உலகச் செம்மொழி – அத்தியாயம் 6
அத்தியாயம் 5 செல்ல இங்கே சொடுக்கவும்
வணக்கம்!
போன அத்தியாயத்த படிச்ச என் நண்பர் ஒருத்தர் நீங்க பல நாடுகளின் பெயர்கள் தமிழ் மூலத்தை கொண்டு இருப்பதை எழுதியிருந்தீங்க .
ஆனா தமிழர்களின் பெரும் நிலப்பரப்பான தமிழகம் இணைந்திருக்கும் இந்தியாவின் பெயர் எந்த மொழி மூலத்திலிருந்து வந்ததுன்னு சொல்ல முடியுமானு கேட்டிருந்தாங்க. இந்தியா என்ற சொல்லுக்கு சிந்து என்ற தமிழ்ச் சொல்தான் மூலச் சொல்னு சொல்லுறாங்க.
சிந்து என்ற அழைத்தற்கு பல்வேறு காரணங்கள் சொல்லுறாங்க.
சிமை என்ற சொல் பனியை குறிக்கும் மற்றுமொறு செந்தமிழ் சொல். இந்த சிமை உருகி தண்ணீராக சிந்தியதால் உருவான நதி சிந்து நதி.
சிந்து நதியின் கிழக்கு கரைக்கு பின் பக்கம் இருந்த பெரும் நிலப்பரப்பு சிந்தி என அழைக்கப்பட்டு பின் அது இந்தியா என சிந்து நதியின் மேற்கு கரையின் அப்பாலுள்ள நாட்டு மக்களால் அழைக்கப்பட்டது.
”சிமை சிந்தியதால் உருவான நதி சிந்து நதி”
சிந்து-இந்து-இந்தியா
சிந்து என்ற தமிழ்ச் சொல்லிற்கு கொடி அல்லது துணி என்ற
பொருளுண்டு. சுமேரியாவிற்கும் பழந்தமிழகத்திற்கும் கி.மு. 3000க்கு
முன்பே வணிகத்தொடர்பு இருந்துள்ளது. பாபிலோனில்
கண்டெடுக்கப்பட்ட பழங்கால இறக்குமதி பட்டியலில் இரண்டு துணிவகைகளை குறிப்பிடுகின்றனர். அதில் ஒன்றுதான் “சிந்து”. இன்றும் கன்னடத்திலும், துளுவிலும் சிந்து என்பது துணியை குறிக்கப் பயன்படுகின்றது.
கொடியையும் சிந்து நதியையும் சேர்த்துப் பேசினதுக்கப்புறம் எகிப்திய நாகரிகத்திற்கும் சிந்து சமவெளி கொடிக்கும் உள்ள தொடர்பைச் சொல்லாமல் போக எனக்கு மனசு இல்லை.
சிந்து சமவெளி முத்திரையிலும் எகிப்தில் நர மேரு(நரமேர்) என்பவருடைய முத்திரையிலும் ஒரே மாதிரியான ஊர்வளக்காட்சி பதியப்பட்டுள்ளது. நரமேருனா தமிழ்ல மனித மலைனு அர்த்தம். பெரிய அல்லது உயர்ந்த பொருட்களையும் மனிதர்களையும் நாம “மேருவை ஒத்த” என்று குறிப்பிடும் மரபு இன்றும் உள்ளது. இந்த மன்னனுக்கு மனு என்று இன்னும் ஒரு பெயர் இருக்கு. நம்ம சோழ வம்சத்திலேயும் மனு நீதிச் சோழன்னு ஒரு மன்னன் இருந்தாருன்னு உங்களுக்கு தெரிஞ்சதுதான் . இந்த ஊர்வளக் காட்சியின் தமிழின் தொடர்பை வேற ஒரு சமயத்தில நாம பாக்கலாம்.
சிந்து சமவெளி எழுத்துக்கள் தமிழ்தான் என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்குங்க.அது இன்னும் முறையாக ஒத்துக்கொள்ளப்படவில்லை. அந்த எழுத்துக்கள் படிக்கிற முறையை இன்னுமொரு அத்தியாயத்தில சொல்றேன்.
இந்த சிந்தி என்ற சொல் சிந்தூரம் (யானை) என்ற பொருளிலும் அழைக்கப்பட்டிருக்கலாம் இந்த நிலப்பரப்பில் தான் பெரும் யானைப் படைகள் இருந்திருக்கின்றன.அவை எப்போதுமே எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்திருக்கின்றன.
சிந்துமணி என்ற சொல் முற்றிய தானியங்களைக் குறிக்கும். இந்த பகுதியின் வளமை காரணமாக பல்வேறு படையெடுப்புகள் , ஆக்ரமிப்புகள் மற்றும் குடியேற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
சிந்து என்ற சொல்லிற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
-சத்யா-