செயற்கை நுண்ணறிவு
தனிப்பயனாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) முகவர்கள் இங்கே உள்ளனர். அவர்களுக்காக உலகம் தயாரா?
தன்னாட்சிச் செயற்கை நுண்ணறிவு உதவியாளர்களின் வயது பெரிய தாக்கங்களை ஏற்படுத்தலாம்.
சாம் ஆல்ட்மேன் ஒரு விளக்கக் காட்சியில் சைகை செய்கிறார், கருப்பு பின்னணியில் “GPT-4 Turbo Pricing” என்ற வார்த்தைகள் காட்டப்பட்டுள்ளன. அண்மையில் அவர் OpenAI நிறுவனத்திலிருந்து வெளியேற்றப் பட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு அரட்டை இயலியின் (Chatbot) சமீபத்திய வரலாறு இரண்டு வெவ்வேறு கட்டங்களைக் கொண்டிருப்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.
முதலாவதாக, கடந்த ஆண்டு ChatGPT வெளியீட்டில் தொடங்கி இன்று வரை தொடர்கிறது இந்த அரட்டை இயலிகளின் தாக்கம். கிரேக்க தொன்மவியல், சைவ உணவு வகைகள், பைதான் கணனி எழுத்தமைப்புக்கள் – உலகின் எந்தத் தலைப்புகளைப் பற்றி அறிய வேண்டுமெனிலும், ChatGPT அவை குறித்து, விளக்கமான விடைகளைக் கொடுக்கும். ஒருசில முறை தவறுதலான விடைகளைக் கொடுத்தாலும், பெரும்பாலான முறை மிகத் துல்லியமான பதில்களைத் தருவதனால் இவை பெருமளவு நம்பப்படுகின்றன.
அந்தத் திறன் ஈர்க்கக் கூடியது மற்றும் அடிக்கடி பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இது உண்மையில் இரண்டாவது கட்டத்திற்கான ஒரு முன்னோடியாகும்: உண்மையில் விஷயங்களைச் செய்யக்கூடிய செயற்கை நுண்ணறிவு மிக விரைவில் நமக்காக மின்னஞ்சல்களை அனுப்பலாம், சந்திப்புகளைத் திட்டமிடலாம், உணவக முன்பதிவுகள் மற்றும் விமான டிக்கெட்டுகளைப் பதிவு செய்யலாம், மேலும் “எனது முதலாளியிடம் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை” அல்லது என் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் “கிறிஸ்துமஸ் பரிசுகளை வாங்குதல்” போன்ற சிக்கலான பணிகளைக் கூடக் கையாள முடியும்..”
அந்த கட்டம், இன்னும் தொலைவில் இருந்தாலும், அண்மையில் சற்று நெருக்கமாக வந்தது ChatGPT இன் தயாரிப்பாளரான OpenAI பயனர்கள் இப்போது தங்கள் சொந்த, தனிப்பயனாக்கப்பட்ட அரட்டை இயலிகளைத் தாங்களே உருவாக்கலாம் என்று அறிவித்தது.
நிறுவனம் GPTகள் என்று அழைக்கும் இந்த அரட்டை இயலிகள் வழக்கமான ChatGPT இலிருந்து சில முக்கியமான வழிகளில் வேறுபடுகின்றன. முதலில், அவை குறிப்பிட்ட பணிகளுக்காகத் திட்டமிடப்படுகின்றன. (OpenAI உருவாக்கிய எடுத்துக்காட்டுகளில் படைப்பியலில் தொட்டு எழுத உதவும் பயிற்சியாளர் மற்றும் குடி பானங்கள் தயாரிப்பு உதவி ஆகியவை அடங்கும், இது மது அல்லாத பானங்களை பரிந்துரைக்கும் ஒரு இயலியாகும்) இரண்டாவதாக, நிறுவனத்தின் உள் மனித வள ஆவணங்கள், மனை அல்லது வியாபாரக் கட்டிடங்கள் பட்டியல்களின் தரவுத்தளம் போன்ற தனிப்பட்ட தரவுகளிலிருந்து விவரங்களை இணைக்க முடியும். மூன்றாவதாக, நீங்கள் அவர்களை அனுமதித்தால், இயலிகள் உங்கள் ஆன்லைன் வாழ்க்கையின் பிற பகுதிகளில் – உங்கள் நாள்காட்டி, நீங்கள் செய்ய வேண்டிய பட்டியல், உங்கள் slack கணக்கு – மற்றும் உங்கள் சான்றுகளைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கலாம்.
சில செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் இயலிகளுக்கு அதிக சுயாட்சி வழங்குவது பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று அஞ்சுகிறார்கள். AI பாதுகாப்புக்கான மையம், ஒரு இலாப நோக்கமற்ற ஆராய்ச்சி அமைப்பு. தன்னாட்சி முகவர்களை இந்த ஆண்டு பேரழிவு AI அபாயங்களில் ஒன்றாகப் பட்டியலிட்டது. தீங்கிழைக்கும் செயலிகள் வேண்டுமென்றே ஆபத்தான இலக்குகளுடன் அழிவுக்கான AI களை உருவாக்க முடியும் என்பதும் அவர்களின் எச்சரிக்கைகளில் ஒன்று.
ஆனால் மக்களுக்குப் பயனுள்ள பணிகளைச் செய்யக்கூடிய செயற்கை நுண்ணறிவு உதவியாளர்களால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்தத் தரவுகளில் செயற்கை நுண்ணறிவு இயலிகளைப் பயிற்றுவிக்க நாட்டம் காட்டுகின்றனர். செயற்கை நுண்ணறிவு இயலி அதன் பயனர்களை உண்மையாகப் புரிந்துகொள்ளும் வரை பெருமளவு பயனுள்ளதாக இருக்காது என்ற வாதமும் உள்ளது – அவர்களின் தகவல்தொடர்பு பாணிகள், அவர்களின் விருப்பு வெறுப்புகள், அவர்கள் என்ன பார்க்கிறார்கள் மற்றும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்கிறார்கள் என்று பல வகையான புள்ளி விபரங்களில் அவை பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
சரியாகச் சொல்வதானால் OpenAI இயலிகள் ஆபத்தானவை அல்ல. அண்மையில் சான் பிரான்சிஸ்கோவில் நடந்த நிறுவனத்தின் டெவலப்பர் மாநாட்டின் போது பல GPTகளின் பரீட்சார்த்தக் காட்சி நடத்தப்பட்டது. அவை பெரும்பாலும் குழந்தைகளுக்கான வண்ணமயமான பக்கங்களை உருவாக்குதல் அல்லது கைப் படப்பிடிப்புக் கருவிகளின் விதிகளை விளக்குதல் போன்ற பாதிப்பில்லாத பணிகளை தானியக்கமாக்கியது.
பிரத்தியேக GPTகள் ஆவணங்களைத் தேடுவதையும் பொதுவான பயன்பாடுகளில் செருகுவதையும் தாண்டி, உண்மையில் இன்னும் அதிகம் செய்ய முடியாது. நான் பார்த்த ஒரு பரீட்சார்த்தக் காட்சியில், OpenAI ஊழியர் ஒருவர் தனது கூகுள் நாள்காட்டியில் முரண்பட்ட சந்திப்புகளைச் சரி பார்க்குமாறு இயலியிடம் கேட்டு தனது முதலாளிக்கு slack செய்தியை அனுப்பினார். OpenAIயின் தலைமை நிர்வாகியான சாம் ஆல்ட்மேன், பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் வழங்கிய உரையின் பதிவேற்றிய கோப்பின் அடிப்படையில், ஆர்வமுள்ள நிறுவனர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, “ஆரம்ப வர்த்தக வழிகாட்டி” இயலியை உருவாக்கியது மற்றொறு மேடையில் நடந்தது.
இவை வித்தைகளாகத் தோன்றலாம். ஆனால் அரட்டை இயலிகளைத் தனிப்பயனாக்குதல் மற்றும் நம் சார்பாக நடவடிக்கை எடுக்க அவற்றை அனுமதிப்பது ஆகியவை ஆல்ட்மேன் OpenAIயின் “படிப்படியான மறுசெயல் வரிசைப்படுத்தல்” என்ற உத்தியைப் பிரதிபலிக்கிறது. சிறிய மேம்பாடுகளை செயற்கை நுண்ணறிவு AI க்கு வேகமாக வெளியிடுகிறது. நீண்ட காலத்திற்கு மேல் எடுக்கிறது.
இப்போதைக்கு, OpenAI இன் இயலிகள் எளிமையான, நன்கு வரையறுக்கப்பட்ட பணிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சிக்கலான திட்டமிடல் அல்லது நீண்ட வரிசை செயல்களைக் கையாள முடியாது. இறுதியில், திங்களன்று திரு. ஆல்ட்மேன் கூறுகையில், பயனர்கள் தங்கள் GPTகளை OpenAI இன் மென்பொருள் கடையில் App Store பதிப்பின் மூலம் பொதுமக்களுக்கு வழங்க முடியும் என்று குறிப்பிட்டார். அவர் குறைவான விவரங்களையே வெளியிட்டாலும், நிறுவனம் அதன் வருவாயில் சிலவற்றை பிரபலமான GPT களின் தயாரிப்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
தனிப்பயன் GPTயை உருவாக்குவதை OpenAI மிகவும் எளிதாக்கியுள்ளது, உங்கள் இயலிகள் பற்றிய சில எளிய கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் – அதன் பெயர், அதன் நோக்கம், பயனர்களுக்குப் பதிலளிக்கும் போது என்ன தொனியைப் பயன்படுத்த வேண்டும் போன்ற சில தகவல்களைப் பெற்றுக் கொண்டபின் சில நொடிகளில் இயலி தன்னை உருவாக்குகிறது. பயனர்கள் அதன் வழிமுறைகளைத் திருத்தலாம், பிற பயன்பாடுகளுடன் இணைக்கலாம் அல்லது குறிப்புப் பொருளாகப் பயன்படுத்த விரும்பும் கோப்புகளைப் பதிவேற்றலாம். (இப்போது ஒவ்வொரு கார்ப்பரேட் வழக்கறிஞரின் தலையிலும் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்க: OpenAI அதன் AI மாதிரிகளைப் பயிற்றுவிக்கப் பதிவேற்றப்பட்ட கோப்புகளைப் பயன்படுத்துவதில்லை என்று கூறுகிறது.)
நான் உருவாக்கிய முதல் தனிப்பயன் இயலி சாதாரண உதவிகள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கான ஒரு கருவியாகும். ஒரு சிறு தூக்கம் இல்லாத ஆய்வாளனாக, நான் எப்போதும் சிற் சில விவரங்களை, நுணுக்கங்களை மறந்துவிடுகிறேன் – நாம் கடலைப்பருப்புடன் சிற்றுண்டி சாப்பிடலாமா இல்லையா, சில விடுமுறை நாட்களில் பகல்நேர புத்தக்கடை திறந்திருக்கிறதா அல்லது மூடப்பட்டதா – போன்றவை.
OpenAIயின் GPT படைப்பாளி கருவியில் ஆய்வாளர் கையேட்டைப் Tablet பதிவேற்றினேன். மேலும் சில நொடிகளில், எனது கேள்விகளுக்கான பதில்களை எளிதாகப் பார்க்க நான் பயன்படுத்தக்கூடிய இயலியைப் பெற்றேன். குறிப்பாக, கையேட்டில் உள்ள தகவல்களை மட்டுமே பயன்படுத்தி பதிலளிக்க வேண்டும் என்பதையும், கையேட்டில் குறிப்பிடாத கேள்விகளுக்கான பதிலை உருவாக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்துவதற்காக, அதன் வழிமுறைகளை நான் மாற்றிய பிறகு, அது சிறப்பாகச் செயல்பட்டது.
OpenAI இன் GPT படைப்பாளி கருவியில் ஒரு தனிப்படையான உதவி கையேடு பதிவேற்றப்பட்ட பிறகு, ஒரு சாட்பாட் அதைப் பற்றிய கேள்விகளுக்கான பதில்களை எளிதாகத் தேடும்.
எனது இரண்டாவது இயலியை “ஆச்சியின் அடுக்களை ஆலோசனை” என்று அழைத்துக் கொண்டேன். இது வேறொரு யாழ்ப்பாண கிராமிய சமையல் கைக் குறிப்பு ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டது – யாழ்ப்பாணச் சமையல் ஆர்வமுள்ள எனது ஆச்சி உயிருடன் இருந்த ஆண்டுகளில் சமையல் திட்டமிடல் பற்றி அவர் சேகரித்த ஞானத்துடன் எழுதிய சில பக்க அறிவுரை கைக் குறிப்பு. இது நான் எப்போதாவது ஆலோசித்த ஆவணம், அதை ஒரு அரட்டை இயலிக்குள் வைப்பதன் மூலம், இதை அடிக்கடி பயன்படுத்த நான் தூண்டப்படலாமா என்று யோசித்தேன்.
மேலும் நான் சிறு குறிப்பு கையெழுத்து உரையாடல் பதிவேற்றினேன். ஐந்து நிமிடங்களுக்குள் என்னிடம் அரட்டை இயலி ஒன்று தயார், அது என் ஆச்சியின் சமையல் ஆலோசனையைப் பற்றி பேசவும் மற்றும் அவரது மாதிரியான குரலை பெறவும் முடியவில்லை ஆயினும் ஒத்த தெளிவற்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியும் என எதிர்பார்த்தேன். எனினும், வேடிக்கையாக, அது அடிக்கடி தவறான ஆச்சி-பேச்சில் இருந்து மீண்டும் ChatGPT பாய்லர் பிளேட்டிற்கு பதிலின் நடுவில் நழுவியது. அதாவது, கத்தரிக்காய் கூட்டுக்கறி பற்றிய கேள்விக்கு, “எந்தவொரு குறிப்பிட்ட சமையல் முடிவை எடுப்பதற்கு முன்பும் சொந்த சமையல் இலக்குகள், இடர் சகிப்புத்தன்மை மற்றும், பழப்புளி சேர்த்தல் உருசி எல்லையை மதிப்பீடு செய்வது போன்றவை மிகவும் முக்கியமானவை” என்று பொதுப்படையான பதிலளித்தது நகைப்புக்குரியதாக இருந்தது.
எனது தனிப்பயன் அரட்டை இயலிகள் எதுவும் சரியாக வேலை செய்யவில்லை. மேலும் அவர்களால் செய்ய முடியாதவை ஏராளம். ஆனால் நீங்கள் கண்ணை மூடிக்கொண்டால், தன்னாட்சிச் செயற்கை முகவர்கள் உண்மையில் வேலை செய்தால், அவை மாற்றக்கூடிய வேலைகளின் குறிப்புகளைக் காணலாம்.
ஒரு பெரிய நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறையைக் கற்பனை செய்து பாருங்கள். ஒரு வழக்கமான நாளில்,நிர்வாகிகள், “எங்கள் பல் மருத்துவத்திற்குக் காப்பீடு கிடைக்குமா?” போன்ற பணியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் 20 சதவீத நேரத்தை செலவிடலாம். அல்லது “பெற்றோர் விடுப்புக்கு விண்ணப்பிக்க நான் என்ன படிவங்களை நிரப்ப வேண்டும்?” அந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க அரட்டை இயலிகளை உருவாக்குங்கள், மேலும் அதிக மதிப்புள்ள பணிகளைச் செய்ய அந்த நிர்வாகிகளுக்கு நேரம் கிடைக்கச் செய்யலாம் – அல்லது அவற்றில் 20 சதவீதம் குறைவாகத் தேவைப்படலாம்.
அல்லது செயற்கை நுண்ணறிவு முகவர்களைப் பயிற்றுவிக்கும் ஒரு நிறுவனத்தை கற்பனை செய்து பாருங்கள்.பெரும்பாலான வாடிக்கையாளர் சேவை கோரிக்கைகளுக்கு அவர்களுக்குத் தகவல்களை வழங்குவதன் மூலமும், கடந்தகால வாடிக்கையாளர் சிக்கல்களின் தரவுத்தளத்துடன் அவர்களை இணைப்பதன் மூலமும் எளிதாகப் பதிலளிக்கலாம். அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைத் துறை சுருங்குமா? இது இறுதியில் மனிதர்களால் பணியமர்த்தப்பட்ட ஒரு வாடிக்கையாளர் சேவைத் துறையைப் போல அல்லது அதைவிட உயர்ந்ததாக மாற முடியுமா?
இலட்சக்கணக்கான பணிகளை இந்த இயலிகள் செய்யத் தொடங்கினால், மனிதர்களுக்கான வாய்ப்பு மறைந்து விடும்;அதாவது OpenAIயின் தனிப்பயனாக்கப்பட்ட GPTகள் அழிவின் முன்னோடி என்றெல்லாம் இவ்விடம் கூறவில்லை. ஆனால் செயற்கை நுண்ணறிவு முகவர்களை மேலும் தன்னாட்சி பெறச் செய்வது, நமது தனிப்பட்ட தரவுகளுக்கான அணுகலை அவர்களுக்கு வழங்குவது மற்றும் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பயன்பாட்டிலும் அவற்றை உட்பொதிப்பது ஆகியவை ஆழமான தாக்கங்களைக் கொண்டுள்ளன. விரைவில், கணிப்புகள் சரியாக இருந்தால், AI நம்மை ஆழமான மட்டத்தில் தெரிந்துகொள்ளலாம் – ஒருவேளை, சில சமயங்களில், நமக்குத் தெரிந்ததை விட சிறப்பாக – மற்றும் நமது மேற்பார்வையுடன் அல்லது இல்லாமல் சிக்கலான செயல்களைச் செய்ய முடியும்.
OpenAI சரியாக இருந்தால், நமது சிலிக்கான் அடிப்படையிலான நீட்டிப்புகளை விட AIகள் நமது படைப்பாற்றல் பங்காளிகள் குறைவாக இருக்கும் உலகத்திற்கு நாம் மாறலாம் – செயற்கைக்கோள் மூளைகள் உலகம் முழுவதும் நகர்த்தலாம், தகவல்களைச் சேகரித்து நம் சார்பாக நடவடிக்கை எடுக்கலாம். அந்த உலகத்திற்கு நாம் இன்னும் முழுமையாக தயாராகவில்லை, ஆனால் நம்மைச் சுற்றிய நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்குகையில், நாம் தயாராகத் தொடங்குவது நல்லது என்றே தோன்றுகிறது.
– யோகி