\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இறைத்தூதர்

அறைந்தேன் ஆணியதை மிகச்சிறிதாய், படம் மாட்ட!

அது சற்றே விலகி சுண்டுவிரல் பதம் பார்க்க,

அழுதேன் சுருண்டு விழுந்தே, விளைந்த வலி மாற!

அந்த வலி சற்றே நீங்க, சடுதியில் மனம் நினைக்க,

 

அகத்தினிலே திருவுருவாய் ஆண்டவர் மலர்ந்தருள,

அவர்மேனி சிலுவையிலே ஆணிகளால் நிறைந்தறைய,

அங்கமெலாம் உதிரமுமாய் அணிவித்த முள்கிரீடமென,

அவயமெலாம் வலித்திருக்க அவைகருதா நகைப்புற்ற

 

அவதார புருஷரவர் அமைதியாய் அகிலமுய்ய

அபயமென்றே இறங்கிவந்த அன்புருவாம் இறைத்தூத!

அவதரித்த நாளிதிலே அங்கமுழுதும் புழுதிபட

அறிந்த என்வழக்க சாஷ்டாங்க நமஸ்காரம்!!

 

அன்புடன் நான் தொழும் அனைத்துக் கடவுளரும்

அவர்வழி வந்த அத்தனை இறைத் தூதரும்

அக்கரையாய் என்னிடம் அளித்திட்ட அறிவொன்றே!

அத்தனை மதங்களும் அழைத்திடும் வீடொன்றே!!

 

அனைத்து வழிகளும் அடைந்திடும் இடமொன்றே!

அகிலம் முழுவதும் அணைத்திடும் வழியொன்றே!

அன்புடன் பேதமின்றி அனைவரும் இதையுணர்ந்தால்

அமைந்திடும் அமைதியிங்கே! அவரவதரித்த நாளிதிலே!!

 

– வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad