தரங்கினி நடனப் பள்ளியின் சமூக பணி
கற்கும் காலத்திலிருந்தே சிறந்த அர்ப்பணிப்புள்ள மாணவியாகவும், ஆசிரியப் பணியை உணர்ச்சி பூர்வமாகவும், ஆக்கப் பூர்வமாகவும் செய்து வரும் அமிர்தா சிறந்த நடன கலைஞர் என்பதில் ஐயமில்லை. தாம் பெற்ற நடனக் கலையை, வருங்கால இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில், அவரின் குருவாகிய உயர்திரு. கிட்டு ஐயாவின் ஆசியுடன் 2005 ஆம் ஆண்டில் பெங்களூரில் தொடங்கப்பட்டது தான் “ தரங்கினி நடனப் பள்ளி “(“Taraangini school of dance”) கடந்த 2016 ஆம் ஆண்டு மினசோட்டா மாகாணத்தில் புதிய சகாப்தம் தொடங்கியது என்றால் அது மிகையாகாது !
எந்தவொரு கலையையும் கற்பதை போலவே, பரதநாட்டியம் கற்பது மாணவர்களின் உடல் மற்றும் மன நலனில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது அழகியலை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், கல்வியில் ஒழுக்கத்தையும் சேர்க்கிறது மற்றும் சமூக, ஆன்மீக மற்றும் சமூக மதிப்புகளை உயர்த்த வழிவகுக்கிறது.
சமூகத்திற்குத் திருப்பித் தருவது என்பது எங்கள் பள்ளி நம் குழந்தைகளுக்குக் கற்பிக்கும் முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும், “பகிர்ந்து வாழ்வதே சிறந்தது “ என்ற உயரிய கொள்கையைக் கற்றுக்கொள்ள உதவுகிறது.
தரங்கினி அவர்களை அவ்வாறு செய்ய ஊக்குவிக்கும் சில வழிகள் பின்வருமாறு:
- கோயில்களில் நடன நிகழ்ச்சி நடத்துவதென் மூலம் கோயிலின் முக்கிய நிகழ்வுகளுக்கு பணம் திரட்ட உதவுகிறது.
- நடன நிகழ்ச்சிகளை, IAM, TEAM, TCTP, MNTS ஆகியவற்றில் நடத்துவதன் மூலம்,அவர்களின் சங்கங்களை நடத்துவதற்கு நிதி பெற உதவுகிறது.
- மேலும் தொண்டு நிறுவனங்களுக்கு தேவைப்படும் நிதியை திரட்டுவதற்கு உதவுகிறது.
2023 ஆம் ஆண்டு தொண்டு நிறுவனங்களுக்கான நிதி திரட்டும் திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். முதல் நிதி திரட்டல் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கான அமைப்பிற்காக இருந்தது, இது அனைவராலும் மிகவும் பாராட்டப்பட்டது .
எங்கள் மாணவிகள் பாவனா, ஜெய்ஸ்ரீ மற்றும் சாயிஷா, அவர்களின் பெற்றோர், தரங்கிணி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சமூகத்தின் ஆதரவுடன், ஏப்ரல் 12, 2025 அன்று (OAK POINT SCHOOL – PTO)க்காக நிதி திரட்டும் நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.
நடன நிகழ்வு தொடங்குவதற்கு முன்பே நிதி திரட்டும் இலக்கை அவர்களால் அடைய முடிந்தது. நம் நோக்கம் உயர்வாக உள்ளபோது இலக்கு எளிதாகும். நிகழ்வின் முடிவில் எங்களால் நிறைய சேகரிக்க முடிந்தது. எங்களின் உயர்ந்த நோக்கம் மற்றும் ஆர்வத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.
மகிழ்ச்சியுடன் நடனமாடினேன், அன்புடன் நன்கொடை அளித்தேன், மேலும் ஒரு மாலைப் பொழுதை நன்மைக்காக அர்ப்பணித்தேன் என்பதில் அகம் மிக மகிழ்ந்தோம் !
சர்வேஜந சுகினோபவந்து !!
வாழ்க வளமுடன் ! வாழ்க நலமுடன் !