நவராத்திரி நிகழ்வுகள்
“சிதக்னி குண்ட ஸம்பூதா தேவ கார்ய சமுத்தியதா” என்ற வரிகளுடன் தொடங்கும் லலிதா சஹஸ்ரநாமத்தை முக்கிய சாரமாக கொண்டாடும் பண்டிகை சரத் நவராத்திரி. மனதின் உள் அகந்தை சொரூபத்தில் இருக்கும் மகிஷாசுரன் என்ற அரக்கனை அழிக்க அம்பிகை செய்யும் ஒரு யுத்தமே இந்த நவராத்திரி பண்டிகை. பத்து நாட்களின் முடிவில் சித்தத்தில் இருந்து எழும்பிய அம்பிகை மகிஷாசுரனை அழித்து பின் ராஜராஜேஸ்வரி சொரூபத்தில் மகிழ்வுடன் கொலுவேறும் நாளே விஜய தசமி என்று கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த பண்டிகையின் பொழுது, பத்து நாட்கள் இல்லங்களில் கொலு வைத்து, தேவியின் பாடல்களை பாடி கொண்டாடி அனைவரும் மகிழ்வர். இந்த ஆண்டும் மினசோட்டாவில் இல்லங்களில் அவ்வாறே கொண்டாட்டங்கள் நிறைவாக அரங்கேறியது.
- லட்சுமி சுப்பு
Tags: dasara, Golu, navarathiri