ஜப்பானின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் படைப்பாளிகளை வஞ்சிக்கிறது.
மின்னணுவியல் தொழில்நுட்பம் உச்சத்தைத் தொட்டு வணிகரீதியாக தேக்கமடைந்தபோது, ஜப்பானின் ஆக்கத்திறன் மிகுந்த படைப்பாளிகள் அந்நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரத்தை உலகெங்கும் பிரபலப்படுத்தினர். முக்கியமாக ‘மங்கா’ (Manga) மற்றும் ‘அனிம்’ (Anime) படைப்புகள் மூலம் உலக இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தனர். ஸ்டுடியோ கிப்லி (Studio Ghibli) முதல் போகிமான் (Pokemon) வரை பல படக்கதை (comics) ‘அனிம்’ வீடியோக்கள் மூலம் ஜப்பானிய வாழ்வியலை படம் பிடித்துக் காட்டிய கலைஞர்களின் நிலை இன்று கேள்விக்குறியாகியுள்ளது. காரணம் செயற்கை நுண்ணறிவு.
‘மங்கி லஃப்பி’ (Monkey Luffy), எல்ரிக் (Edward Elric), நருடோ (Naruto), ஜோஹன்(Johan), கோகு (Goku (DragonBall)), ‘உசாகி’ (Usagi) போன்ற எண்ணற்ற ‘அனிம்’ கதாபாத்திரங்கள் மூலம் இளைஞர்கள் மனதில் நேர்மறையான எண்ணங்களை, வியத்தகு குணாதிசயங்களை பதித்து வந்துள்ளனர் ஜப்பானிய படைப்பாளிகள். இப்பாத்திரங்களின் புத்திசாலித்தனம், சோர்வுறாத உடலுழைப்பு எனப் பல அம்சங்கள் ஜப்பானின் வரலாற்றை, செல்வாக்கைப் பறைசாற்றியது. ஆனால் இப்போது, செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளின் தோற்றம், இந்தக் கலை வடிவங்களை எவரும் எளிதில் படைக்கமுடியுமென்ற நிலை உருவாகிவருவதால், இத்தனை காலமாக இந்த கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுத்து இயக்கி வந்த படைப்பாளிகளின் தொழில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இக்கலையின் தொன்மத்தைப் பாதுகாத்து, நாட்டின் கலாச்சாரத்தை இயல்பான வழியில் எடுத்துரைக்கும் படைப்புகளைப் பெருமைபடுத்தும் வகையில், அரசாங்கம் செயற்கை நுண்ணறிவு சட்டங்களைப் புதுப்பிக்க வேண்டுமெனும் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.
செயற்கை நுண்ணறிவு (AI) சகாப்தத்தில், பூர்வீகக் கலைகளின் எதிர்காலத்திற்கான இந்தப் போராட்டம் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. தொழில்நுட்ப நிறுவனங்கள் சேகரிக்கும் தரவுகள், அவர்களது வர்த்தக பசிக்கு தீனி போட்டு வருவதை அங்குள்ள சட்டங்கள் கட்டுப்படுத்துவதில்லை. கலைப் பசியுடன் உலகை ஊக்கப்படுத்திய மனித கலைஞர்களைப் பாதுகாப்பதை ஜப்பானிய சட்டங்கள் பாதுகாக்கவில்லை என்ற அச்சம் எழுகிறது.
தற்போது, ஜப்பானின் அறிவுசார் சொத்துரிமை சட்டத்திற்கு 2018 இல் தெளிவற்ற புதுப்பிப்பு, அனுமதியின்றி செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயிற்றுவிப்பதற்கு பதிப்புரிமை பெற்ற பொருட்களைப் பரவலாகப் பயன்படுத்த அனுமதிப்பதாக விளக்கப்பட்டுள்ளது. சில தொழில் பார்வையாளர்கள் இந்த திறந்த ஆயுத அணுகுமுறை தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்ப்பதற்காக உதவுகிறது என்று கூறுகிறார்கள்.
கலாச்சார விவகாரங்களுக்கான ஏஜென்சிக்கான துணைக்குழு, செயற்கை நுண்ணறிவு பதிப்புரிமைச் சிக்கல்களை மதிப்பாய்வு செய்வதாகவும், கிட்டத்தட்ட 25,000 பொதுக் கருத்துகளைப் பெறுவதாகவும் கூறியது. கலைஞர்களுக்கு ஆதரவாகத் தோன்றும், சட்டப்பூர்வமாகப் பிணைக்கப்படாத தற்போதைய பதிப்புரிமைச் சட்டத்தைக் குறிக்கும் மேலோட்டமான வரைவை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இக்குழு வெளியிட்டது. இதற்கிடையில், அதே அமைப்பு, படைப்பாளர்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகளை வழங்கவும், குறிப்பிட்ட சட்டங்களை நன்கு புரிந்துகொள்ளும் விதமாகவும் கூட்டங்களை நடத்துகிறது. தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பயிற்றுவிப்பதற்கான உள்ளடக்கத்திற்காக இணையத்தை விழுங்கிக்கொண்டிருக்கும்போது, அரசாங்கம் அனிம் கலைஞர்களைப் பாதுகாக்க நத்தை வேகத்தில் நகர்வது நல்லதல்ல.
– யோகி