மினசோட்டா மலையாளி சங்கத்தின் கிறிஸ்துமஸ் விழா 2024
மினசோட்டா மலையாளி அமைப்பு (Minnesota Malayalee Association) ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றது. இந்தாண்டு டிசம்பர் 7ஆம் தேதி அன்று மினசோட்டா, புளூமிங்டன் நகரில் அமைந்துள்ள ஆல்சன் நடுநிலை பள்ளியில் (Olson Middle School, Bloomington, MN) கிறிஸ்துமஸ் விழாவை நடத்தியிருந்தார்கள் அவர்கள். மினசோட்டாவில் உள்ள கேரள மக்களும், இன்னும் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
மதிய உணவுடன் ஆரம்பித்த விழாவில், பல விதமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சுமார் மூன்று மணி நேரம் நாடகங்கள் மற்றும் பல்வேறு நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. சங்கக் குழுக்களில் உள்ளவர்களும், உறுப்பினர்களும் பங்கேற்றனர். வந்திருந்த அனைவருக்கும் மாலை நேரச் சிற்றுண்டி வழங்கப்பட்டு, விழா இனிதாக முடிவு பெற்றது.
அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில, இதோ உங்களுக்காக !!
ராஜேஷ் கோவிந்தராஜ்