டுபிடிப்பை உறுதிப்படுத்துகின்றன” என்று மில்லர் கூறினார்.

விண்மீன்கள் வெடிப்பைக்களைத் தேடி வகைப்படுத்தும் பெரும்பாலான வேலைகளை இந்தப் புதிய அமைப்பு எடுத்துக் கொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது விஞ்ஞானிகள் விண்மீன்கள் வெடிப்பைக்களையும் அவை உருவாக்கப்பட்டதற்கான காரணங்களையும் இன்னும் ஆழமான பரிசோதனைகளை செய்ய வழிவகுக்கும்.

ஒரு விண்மீன் வெடிப்பை உறுதிப்படுத்த, விஞ்ஞானிகள் அதன் ஒளி விசை (Spectrum) ஆய்வு செய்ய வேண்டும். ‘ஸ்பெக்ட்ரம்’ என்பது பொருளின் சிதறிய ஒளியைக் குறிக்கிறது; இது விண்மீன்கள் வெடிப்பின் போது இருந்த கூறுகளைக் காட்டுகிறது.

விண்மீன்கள் வெடிப்பைக்களை ஆய்வு அதிக அறிவியல் மதிப்பைக் கொண்டுள்ளது, ஏனெனில் இது வானியலாளர்களுக்கு பிரபஞ்சத்தைப் பற்றியும் அது எவ்வாறு தொடங்கியது என்பதையும் பற்றி மேலும் அறிய உதவும். எடுத்துக்காட்டாக, விண்மீன்கள் வெடிப்பைக்களை நட்சத்திரங்களின் நடத்தைகள் மற்றும் வேதியியல் செயல்முறைகளைப் பற்றி விஞ்ஞானிகள் நிறைய கற்றுக்கொண்டதாக நாசா கூறுகிறது.

விண்மீன்கள் வெடிப்புகள் ஏன் நிகழ்ந்தன என்பதை விளக்க ஆராய்ச்சியாளர்கள் “தங்கள் அவதானிப்புகளைப் பகுப்பாய்வு செய்யவும் புதிய கருதுகோள்களை உருவாக்கவும்” இந்தப் புதிய கருவி உதவும் என்று மில்லர் கூறினார்.

பி.டி.எஸ்போட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு நபீல் ரெஹெம்துல்லா இணை தலைமை தாங்கினார். இந்தக் கருவி “விண்மீன்கள் வெடிப்பைக்கள் குறித்த ஆழமான ஆய்வுகளை ஒழுங்குபடுத்துகிறது” என்று அவர் கூறினார். இது விஞ்ஞானிகளுக்கு விண்மீன்களின் வாழ்க்கை சுழற்சிகளை நன்கு புரிந்துகொள்ள உதவுகிறது; மற்றும் கார்பன், இரும்பு மற்றும் தங்கம் போன்ற விண்மீன்கள் வெடிப்பைக்கள் உருவாக்கும் தனிமங்களை அடையாளம் காண உதவுகிறது என்று ரெஹெம்துல்லா குறிப்பிட்டார்.

பி.டி.எஸ்போட்டின் சோதனையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட எஸ்.என் 20230 என்ற விண்மீன்கள் வெடிப்பைக்களைப் பார்ப்பது அடங்கும் என்று ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு கருவி அக்டோபர் 5 ஆம் தேதி விண்மீன்கள் வெடிப்பைக்களை அடையாளம் கண்டது.

அடையாளம் காணப்பட்ட பின்னர், பி.டி.எஸ்போட் கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட பலோமர் வான்காணகத்திலிருந்து கூடுதல் தரவைக் கோரியது. பின்னர், SED இயந்திரம்  என்று அழைக்கப்படும் மற்றொரு தொலைநோக்கி, பொருளின் ஸ்பெக்ட்ரம் குறித்த தகவல்களைப் பெற்று மேலும் ஆழமான அவதானிப்புகளைச் செய்தது.

அதன் பின்னர் SED இயந்திரம் ஒலி விசையின் தரவை கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிக்கு (கால்டெக்) அனுப்பியது. விண்மீன்கள் வெடிப்பைக்களை வகைப்படுத்த கால்டெக் ஒரு செயற்கை நுண்ணறிவு வழிமுறையைப் பயன்படுத்துகிறது. இது ஒரு வெள்ளைக் குள்ளனின் (White Dwarf) வெப்ப அணுக்கரு வெடிப்பாகவோ அல்லது ஒரு நட்சத்திரத்தின் மையம் அல்லது மையத்தின் வீழ்ச்சியாகவோ இருக்கலாம்.

படிமுறைத் தீர்வு (Algorithm) விண்மீன்கள் வெடிப்பைக்களை Type 1 A  என்று வகைப்படுத்தியது, இது ஒரு வகை நட்சத்திர வெடிப்பாகும், இதில் ஒரு நட்சத்திர அமைப்பில் ஒரு ‘வெள்ளை குள்ளன்’ முழுமையாக வெடிக்கிறது.

பி.டி.எஸ்போட்டின் வெற்றி விண்மீன்கள் வெடிப்பைக்களின் அடையாளங்களை எளிதாக்கும், அதே நேரத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களைப் பற்றி மேலும் விரிவான ஆய்வு செய்ய மனித விஞ்ஞானிகளை விடுவிக்கும் என்று ரெஹெம்துல்லா கூறினார்.

“இதன் அழகு என்னவென்றால், எல்லாவற்றையும் இயக்கி சரியாக வேலை செய்தால், நாம் உண்மையில் எதையும் செய்ய மாட்டோம்” என்று ரெஹெம்துல்லா குறிப்பிட்டார். “நாங்கள் இரவில் தூங்கச் செல்கிறோம், காலையில், பி.டி.எஸ்பாட் மற்றும் இந்தப் பிற செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகள் தங்கள் வேலைகளைச் செய்வதைக் காண்கிறோம்” என்கிறார் அவர்.ர்

– தொகுப்பு யோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad