\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இனி ஒரு விதி செய்வோம்

இங்கே விதிகள்

பலவகை உண்டே

இவைகளை உடைத்திட 

இங்கேயே யாருண்டு?

 

தேவதூதனைத் தேடுகிறோம்

அவதாரங்களுக்காக 

அங்கலாய்கிறோம்

 

மனிதம் இங்கே 

தலை தூக்கிட

 

மானிட சமுதாயம்

மாறிடவே வழிவகுப்போம்

 

சமுதாய நீதியைச்

சமைத்திட சாதித்திடுவோம்

 

ஆண் பெண் 

இரண்டே சாதி

 

எல்லாமும் எல்லோருக்குமே

கிடைப்பதே சமூகநீதி

 

அன்பின் உலகம் 

ஆர்வமாய் படைத்திட்டே

 

அகிலம் சிறக்க

பாடு படுவோம்

 

உயர்வு தாழ்வு

இல்லாத சமுதாயம்

 

சமைத்திடவே இன்றே

நம் கரங்கள் 

இணையட்டுமே

 

-கவிமணி-

இரஜகை நிலவன்

மும்பை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad