\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

தீபாவளிக் கொண்டாட்டம் 2023

அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில், மினியாபோலிஸ் நகரின் புறநகர்ப் பகுதியான மேப்பிள் க்ரோவில் அமைந்துள்ள இந்துக் கோவிலில் தீபாவளித் திருநாள் 2023 அக்டோபர் 15ஆம் திகதி கொண்டாடப்பட்டது.  பல தலைவர்கள், உள்ளூர்ப் பிரமுகர்கள் மற்றும் இந்திய மக்கள் அனைவரும் கலந்து கொண்டு இந்த விழாவை மிகவும் சிறப்பித்தனர்.  கோவிலின் மூத்த அர்ச்சகரான திரு. முரளி பட்டரின் பூஜையுடன், தலைவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைக்க, இந்த விழா தொடங்கப்பட்டது.

கோவில் நிர்வாகத்தினர்  வரவேற்புரை வழங்க, உள்ளூர்ப் பிரமுகரான டாக்டர் டேஷ் (Dr.Dash) அவர்களுக்குச்  சிறப்பு விருது வழங்கப்பட்டது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட கொண்டாட்டம் 3 மணி நேரம் நடைபெற்றது.  சிறுவர் முதல் பெரியவர் வரை பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, இரவு உணவுடன் விழா இனிதே நிறைவு பெற்றது. 

HSMN DIWALI 15OCT2023 - PA0006_620X413
HSMN DIWALI 15OCT2023 - PA0004_620X413
HSMN DIWALI 15OCT2023 - PA0012_620X413
HSMN DIWALI 15OCT2023 - PA0003_620X413
HSMN DIWALI 15OCT2023 - PA0006_620X413 HSMN DIWALI 15OCT2023 - PA0004_620X413 HSMN DIWALI 15OCT2023 - PA0012_620X413 HSMN DIWALI 15OCT2023 - PA0003_620X413

அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில்  சில, இதோ உங்களுக்காக !!

ராஜேஷ் கோவிந்தராஜன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad